நம்ம சிங்கள சிப்பாய், இதை படிப்பாரா, பிரபாகரனை பத்தி சொல்றவரே

முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது சிறிலங்கா இராணுவம் இன்று நடத்திய கொடூர விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 129 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் உள்ள செஞ்சோலை சிறார் இல்ல வளாகம் மீது சிறிலங்கா விமானப் படையின் 4 கிபீர் விமானங்கள் 16 குண்டுகளை இன்று திங்கட்கிழமை காலை 7 மணியளவில் வீசின.

இருநாள் பயிற்சிக்காக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை சிறுமிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பாடசாலையில் தங்கியிருந்தனர்.

இதில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டனர். அப்பகுதியில் நோயாளர் காவு வாகனங்கள் சென்று-வந்து கொண்டிருக்கின்றன.

படுகொலை செய்யப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை 75 ஆக உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

செஞ்சோலை சிறார் இல்லத்தில் மொத்தம் 400 பாடசாலை சிறுமிகள் இருந்தனர்.

33 சிறுமிகளின் சடலங்கள் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இதர சிறுமிகளின் சடலங்கள் கடுமையாக சிதைவடைந்துள்ளன.

காயமடைந்த 52 சிறுமிகள் முல்லைத்தீவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 13 சிறுமிகள் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கும் 64 பேர் கிளிநொச்சி மருத்துவமனைக்கும் கொண்டு சொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம், ஊடகவியலாளர்களை அழைத்து காலையில் தகவல் தெரிவித்தது. இச்சம்பவம் ஒரு கொடூரமான மிலேச்சத்தனமான தாக்குதல் என்று விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் அமைப்பான யுனிசெஃப்புக்கும் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினருக்கும் சம்பவ இடத்தைப் பார்வையிடுமாறு விடுதலைப் புலிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.Posted in |

2 comments:

 1. Anonymous Says:

  இன்னும் ஒரு பொறுக்கி சிங்களக் கைக்கூலியாக எழுதியிருக்கிறான்.
  யாருடைய குடும்பத்தினரையும் பதிவுகளில் எழுதக் கூடாது என்று நினைப்பவன் நான்.ஆகவே அவன் செய்த தவறுக்காக அவனுடைய குடும்பத்தினரை இழுக்க விரும்பவில்லை.

  பட்டவர்களுக்குத்தான் வலிக்கும்.இவனுக்கு என்ன தெரியும்,
  முட்டாள் தனமாய் உளறுவதைத் தவிர.

 2. Anonymous Says:

  சிங்கள சிப்பாய் தமிழனா?

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails