இலங்கைக்கு ஆயுத தளபாடங்கள் வழங்குவதற்கு இந்தியா தீர்மானம் சீனா, பாக். உதவியைக் கொழும்பு நாடுவதைத் தடுக்கவே இம்முடிவாம்

இளிச்சவாயன் தமிழன்,தமிழனை கொல்ல இப்படி போட்டி போடறீங்களடா, அவனை கொல்றதுலதான் ஏன்ன ஒரு போட்டி, பாவம்டா ஒரு மனிதனா நினைத்து பார், உன் சுயநலத்திற்காக ஒரு இனத்தை அழிக்க நினைப்பது என்ன ஒரு நியாயம்.

சீனா, பாகிஸ்தானிடமிருந்து இலங்கை தொடர்ச்சியாக ஆயுதங்களையும் இராணுவத் தளபாடங்களையும் கொள்வனவு செய்வது குறித்து அச்சமடைந்துள்ள இந்தியா, இதன் காரணமாக இலங்கைக்கு மேலும் இராணுவ உதவிகளை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக "டைம்ஸ் ஒவ் இந்தியா' செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் பேரழிவை ஏற்படுத்தாத ஆயுதங்களையே இலங்கைக்கு வழங்குவது என்ற தனது கொள்கையின்படி பெருமளவிற்குத் தற்காப்பு ஆயுதங்களையே இலங்கைக்கு இந்தியா வழங்கவுள்ளதாகப் புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு சாத்தியமில்லையென இந்தியா கருதுகின்றது. அதேவேளை, பேச்சுகளுக்கான அழுத்தங்களைக் கொடுத்துவருவதுடன், அந்த நாட்டின் பிரதேச ஒருமைப்பாட்டிகுப் பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியம் என்றும் கருதுகின்றது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளிவிவகாரச் செயலாளர் சிவ் சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலாளர் விஜய் சிங் ஆகியோர் அடங்கிய உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு கடந்த வாரம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கொழும்பில் சந்தித்தவேளை அரசியல் முயற்சிகளைத் திரும்பவும் ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் அவரிடம் தெரிவித்தது.

அதேவேளை, இந்தியாவால் தனக்குக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அயல்நாட்டிற்குள் சீனா ஆழமாகக் காலடி பதிப்பதையும் , விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை இராணுவத்தைப் பலப்படுத்துவதற்காக மலிவான பல வகை ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் சீனா வழங்குவதையும் இலகுவாக சகித்துக் கொள்ளப் புறக்கணித்துப் பார்த்திருக்க முடியாதுள்ளது.

மியன்மாரில் இடம்பெற்றது தற்போது இலங்கையிலும் நடைபெறுகின்றது. பல ஆயுத உடன்படிக்கைகள், எண்ணெய் அகழ்வுகள், அம்பாந்தோட்டைத் துறைமுகம் போன்ற கட்டுமானத் திட்டங்கள் மூலம் சீனா இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் காலூன்றுகிறது என மூத்த அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

சீனா,பாகிஸ்தான் போன்றவற்றிலிருந்து இலங்கை தொடர்ந்தும் ஆயுதத் தொழில்நுட்பத்தைக் கொள்வனவு செய்து வருவது குறித்த இந்தியாவின் அதிருப்தியை நாராயணண் தலைமையிலான குழுவினர் இலங்கைக்குத் தெரிவித்துள்ளனர்.

இலங்கை ஜனாதிபதி, அந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் உட்படப் பலருடன் இக்குழுவினர் மேற்கொண்ட பரஸ்பரம் அக்கறைக்குரிய விடயங்கள் தொடர்பான பேச்சுகளின் போது, இலங்கைக்கு ஆயுதத் தளபாட விநியோகத்தில் சகல உதவிகளையும் வழங்குவதற்கு இந்தியா உறுதியளித்துள்ளது. புலனாய்வு மற்றும் பயிற்சி போன்றவற்றையும் வழங்கவுள்ளது.

இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் முன்னர் சீனா, பாகிஸ்தானிடமிருந்து ஆயுதங்களைப் பெறுவதை இலங்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்ததுடன், இலங்கையின் நியாயபூர்வமான பாதுகாப்புத் தேவையைப் பிராந்தியத்தின் வல்லரசு என்ற ரீதியில் புதுடில்லி பூர்த்தி செய்யும் என்றும் தெரிவித்திருந்தார்.

எனினும் தமிழ்நாட்டு அரசியலில் ஏற்படக்கூடிய உணர்வு ரீதியிலான தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, இந்தியா இதுவரை பேரழிவை ஏற்படுத்தாத ஆயுதங்களை மாத்திரமே இலங்கைக்கு வழங்கிவருகின்றது.
இந்தியா 40 எம்.எம்.எல். 70 விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள், தாழப்பறக்கும் விமானங்களை இனம் காணக்கூடிய இந்திரா ராடர் போன்றவற்றையே இலங்கைக்கு வழங்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கம்.

இதேவேளை, இலங்கையின் ஆயுதத் தேடலைத் தணிப்பதற்காகச் சீனாவும் பாகிஸ்தானும் பெருமகிழ்ச்சியுடன் இந்த வெற்றிடத்திற்குள் குதித்துள்ளன.

1990 இல் பர்மாவின் இராணுவ ஆட்சியாளர்களை இந்தியா புறக்கணித்தபோது அவர்களும் இவ்வாறே செயற்பட்டனர்.

கொழும்பு சீனாவின் பொலிடெக்னோலஜிஸ் நிறுவனத்துடன் பெருமளவு ஆயுதங்கள், வெடிமருந்துகளைப் பெறுவதற்காக 37.6 மில்லியன் அமெரிக்க டொலரிற்கு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது.

மேலும் சீனாவின் ஜியான் 7 யுத்த விமானங்கள், ஜே.வை. 113 டி வான்வெளிக் கண்காணிப்பு ராடர்கள், கவச வாகனங்கள் போன்றவற்றையும் கொள்வனவு செய்கின்றது.

இந்தியா இலங்கைக்கு ஆயுதங்களை வழங்குவதற்கு அப்பால், ஆழ்கடலில் புலிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக் கடற்படையுடன் இணைந்து கூட்டு ரோந்தை மேற்கொண்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி "டைம்ஸ் ஒவ் இந்தியா ' மேலும் தெரிவித்துள்ளது.

Posted in |

2 comments:

  1. Anonymous Says:

    என்னத்தங்க சொல்றது.. தன்மானத்தமிழன்னு சொல்லிக்கிட்டே மானங்கெட்டு போய் இந்திய அரசின் அத்தனை கூத்தையும் பாக்க வேண்டியது தான்.. தமிழன விடவும் கேவலமான நிலையில விரட்டி விரட்டி அடிச்சு கொல்லப்பட்ட யூத மக்களுக்கு தனி நாடு கிடச்சதும்.. அவங்க ரேஞ்சே வேற.. நமக்குத்தான் அதுக்கு துப்பில்லயே.. "எந்த அரசாங்கம் மிதிச்சாலும்.. அது இந்தியாவோ.. இலங்கையோ.. மலேசியாவோ.. நாம மறுபேச்சு பேசாம வாங்கிக்கறதுன்னு ஆயிபோச்சு.." எதையும் தாங்கும் இதயம்னா... பின்ன சும்மாவா..?!!

  2. Anonymous Says:

    என்னத்தங்க சொல்றது.. தன்மானத்தமிழன்னு சொல்லிக்கிட்டே மானங்கெட்டு போய் இந்திய அரசின் அத்தனை கூத்தையும் பாக்க வேண்டியது தான்.. தமிழன விடவும் கேவலமான நிலையில விரட்டி விரட்டி அடிச்சு கொல்லப்பட்ட யூத மக்களுக்கு தனி நாடு கிடச்சதும்.. அவங்க ரேஞ்சே வேற.. நமக்குத்தான் அதுக்கு துப்பில்லயே.. "எந்த அரசாங்கம் மிதிச்சாலும்.. அது இந்தியாவோ.. இலங்கையோ.. மலேசியாவோ.. நாம மறுபேச்சு பேசாம வாங்கிக்கறதுன்னு ஆயிபோச்சு.." எதையும் தாங்கும் இதயம்னா... பின்ன சும்மாவா..?!!

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails