4 தீர்மானங்கள், ராசி பக்சி விழி பிதுங்கி இருக்கிறார், சபாஸ் தி.மு.க

தீர்மானம் 1:
இந்திய அரசு உடனடியாக இலங்கை அரசின் தூதரை அழைத்து, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையின ரால் கொல்லப்படுவதையும், தாக்கப்படுவதையும் கண்டிப் பான முறையில் குறிப்பிட்டு, தனது கண்டனத்தையும், வருத் தத்தையும் தெரிவிக்கவேண் டும். இலங்கை அரசு இது போன்ற செயல்களை எதிர் காலத்தில் தொடராமல் இருப் பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று இந்த உயர்நிலை செயல் திட்டக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2:
இந்தியக் கடற்படையும், கடலோரப் பாதுகாப்புப் படையும் இணைந்து பன் னாட்டு கடல் எல்லைப் பகுதி களில் கண்காணிப்பினைத் தீவிரப்படுத்தி, தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் பகுதிகளுக்குள் இலங்கைக் கடற்படை நுழை வதைத் தடுத்து உரிய, பாது காப்பான நடவடிக்கைகளைக் கைக்கொண்டு, தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்கு தல்களையும், உடைமை சேதங் களையும் தடுத்து நிறுத்தவேண்டும் என்று இந்த உயர்நிலை செயல் திட்டக் குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 3:
நடைபெற இருக்கின்ற சார்க் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ளும் போது, இந்தியாவின் கவலையையும், வருத்தத்தையும் இலங்கை அதிபரிடம் தெரி வித்து இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்கப் படவேண்டும் என்று வலியுறுத்தி, இயல்பான நிலையையும், அமைதியான சூழலையும் உறுதி செய்யவேண்டும் என்று இந்த உயர்நிலை செயல் திட்டக் குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 4:
மேற்கண்ட தீர்மானங்களை வலியுறுத்துவதற்காகவும், மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காகவும், வருகிற 19 ஆம் தேதி (நாளை) சனிக்கிழமையன்று காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரை மாநில முழுவதும் கடற்கரையோர நகரங்களிலும், ஊர்களிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் ஒரு நாள் உண்ணாநோன்பு இருப்ப தென்று முடிவெடுக்கப்படு கிறது. -இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Posted in |

1 comments:

  1. Mathuvathanan Mounasamy / cowboymathu Says:

    ஆகா இப்படியெல்லாம் தீர்மானிக்கிறாங்களா, கேக்க நல்லாருக்கு. நடைமுறைப் படுத்தினா இன்னும் நல்லாருக்கும்.


    அது சரிங்க, யாருங்க அது ராசி பக்சி? :-))) ஓ..ராஜபக்சவா.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails