தமிழ்த் திரைப்பட உலகினர் ஏப்.4 இல் உண்ணாவிரதப் போராட்டம்

நல்ல விசயம், தமிழர்களுக்கு குரல் கொடுப்பது, ஆனால் உங்க சுயநலத்துக்காக பண்ணவில்லை என்று நம்புகிறேன். அப்படியே நம்ம ஈழதமிழர்களுக்காகவுன் குரல் கொடுத்தால் ரொம்ப நன்றி. அவர்களின் காசை நம்பி வெளிநாடுகளில் ஆட்டம், பாட்டம் போடும் நீங்கள் அவர்களுக்காகவும் குரல் கொடுங்கள்.

சென்னை, ஏப். 2- பெங்களூரு நகரில் தமிழ் அமைப்புமீதான தாக்குதலைக் கண்டித்து நடிகர் - நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரையுலகினர் சென்னையில் வரும் 4 ஆம் தேதி மாபெரும் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடு படுகின்றனர். அன்றைய தினம் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பெங்களூருவில் தமிழ்ப் படங்கள் திரையிடப்படும் திரையரங்குகள், கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்களால் நேற்று முன்தினம் தாக்கப்பட் டன. நேற்றும் கன்னட அமைப் பினர் தமிழர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில் தென் னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் அவசரக் கூட்டம் சென்னையில் நேற்று நடை பெற்றது.

இக்கூட்டத்தில் தயாரிப்பா ளர்கள் நடிகர்கள், இயக்கு னர்கள் மற்றும் அனைத்துப் பிரிவு தொழிலாளர் சம்மேள னத்தைச் சேர்ந்த பிரதிநிதி களும் பங்கேற்றனர். பெங்களூ ருவில் திரையரங்குகள் தாக்கப் பட்டதைக் கண்டித்து வரும் 4 ஆம் தேதி சென்னையில் உண் ணாவிரதப் போராட்டம் நடை பெறுகிறது. இதில் திரைப் படத் துறையைச் சேர்ந்த அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட் டன. அன்றைய தினம் அனைத்து படப்புடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இப்பிரச்சினை முடிவுக்கு வரும் வரை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் இருந்து கர்நாடகப் பிரிவை நீக்குவது என்றும் இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தென்னிந்திய திரைப்பட வர்த் தக சங்கத் தலைவர் கே.ஆர்.ஜி. தமிழ்த் திரைப்படத் தயாரிப் பாளர் சங்கத் தலைவர் இராம நாராயணன், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத் குமார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.


கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒத்துழைப்பு ரத்து இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கு தமிழ் திரையுலகம் தொழில் ரீதியான எந்தவித ஒத்துழைப்பையும் தருவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.

கேள்வி:- இந்த உண்ணா விரதத்தில் ரஜினிகாந்த் கலந்து கொள்வாரா?
சத்யராஜ் பதில்:- தமிழ்நாட் டில் சோறு சாப்பிடுகிற எல் லோரும் கலந்துகொள்ள வேண் டும்.
கேள்வி:- சிலர் வெளிநாடு அல்லது வெளியூர் போய் விட்டதாக சொன்னால்..?
சத்யராஜ் பதில்:- அவர்கள் அங்கேயே இருக்கட்டும். திரும்பி வரவேண்டாம்.
கேள்வி:- தமிழ் படங்களில் நடிக்கும் சில நடிகர்-நடிகை கள், கர்நாடகாவில் தமிழர் களுக்கு எதிராக நடைபெறும் பேரணிகளில் கலந்துகொள் கிறார்களே..?
சத்யராஜ் பதில்:- அவர் களுக்கு `ஆப்பு' வைக்கத்தான் தீர்மானம் நிறைவேற்றி இருக் கிறோம்.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails