கலைஞரின் மவுனம் கலையுமா,
Posted On Thursday, 26 June 2008 at at 13:23 by Mikeகலைஞரின் மவுனம் கலையுமா ஈழ பிரச்னையில், தன்மான தமிழா, ஏன் இந்த மவுனம் இன்னும் கொஞ்ச தமிழ் மக்கள்தான் அவர்களையும் கொன்னுட்டா நீர் எந்த பிரச்னையும் இல்லாமல் உம்முடைய ஆட்சியை நடத்தலாம் என்றா இந்த பொறுமை. சும்ம நொண்டி சாக்கு சொல்வது உமக்கே கைவந்த கலை. தமிழனை காப்பாற்றும் இல்லை நீயே கொன்று விடும் அனைத்து தமிழ் மக்களையும். தமிழ் நாட்டில் இருந்து உணவுதான் நீர் அனுப்ப வில்லை, இலங்கைக்கு ஆயுதமாவது அனுப்பும். எவன் கையாலோ சாவதை விட உன் கையால் சாவதை நம் இனம் பெருமைப்படும். ஒரு தமிழ் இனத்தை காப்பாற்ற முடியாவிடில் ஏதற்க்காக ஆட்சி செய்ய வேண்டும் நீர்.
யோவ் உனக்கு வேற வேலையே இல்லையா? முடிஞ்சா போய் நீ இலங்கைக்கு போய் சண்டை போடு அத வுட்டுட்டு சும்மா சொகுசா இருந்துட்டு அவன் கண்ணை திறப்பானா இவன் அது செய்யுறா டீச்சர் இவன் கிள்றான் குத்துறான்னு ஏன்யா எங்க உசிரை எடுக்கிறீங்க
உரிமையோடு கேட்கிறீர்கள். கலைஞர் அல்லது திமுக ஆட்சி இருந்தால் தான் நமக்கு அந்த உரிமை கூட இருக்கும் என்பது எதார்தம். பிற தமிழ் ஆர்வலர்கள் வைகோ, இராமதாஸ், திருமாவளவன் யாரும் ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் இல்லை. ஆனால் இவர்கள் அணைவரும் ஒன்று சேர்ந்து ஈழத்தமிழருக்கு ஆதரவாக செயல்பட்டால் மாற்றம் வருவதர்க்கு வாய்ப்புள்ளது. நமது ஏக்கங்களை வாக்குகலாக மட்டும் தான் பார்க்கிறார்களே நன்பா என்ன செய்வது!!??.
நண்பர்களின் குமுறல்கள் நன்கறிந்தவர்தான் கலைஞர்.
அவரது உணர்வுகளும் தமிழ் உணர்வுகள் தான்.
ஒரு சிறந்த அரசியல்வாதி எதை எப்படி எப்பொழுது எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைச் செய்வார்.
மேடைப் பேச்சுதான் ஆதரவு என்று எண்ணாதீர்கள்.இந்திய எதிர்ப்பை தமிழர்களின் ஆதரவாகப் புது டில்லியின்
பொறுக்கிகளை மாற்ற வேண்டிய பெரிய பொறுப்பை திறமையாக செய்யவேண்டியுள்ளதை புரிந்து கொள்ள வேண்டும்.
தலைவர் பிரபாகரனிடம் பொறுத்தது போதும்,உடனே போர் தொடுங்கள் என்று சொல்வதா?