எவனோ தமிழனை அழிக்க ஆயுதம் கொடுக்கறது நானே கொடுப்பேன் என்பது. எந்த தந்தையாவது அவன் பிள்ளையை எவனோ அடிச்சு கொல்ற்துக்கு நானே கொல்றேன் என்று சொல்வானா

முன்னெப்போதும் இல்லாத அளவில் இப்போது தமிழர்களிடையே, ஈழப்பாசம் கூடியுள்ளது. சிங்களன் எவனும் தமிழ்நாட்டுக்கு வரமாட்டான், எல்லாம் டில்லிக்குதான் போவான்,எதிரிக்கு எதிரி நண்பன், நம்ம எதிரி இந்தியாவுமா. இந்தியா சொல்றது கொஞ்சம்கூட நியாயம் இல்லை எவனோ தமிழனை அழிக்க ஆயுதம் கொடுக்கறத்து நானே கொடுப்பேன் என்பது. எந்த தந்தையாவது அவன் பிள்ளையை எவனோ அடிச்சு கொல்றதுக்கு பதில நானே கொல்றேன் என்று சொல்வானா. என்ன வெளியுறவு கொள்க்கையோ இது, அண்ணன் நாரயணனுக்கே வெளிச்சம்.

டி. ராஜேந்தர் அவர்களுக்கு தமிழ் மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து டி. ராஜேந்தர் அவர்கள் தனது தமிழக அரச பதவியை இராஜினாமா செய்தார்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தான் குரல் கொடுப்பதற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, தான் வகித்துவந்த தமிழக அரசின் சிறு சேமிப்புத் துறை துணைத் தலைவர் பதவியை திரைப்பட இயக்குனரும், லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான டி. ராஜேந்தர் அவர்கள் இராஜினாமா செய்துள்ளார்.

இலங்கையில் இருக்கும் தமிழர்களைக் கொன்றுகுவிக்க இலங்கை இராணுவத்துக்கு இந்தியா கைகொடுப்பதாகக் குற்றஞ்சாட்டும் டி.ராஜேந்தர் அவர்கள், இலங்கை இராணுவத் துக்கு இந்தியா ஆயுதங்களையும், உபகரணங்களையும் வழங்கு வதையும், பயிற்சிகள் வழங்குவதையும் தன்னால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் கூறினார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை இலங்கைத் தமிழர் ஒருவர்தான் கொலை செய்தார் என்பதற்காக ஒட்டு மொத்த இலங்கைத் தமிழினத்தையும் புறக்கணிப்பது நியாய மல்ல என்றும் ராஜேந்தர் அவர்கள் தெரிவித்தார்.

தான் எந்த விதமான வன்முறை இயக்கத்துக்கு ஆதரவாகவும் வாதாடவில்லை என்றும், இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைகளுக்காகவே தான் குரல் கொடுப்பதாகவும் அவர் கூறினார்.

Posted in |

1 comments:

  1. Anonymous Says:

    sariyaaka sonnergal.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails