மட்டக்களப்பு இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பாரிய மனிதப் புதைகுழியில் 16 உடலங்களுக்குரிய 32 மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன.

ஹலோ இந்தியா, இதற்குதான் நீங்கள் ஆயுதம் அனுப்புகிறீர்களா. இன்னும் எத்தனை குவியல்கலை நீங்கள் பார்க்க வேண்டும். செஞ்சோலை சிறார்களை கொன்ற போதே இந்தியா இலங்கையை கண்டிக்காததால் வந்த வினை.

மட்டக்களப்பிலிருந்து 6 கிலோ மீற்றார் தூரத்தில் உள்ள பாலமீன்மடு என்ற கடற்கரைக் கிராமத்தில் பாரிய மனிதப் புதைகுழியொன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மூதூர்ப் பிரதேசத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்த அகதிகள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் பாலமீன்மடுக் கிராமத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

குறித்த கிராம மக்கள் குடிநீர் கிணறு ஒன்றைத் தோண்டும் பணிகளை ஆரம்பித்த போது பாரியளவிலான எலும்புக் கூடுகளை அவர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

சுமார் ஐந்து அடி ஆழத்தில் 16 பேரது உடலங்களுக்குரிய 32 மனித எலும்புகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

கிராம மக்கள் குறித்த சம்பவத்தைக் கிராம சேவகருக்கு அறிவித்துள்ளனர். பின்னர் கிராம சேவகர் அரச அதிபருக்கு அறிவித்ததாகவும் அரச அதிபர் மாவட்ட நீதவான் இராம கமலனுக்கு அறிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னர் காவல்துறையினர் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி ரகுமான் மற்றும் நீதவான் இராம கமலன் ஆகியோர் புதைகுழியிருந்த இடத்தைப் பார்வையிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இந்த மனித புதைகுழி காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 3 வருடங்களுக்கு முன்னர் இந்த உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

கண்டு பிடிக்கப்பட்ட எலும்புக் கூடுகளின் கைகள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் புதைகுழியில் இதுவரை 4 தோட்டாக்களும் சிதைந்த ஆடைகளும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இந்த எலும்புக்கூடுகள் ஆண்களுடையனவா அல்லது பெண்களுடையனவா அல்லது சிறுவர்களுடையனவா என்பதைக் கண்டுகொள்ள முடியாத காரணத்தினால் மீட்கப்பட்ட எலும்புகளைக் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அத்துடன் மீட்கப்பட்ட சிதைந்த ஆடைகள்; தோட்டாக்கள் என்பவற்றை பகுப்பாய்வு செய்வதற்காகப் பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails