பிரபாகரனுக்கு ராஜபக்சே சவால்

சரியான காமெடி, புஷ் கூட பின்லேடனை சண்டைக்கு இப்படி கூப்பிட்டதில்லை. அப்பாவி பொதுமக்களை கொல்றது யாரு ஊருக்கே தெரியும். தினம் தினம் நூற்றுக்கணக்கான மக்கள் யாரால் கொல்லபடுகிறார்க்ள். ஏனையா இந்த பொய். யாரை ஏமாத்த இப்படி பொய் பேசணும்.
நாட்டு ஜனாதிபதியே இப்படி ஒத்தைக்கு ஒத்தை சண்டை போட்டால் நாடு எப்படி உருப்படும். எங்கே இருந்து யாரு புத்தி சொல்ல முடியும்.


கொழும்பு: அப்பாவி பொதுமக்களை கொல்வதை விட்டு விட்டு என்னுடன் நேருக்கு நேர் மோத தயாரா என்று, புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே சவால் விடுத்துள்ளார். இலங்கை கிழக்கு மாகாண கவுன்சில் தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, கிழக்கு அம்பாறை மாவட்டம் ஓழுவில் என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராஜபக்சே பேசுகையில், புலிகள் தலைவர் பிரபாகரன், அப்பாவி பொதுமக்கள், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்களை கொல்வதை விட்டு விட்டு என்னுடன் நேரடியாக மோத சவால் விடுகிறேன். பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மக்களை விடுவித்து அமைதியை ஏற்படுத்தும் முயற்சியிலிருந்து அரசு பின்வாங்காது. பயங்கரவாதத்திலிருந்து கிழக்கு பகுதி மக்கள் விடுபட்டுள்ளனர். அதே போல் வடக்கு பகுதி மக்களும் பயங்கரவாதத்திலிருந்து சுதந்திரம் பெறுவர் என்பது உறுதி, என்றார்.

நன்றி: தினமலர். நல்ல வேளை தினமலர் பிரபாகரனை சண்டைக்கு கூப்பிடவில்லை

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails