நாராயணா, உன் கண்களுக்கு இது தெரியவில்லையா, இன்னுமா தமிழனை கொல்ல ஆயுதம் கொடுக்கிறாய்

இந்திய ஆயுதம் தமிழனை கொல்லவே. மலையாளியின் பார்வையில் தமிழன் ஒரு இளிச்சவாயானாகவே, கோமாளியாகவே பார்க்கப்படுகிறான்

வேதாரண்யம் அருகே கடலில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் இருவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத் துறையைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது40). இவருக்கு சொந்தமான படகில், மூர்த்தியின் மகன் முரளி (வயது21), நாராயணன் (வயது24), வாசகன் (வயது23) ஆகியோர் நேற்றிரவு மீன்பிடிக்கச் சென்றனர்.
கோடியக்கரை கடற்பகுதிக்கு அப்பால் நள்ளிரவில் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அந்த பக்கமாக வந்த இலங்கை கடற்படையினர், திடீரென

இந்த படகின் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இலங்கை கடற்படையினரின் சரமாரி துப்பாக்கிச்சூட்டில், படகிலிருந்த நாராயணன், வாசகன் ஆகிய இரண்டு மீனவர்கள் குண்டடி பட்டு அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். முரளிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

காயமடைந்த முரளி உடனடியாக தனது தந்தைக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். உடனே ஆறுகாட்டுத்துறையிலிருந்து 3 எந்திரப்படகுகளில் சுமார் 15 பேர் கடலுக்கு சென்று படகை தேடினார்கள். கோடியக்கரைக்கு அப்பால் முரளி இருந்த படகை இன்று காலை மீனவர்கள் கண்டு பிடித்தனர்.

உடனே அவர்கள் படகை கரைக்கு திருப்பி கொண்டு வந்தனர். படுகாயமடைந்த முரளி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து நாகை மாவட்டப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து ஆறுகாட்டுத்துறை பஞ்சாயத்து தலைவர் கார்த்திகேயன் கூறியதாவது:

எங்கள் ஊரைச் சேர்ந்த முரளி, நாராயணன், வாசகன் ஆகிய மூன்று பேர் மீன்பிடிக்க சென்று, இலங்கை கடல் எல்லை பகுதிக்கு இந்தப்புறம் மீன்பிடித்து கொண்டிருந்த போது, இலங்கை கடற்படை படகு அத்துமீறி நமது கடல் பகுதிக்குள் வந்து துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறது. இதில் வாசகன், நாராயணன் ஆகிய இரண்டு பேர் இறந்தனர். முரளி மட்டும் படுகாயம் அடைந்து எங்களுக்கு தகவல் கொடுத்தார். சர்வதேச கடல் எல்லைக்கு அப்பால் படகு சென்றிருந்தால் செல்போனில் டவர் கிடைக்காது. அவர்கள் நமது கடல் பகுதியில் மீன்பிடித்ததால் தான் செல்போன் டவர் கிடைத்து எங்களுக்கு தகவல் சொல்ல முடிந்தது. இது போன்று இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் மீனவர்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மீனவர்கள் இலங்கை கடற் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட இந்த சம்பவம், நாகை மாவட்டத்தில் மீனவர்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Posted in |

3 comments:

  1. ஜோசப் பால்ராஜ் Says:

    தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதே சட்ட விரோதம் என்று அறிவிக்கச்சொல்லுங்கள். கடலில் இறங்கினால் நாங்களே சுடுவோம் என அறிவியுங்கள். செத்தாலும் இந்தியப் படையினரால் சுடப்பட்டு இறந்தோம் என்ற பெருமையாவது கிடைக்கட்டும் எங்கள் இந்திய மீனவர்களுக்கு.
    ஏன் நம் நாட்டுக்கு கீழே கையகலமே உள்ள ஒரு நாட்டின் கடற்படையால் சுடப்பட்டு சாகணும்?
    தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்தே பிரித்துவிட்டார்களா என்ன ? த‌மிழ‌ன் செத்தால் இந்தியா க‌ண்டுகொள்ளாதா?

    இங்கு சாகும் ந‌ம்ம‌வ‌ர்க‌ளை ப‌ற்றி க‌வ‌லைப்ப‌ட‌ ந‌ம‌து முத‌ல்வ‌ருக்கு எங்கே நேர‌ம் இருக்கும்? அவ‌ருக்கு தான் ப‌ல‌ க‌வ‌லைக‌ள் இருக்குமே? இதை கேட்டால் அவ‌ர் என்ன‌ துப்பாக்கியை தூக்கிக்கொண்டா போய் ச‌ண்டை போட‌ முடியும் என்று அண்ண‌ண் ல‌க்கிலுக், அபி அப்பா போன்றோர் கேட்பார்க‌ள்.

  2. ஜோசப் பால்ராஜ் Says:

    ஈழத்தமிழர்களை மட்டுமல்ல, தமிழகத்தின் தமிழர்களை இலங்கைப்படை கொல்வதில் இருந்து காப்பாற்றமுடியவில்லை என்றால் இவர்களால் நமக்கு என்ன பயன்?
    இனியும் எங்கள் கைகள் பூப்பறித்துக்கொண்டு இருக்காது என்று சட்டசபையில் அறிவித்த முதல்வர் இப்போது என்ன செய்யப்போகின்றார்? கடிதம் எழுதுவதைத் தவிர ?

    இத்தனை தமிழர்களை கொன்ற சிங்கள கடற்படையைப் பார்த்து இதுவரை ஒரு எச்சரிக்கை குண்டையாவது சுட்டிருக்கின்றதா பிராந்திய வல்லரசு நாடான இந்தியாவின் கடற்படை?

  3. Anonymous Says:

    தமிழனை கொன்றே பேர் வாங்கும் இவருக்கு காலம்தான் பதில் சொல்லும்

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails