தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து மண்டேலா பெயர் நீக்கம

என்னங்கடா இது ஒரு சுதந்திரத்துக்காக பாடுபட்ட ஒருத்தருக்கு இப்படி ஒரு பட்டம். எப்பவும் அடிமையாக இருக்கணும். இதே மாதிரிதான் ஒரு நாள் தமிழீழம் கிடைக்கும் போது, உண்மை உணரப்படும் யாரு பயங்கரவாதம் பண்ணியது என்று. அப்பாவி தமிழ் மக்களையும், செஙஞ்சோலை மாணவிகளையிம் கொன்று குவித்து வருபவர்கள் பதில் சொல்ல வேண்டிய காலம் வரும். இதுல கொடுமை தமிழனை தமிழனை கொல்ல ஆதரவு கொடுப்பது. அவனே அரச பயங்கரவாதத்து துணை போவது. காலம் மாறும்.


வாஷிங்டன் : தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து நெல்சன் மண்டேலா உட்பட தென் ஆப்ரிக்க தலைவர்களின் பெயர்களை நீக்குவதற்கான, மசோதா, அமெரிக்க பார்லிமென்ட்டின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.தென் ஆப்ரிக்காவில், இனவெறி கொண்ட வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து போராடியவர் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர் நெல்சன் மண்டேலா. இவர் உட்பட, அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் மீது, வெள்ளையர் அரசு நடவடிக்கை எடுத்தது.


முதல், கறுப்பின அதிபர் : மண்டேலா, 26 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். கட்சி தடை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவிலும், மண்டேலா உட்பட அக்கட்சியின் தலைவர்களின் பெயர்கள், தீவிரவாதிகள் பட்டியலில் இடம் பெற்றது. இதனால், அவர்களால், அமெரிக்காவுக்கு செல்ல முடியாது. தென் ஆப்ரிக்காவில், இனவெறி அரசுக்கு, 1990ம் ஆண்டு முதல் பின்னடைவு ஏற்பட்டது; மண்டேலா விடுதலையானார். முதல் முறையாக நடந்த பார்லிமென்ட் தேர்தலில், அவரது கட்சி வெற்றி பெற்றது. 1994ம் ஆண்டு மே 10ம் தேதி, தென் ஆப்ரிக்காவின் முதல், கறுப்பின அதிபர் என்ற பொறுப்பை, மண்டேலா ஏற்றுக் கொண்டார்.இதன் பிறகும், அமெரிக்காவில், தீவிரவாதிகள் பட்டியலில், மண்டேலா உள்ளிட்ட பெயர்கள் நீடித்தன. மண்டேலா, அதிபராக பதவியேற்ற 14 ஆண்டுகளுக்கு பிறகு, இதற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.


அமெரிக்க பார்லிமென்ட்டில், பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு குழு தலைவராக இருப்பவர் ஜனநாயக கட்சியை சேர்ந்த, ஹோவர்டு பெர்மான். தீவிரவாதிகள் பட்டியலில் இடம் பெற்று இருந்த , மண்டேலா உள்ளிட்ட ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர்களின் பெயர்களை நீக்க, ஹோவர்டு முயற்சி எடுத்தார். இதற்கான மசோதா, பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails