தன்மான திராவிட குஞ்சுகளே, நமக்கே மின்சாரம் இல்லாதப்ப, நம்ம தமிழின எதிரிக்கு ஏனையா மின்சாரம் கிடைக்க இந்த பாடுபடுகிறிர்கள்

தமிழகத்தில் ஆறு மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்தில் உள்ள தொழிற்சாலை களுக் கும்,வாரத்தில் ஒவ்வொரு நாள் விடுமுறை அளிக்கப்படும். இதன்மூலம், நாள் ஒன்றுக்கு சராசரியாக 300 மெகாவாட் மின்சாரம் மிச்சப்படுத்தப்படும்' என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.

கோடை காலத்தில் ஏற்படும், மின் தட்டுப்பாட்டை தடுப்பது தொடர்பாக தொழிலதிபர்களுடன் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் மாலை நேரங்களில் மின்சாரம் கண்டிப்பாக வழங்கப்படும்.

தமிழகத்தை ஆறு தொழில் மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒவ்வொரு நாள் விடுமுறை அளிக்குமாறு தொழிலதிபர்களிடம் கேட்டோம். அதை அவர்களும் ஏற்றுக் கொண்டனர். இதன்படி, வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் சென்னை தெற்கு, செவ்வாய் கிழமைகளில் சென்னை வடக்கு, புதன் கிழமைகளில் ஈரோடு மற்றும் விழுப்புரம், வியாழனன்று திருநெல்வேலி மற்றும் வேலூர், வெள்ளிக் கிழமைகளில் மதுரை மற்றும் திருச்சி, சனிக்கிழமை கோவை என ஒவ்வொரு மண்டலத்திலும் தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விடப்படும். இதன் மூலம் சராசரியாக 300 மெகாவாட் மின்சாரம் தினமும் பயன்படுத்துவது குறையும்.

கோடை காலத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பற்றாக்குறை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை சமாளிக்க அசாம், மேற்குவங்கம், பஞ்சாப் ஆகிய அரசுகளிடம், மின்சாரம் வாங்குவதற்காக பேசியுள்ளோம். தமிழகத்தில் தான் விவசாயிகளுக்கு பகலில் ஆறு மணி நேரமும், இரவில் எட்டு மணி நேரமும் என 14 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படுகிறது.

எட்டு ஒன்பது மாதங்களில் மற்ற மாநிலங்களுக்கு மின்சாரத்தை விற்கும் நிலை தமிழகத்துக்கு ஏற்படும். தொழிற்சாலைகளுக்கு ஒரு விடுமுறை விடுவதை போல, சினிமா தியேட்டர்கள் போன்றவற்றுக்கு விடச் சொல்லி அனைத்து தரப்பையும் பகைத்துக் கொள்ள முடியாது. நல்ல படம் பார்க்க முடியாமல் செய்து விட்டனர் என்று பொதுமக்கள் பேச ஆரம்பித்து விடுவர். இவ்வாறு ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.


தென்னிந்திய மத்திய மின் தொகுப்பில் சிறிலங்காவை இணைக்க இந்தியா முடிவு
[வெள்ளிக்கிழமை, 29 பெப்ரவரி 2008, 06:32 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]


சிறிலங்காவில் இந்தியா உற்பத்தி செய்யும் மின்சாரத்தினை தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் தென் மாநிலங்களுக்காக நடைமுறையில் உள்ள தென் மத்திய மின் தொகுப்புடன் இணைத்து அதிலிருந்து தென் இந்திய மாநிலங்களுக்கு வழங்குவது போல் சிறிலங்காவுக்கும் மின்சாரத்தை பகிர்ந்து வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இதற்கான ஒப்பந்தம் புதுடில்லியில் எதிர்வரும் மாதம் கையெழுத்திடப்படவுள்ளது.

தென்னிந்திய மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இந்திய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தென் மத்திய மின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் தென்னிந்திய மாநிலங்களுக்கு அந்த தென் மத்திய மின் தொகுப்பிலிருந்து குறிப்பிட்ட அளவு மின்சாரம் பகிர்ந்தளிக்கப்படும்.

தற்போது சிறிலங்காவில் புதிய மின் திட்டங்களை செயல்படுத்தும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

அந்த மின் உற்பத்தியையும் தென் மத்திய மின் தொகுப்புடன் இணைத்து இந்தியாவின் தென் மாநிலங்களுக்கு தென் மத்திய மின் தொகுப்பு மின்சாரம் பகிர்ந்தளிக்கப்படுவது போல் சிறிலங்காவுக்கும் மின்சாரம் பகிர்ந்தளிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான வாய்ப்புக்களை அறிய 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

மின் தொகுப்புகளை இணைப்பதற்கான வாய்ப்புக்கான ஆய்வை இந்திய மின் தொகுப்பு கழகம் மேற்கொள்ளும் என்றும் அதன் அறிக்கை எதிர்வரும் ஒக்ரோபர் அல்லது நவம்பரில் இந்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டின் கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்தும் சிறிலங்காவுக்கு குழாய் மூலம் மின்சாரம் வழங்க ஏற்கெனவே இந்தியா முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in |

2 comments:

  1. Anonymous Says:

    கூடங்ககுளம் திட்டம் முடிந்தவிடன் கிடைக்கும் உபரி மின்சாரத்தை தான் விற்க்க திட்டம்..
    மின்சாரத்தை வெகுதூரம் இழப்பின்றி கடத்தி செல்ல முடியாது. யாழ்பாணம் வரை தான் திட்டம். சரியா ஒழுங்கா படிங்க சரியா

  2. Thamizhan Says:

    இது திராவிடத் தலைவர்களின் முடிவல்ல.

    மாற்றாந்தாய் மனப் பான்மை மாறாத
    இந்தியத் தாயின் தமிழ்ப் பாசம்!

    சிங்கள அரசுக்குக் காண்பிக்கும் அக்கறையை இந்திய மீனவர்க்கும்,
    ஈழத் தமிழர்கட்கும் இந்தியா காண்பிக்க வைக்க வேண்டும்.இன்னும் ராஜீவ் பாட்டே பாடிக் கொண்டிருப்பது காங்கிரசின் அழிவுக்கு வழி வகுக்கப் போகிறது.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails