தமிழீழம் விரைவிலே சார்க் அமைப்பில் சேர தமிழக மக்களின் முழு ஆதரவை தெரிவித்து கொள்கிறோம்
Posted On Tuesday, 22 July 2008 at at 13:14 by Mikeசார்க் அமைப்பில் தமிழீழ தேசமும் ஒரு அங்கத்துவ நாடு என்பதை வெளிப்படுத்தும் முகமாகவே அந்த மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளனர் என்று விடுதலைப் புலிகளின் வெளியீட்டுப் பிரிவுப் பொறுப்பாளர் சு.ரவி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற "நினைவழியா பெரு மனிதன்" நூல் வெளியீட்டு நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சார்க் மாநாட்டை சாட்டாக வைத்துக்கொண்டு சிறிலங்கா அரசு ஒரு காயை நகர்த்தியது.
அது யாதெனில், "இந்தியத் தலைவருக்கு சிறிலங்காவில் பாதுகாப்பளிக்க முடியாது. புலிகளால் இந்தியத் தலைவருக்கு உயிர் ஆபத்து உள்ளது. ஆகவே, அவரின் பாதுகாப்பிற்கு இந்தியப்படையை அனுப்புங்கள்" - என்று பொய்யான தகவலை சிறிலங்கா அரசு இந்தியாவுக்குத் தெரிவித்தது. இதனை தென்னாசிய நாடுகளும் நம்பியிருக்கலாம்.
விடுதலைப் புலிகளையும் இந்திய அரசையும் சிண்டுமுடிந்துவிடும் வேலையில் சிறிலங்கா அரசு இறங்கியுள்ளது.
இந்நிலையில், எமது விடுதலை இயக்கம் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்த அறிவித்தலை வெளியிட்டு, சார்க் மாநாட்டுக்கான தனது ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளது.
எமது விடுதலைப் போராட்டம் எமது மக்களுக்கானதே. அது தென்னாசியப் பிராந்திய நாடுகள் உட்பட எந்த நாட்டுக்கும் எதிரானதல்ல என்பதை எமது தேசியத் தலைவர் அவர்கள் கடந்த மாவீரர் நாள் உரையில் தெளிவாக விளக்கியுள்ளார்.
ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சார்க் அமைப்பில் இருக்கின்ற ஆறு நிலையான நாடுகளுடன் அதில் எமது தேசத்தையும் ஒரு அங்கமாக கருதுவதால்தான் சார்க் அமைப்புக்கான தமது ஆதரவை விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதுடன் சிங்கள அரசின் பொய்யான பரப்புரைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் என்றார் அவர்.