கலைஞரின் மவுனம் மட்டுமல்ல உங்களின் மவுனம் கூட ரொம்ப ஆச்சரியமாக உள்ளது

வலைபதிவர்களே,உங்கள் பதிவுகள் எல்லாம் பார்க்கறப்ப ரொம்ப ஆச்சரியமாக உள்ளது. இவ்வளவு திறமையாக எழுதுகிறிர்கள். அந்த அறிவவை கொடுத்த தமிழுக்கு தமிழ் மக்களுக்கு ஏதாவது ஒரு நல்லது பண்ணுங்கள். கலைஞரின் மவுனம் மட்டுமல்ல உங்களின் மவுனம் கூட ரொம்ப ஆச்சரியமாக உள்ளது. தமிழனை அங்கு கொல்லபடுகிறான் நீங்களோ அதை பற்றி கொஞ்சம்குட கவலை படாமல் மத்தவை பற்றி எல்லாம் அழகாக எழுதுகிறிர்கள்.ஆனால் தமிழனுக்கு குரல் கொடுக்க மாட்டேன்கிறிர்கள். எங்கே இருந்து வருகிறது உங்கள் சுயநலம். நீ மட்டும் இங்கே சுகமாக வாழ உன் இனம் அங்கு அழிகிறது. பெற்ற தாய், தந்தையே மாற்றானாக நினைப்பவன் நீ. உன்னிட என்ன எதிர்பார்ப்பது. சுயநலவாதிகல் இந்த வலைபதிவர்கள். பயந்தாங்கொள்ளிகல். விழித்திடு நண்பா. உன் சுயநலத்தை மூட்டை கட்டு. குரல் கொடு தமிழனுக்காக.

ஒரு நாய் செத்தால், நீ பார்பதில்லையா அதோட சேர்ந்த அனைத்து நாய்களும் ரொம்ப சோகமாயிடும். ஐந்தறிவு படைத்த அவைகளுக்கே அப்படினா நீ எப்படி இருக்க வேண்டும்.

பக்கத்து வீடு தீ பிடிக்க அதை பார்த்து பார்க்கமால் போகும் உன் பொறுப்பு, கடமை புல்லரிக்க வைக்கிறது. எவன் எப்படி போனால் என்ன,எனக்கு சோறு கிடைச்சா போதும் என்று நினைக்கும் தமிழ் சிங்கங்களே நீவிர் வாழ்க. உன் குலம் கோத்ரம் எல்லாம் வாழ்க.

Posted in |

7 comments:

  1. ஜோசப் பால்ராஜ் Says:

    உங்களின் கோபம் நியாயமானது தான். ஆனால் அவசரப்பட்டு எழுதியுள்ளீர்கள். உண்மையானத் தமிழன் எவனும் ஈழத்தமிழர்களின் துயரம் கண்டு வருந்தாமல் இல்லை. அப்படி வருந்தும் யாவரும் அதைத் தம் பதிவுகளில் கட்டாயம் எழுத வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. ஈழத்தமிழர்கள் குறித்து பதிவு எழுதினால்தான் உண்மைத்தமிழன் என்றும், வீரத் தமிழன் என்றும் நீங்கள் அளவுகோல் வைத்திருப்பது வேதனைக்குறியது.
    நீங்கள் தயவுசெய்து இதுபோன்ற பதிவுகளால், ஈழத்தமிழரையும், அவர்களின் வாழ்வுரிமைப் போராட்டங்களையும் ஆதரிக்கும் உண்மைத் தமிழர்களின் மணங்களை புண்படுத்தாதீர்கள்.

  2. Anonymous Says:

    I agree with you, Now people are more selfish than ever before.

  3. சிபி அப்பா Says:

    திருநாள் வரும்
    ஒரு நாள் வரும்.
    தமிழர்க்கோர்
    தனி நாடெனும்
    திருநாள் வரும்
    ஒரு நாள் வரும்.

  4. Anonymous Says:

    நண்பரே!
    கோபம் கண்களை மூட வேண்டாம்.
    உணர்வுள்ளவர்கள் அவர்களால் முடிந்ததைச் செய்து வருகின்றனர்.அவர்களால் முடிந்தது அனைத்தும் செய்கிறார்களா?கட்டாயம் இல்லை.அதை வற்புறுத்திச் செய்துவிடச் சொல்ல முடியாது.
    நமது கடமை செய்திகளை உடனுக்குடன் தர வேண்டும்.முழுமையாகத் தர வேண்டும்.அத்ற்கு அவர்கள் பத்திரிக்கைகளுக்குக் க்கடிதங்கள் எழுதுங்கள்,இணையம் எளிதாக இருப்பதால் முக்கிய உலகத் தலைவர்கள் பிசப் டூட்டூ,ஜிம்மி கார்ட்டர்,ஐரோப்பியத்தலைவர்கள் போன்றோரின் இணைய முகவ்ரிகளை அனைவர்க்கும் தர வேண்டும்,பெட்டிசன்.காம் போல் எழுதி அவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.

    ஆக்க பூர்வமாக நாம் செய்யக்கூடிய அனைத்தையும் நாம் செய்கிறோமா?அதுதான் இன்றைய தேவை,உலகெங்கும்.
    தொடரட்டும் ஆக்க பூர்வமானப் பணிகள்.

  5. தமிழன் Says:

    நண்பர் கூறியதில் என்ன தவறு இருக்கிறது, எத்தனை பதிவுகள் "வீக் எண்டு ஜொள்ளு" அது இது என்று அதற்கு நாற்பது மறுமொழிகள், என்ன ஆச்சு நமக்கு குறைந்த பட்சம் நம் இனம் அங்கு அழிக்கபடுகிறது அதை உணர்ந்து ஒரு பதிவு நம் இனத்திற்கு ஆதரவாக போடகூடாத, தமிழர் அனைவரும் ஈழம் அமைவதை விரும்புகிறான் என்று நம் இந்திய அரசாங்கம் உணர வலைப்பதிவை ஈழ ஆதரவால் நிரப்புங்கள். இது ஏன் பணிவான வேண்டுகோள்.

  6. தமிழன் Says:

  7. தமிழன் Says:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails