இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள்மீது நடத்தும் தாக்குதல்களைக் கண்டித்து தமிழகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்திற்குத் தமிழக அரசு அழைப்பு

ரொம்ப மகிழ்ச்சி தலைவரே, விரைவிலே மீட்டெடுங்கள். பயம் வேண்டாம், நாங்கள் இருக்கிறோம் உங்களோடு எப்போதும். தமிழனத்தை காப்பாற்ற வாருங்கள். வென்றெடுங்கள். தமிழ் உலகம் என்று உமக்கு கடமை பட்டிருக்கும். இன்றும் எம்ஜிஆரை நினைவு கொள்வது அவரது தமிழ் மக்களுக்கு உதவியதே அவர்களின் அடிமைதனம் க்ளைய பாடுபட்டவர் அவர் இருந்திருந்தால் இந்நேரம் தமிழினம் விடுதலை பெற்றிருக்கும் இப்போது உம்மை விட்டால் எமக்கு யாருமில்லை தலைவா நீரும் தமிழினத்தை கைவிடாதீர்.

கச்சதீவை மீட்பதற்கான காலம் வந்துவிட்டதாகத் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அறிவித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக உயர் நிலை உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
இதேவேளை, இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல்களால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுகின்றமையைக் கண்டித்து நாளை மறுநாள் சனிக்கிழமையன்று தமிழ்நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் தமிழக மீனவர்கள் இலங்கையின் சிங்கள இராணுவத்தினரால் கொல்லப்படுவதை நிறுத்துவதற்கு இந்திய மத்திய அரசாங்கம் முனையவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முதலமைச்சரின் இந்த நடவடிக்கையை அடுத்து, இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல்களைக் கண்டித்து, கடந்த 15 நாட்களாக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த இராமநாதபுர மீனவர்கள் நாளை முதல் தமது பணிகளுக்குச் செல்லத் தீர்மானித்துள்ளனர்.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails