திராவிட குஞ்சுகளின் கவனத்திற்கு, ஆறு நாள் பயணமாக சிறிலங்கா இராணுவத் தளபதி நாளை இந்தியா பயணம் : வேண்டுமானால நீங்களும் சிவப்பு கம்பளம் விரித்து, விருநது

.. கொஞ்சி உறவாடி அவரை மகிழ்விக்கலாமே. அப்படியே அணுகுண்டு formula வையும் சொல்லி கொடுத்தா மொத்தமா அண்ணன் தமிழினத்தை அழிச்சாருன்னா எந்த பிரச்னையும் இருக்காது. மானங்கெட்டவனே என் உறவுகளை அழித்து வரும் உனக்கு இன்னும் என்ன வேண்டும். ஓடி போ. என் அரசியல் திராவிட குஞ்சுகள் ஊமைகள், அப்பாவிகள். ஊழல் மட்டுமே போதுமென்றாலும் உண்மையும் பேச நினைப்பார்கள் ஆனால் பேச மாட்டார்கள். பயந்த்வர்கள். கட்சிக்ளில் பேர்களில் மட்டும் திராவிடம் சேர்க்கும் நீங்கள், அந்த திராவிட தமிழன்க்கு ஏதாவது பண்ணுங்கப்பா. தமிழன் தமிழனை காப்பாற்றாமல் தமிழனாக பிறந்ததற்கான எந்த அர்த்தமுமில்லை.எந்த திராவிட குஞ்சு முதல் அறிக்கை விடறது பார்ப்போம் அண்ணனின் வருகையை எதிர்த்து. அல்லது நம்க்கேன் வம்பு அப்படின்னு இருக்கிறதா பார்ப்போம்.

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா நாளை ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் புதுடில்லிக்கு ஆறு நாள் பயணமாக செல்லவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சிறிலங்கா மற்றும் இந்திய இராணுவத்தினருக்கு இடையிலான புரிந்துணர்வு உறவின் நிமித்தமே அவரது இந்த பயணம் நடைபெறுவதாக கூறப்படுகின்றது.

இந்தியாவில் சரத் பொன்சேகா தங்கியிருக்கும் காலத்தில் இந்திய இராணுவ உயர்மட்டத் தளபதிகளைச் சந்தித்து இலங்கை நிலவரம் குறித்து விளக்கவிருக்கிறார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பயணத்தின் போது இந்தியாவிடம் இருந்து கொள்வனவு செய்யக்கூடிய இராணுவத் தளபாடங்கள் குறித்து ஆராய்ந்து அத்தகைய இராணுவத் தளபாடங்களை சிறிலங்கா இராணுவத்திற்கு கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளிலும் அவர் ஈடுபடவிருக்கின்றார்.

புதுடில்லிக்கு நாளை செல்லவுள்ள சரத் பொன்சேகாவிற்கு இந்திய இராணுவத்தின் "செளத் புளொக்" இராணுவத் தளத்தில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்படும். அதன் பின்னர் இந்தியா "கேற்" வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் சமாதிக்கு சரத் பொன்சேகா வணக்கம் செலுத்தவுள்ளார்.

சரத் பொன்சேகாவின் இந்தியப் பயணம் குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது:

விடுதலைப் புலிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவத்தினர் சோர்வடைவதனை இந்தியா விரும்பவில்லை. இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. ஆகையால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையின் வேகம் குறைவதனை இந்தியா விரும்பவில்லை.

சிறிலங்கா இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீதான பிடியை இழந்து விடுவதனையும் இந்தியா விரும்பவில்லை. எனவே உயிராபத்தை விளைவிக்காத ஆயுதங்களை சிறிலங்காவிற்கு வழங்கலாம். ஆனால் இந்தியாவின் இராணுவத் தலையீடு என்ற பேச்சுக்கு இடமிருக்காது.

தற்போது இந்திய-சிறிலங்கா கடல் எல்லைகளில் இருநாட்டுக் கடற்படையினரும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்த புலனாய்வுத் தகவல்களும் பரிமாறப்படுகின்றன என்றார் அவர்.

Posted in |

15 comments:

 1. oru Elath thamilan Says:

  வார்த்தைகளின் பெறுமதியை உணர்ந்து எழுதவும். ஈழ விடுதலை ஈழத் தமிழர்களின் முதல் இலக்கு.
  ஆனால் ஈழம் தமிழக அரசியல் நிகழ்ச்சி நிரலில் ஒரு பகுதி அவ்வளவுதான். உணர்ச்சி வசப்பட்டு அவர்களைத் திட்டுவதைவிட்டு அவர்கள் அனவரும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு கீழ்ப்படிய வேண்டிய பொறுப்பில் இருக்கின்றார்கள் என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும்.

  ஒரு ஈழத் தமிழன்

 2. Thamizhan Says:

  நண்பரே!
  வார்த்தைகளை அளந்து வீச வேண்டுகிறேன்.
  இந்திய அரசின் குடுமி வட நாட்டுப் பார்ப்பனீயத்தின் கையில்தான் முழுமையாக இருக்கிறது.
  அதை ஆட்டுவைக்கத் தமிழர் ஒற்றுமையில்லை,அந்தப் பார்ப்பனத்தில் இன்னும் தமிழர் ஆளுண்டு கிடக்கிறார்கள்.

  இதிலே உணர்ச்சியுள்ளவர்களின் இதயங்களிலே வேலைக் குத்தாதீர்கள்.

  எதிரி யார் நண்பன் யார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.காலம் சொல்லும்.

 3. Anonymous Says:

  //இந்திய அரசின் குடுமி வட நாட்டுப் பார்ப்பனீயத்தின் கையில்தான் முழுமையாக இருக்கிறது.
  அதை ஆட்டுவைக்கத் தமிழர் ஒற்றுமையில்லை,அந்தப் பார்ப்பனத்தில் இன்னும் தமிழர் ஆளுண்டு கிடக்கிறார்கள்.//

  இந்த ஆளு எங்க பின்னோட்டம் போட்டாலும் சம்ம காமேடியா போடுறாரு :))

 4. சிகாமோ Says:

  இந்த தமிழன் என்ற பெயரில் கமேண்ட் போடும் நாக இளங்கோவன்ன் அய்யா தன் ஆருரியர் நண்பர் வீரமணியிடம் சொல்லி வழக்கம் போல அறிக்கையாவது விட சொல்லாமே.

 5. ராஜீவ் காந்தி Says:

  குற்றம் செய்வதெல்லாம் ஏனோ நீங்கள் பழி மட்டும் இன்னொருவனிடமா??? போதுமடா சாமி
  பட்டதும் போதும் கெட்டதும் போதும் பாதையை மாற்றடா...

 6. ஆழிக்கரைமுத்து Says:

  வணக்கம் நண்பரே வார்த்தைகளை வீண் விரயம் செய்யாதீர்கள்

 7. வரவனையான் Says:

  ஆக அபத்த பதிவு இது. ஈழ அரசியலில் திராவிட சிந்தனையை தமிழ்நாட்டிலிருந்து யாரும் ஏற்றுமதி செய்யவிரும்பவில்லை, அதற்கேதும் அவசியம் இருப்பதாயும் தெரியவில்லை. மற்றபடி தமிழ்நாட்டு மக்கள் என்ன செய்யவேண்டும் என்று யாரும் யோசனையோ அல்லது கட்டளையோ இட வேண்டியதில்லை. உங்களின் கிண்டலிலாடும் உங்கள் குடுமி தெரியாமலில்லை.

  மலேசிய தமிழர்களை "மட்டும்" இந்துக்களாய் பார்க்கும் தமிழக பாரதீய ஜனதாவிடம் போய் வேண்டி நில்லும் நாங்களும் இந்துக்கள் தான் ஓய் என்று.

  திராவிட தோழர்களுக்கு உலகில் எங்கு தமிழன் பாதிக்கப்பட்டாலும் "தமிழனாய்" மட்டுமே பார்க்க தெரியும்.

 8. Thamizhan Says:

  அநானி அன்பருக்கு,
  காமெடிக்கும் டிராஜெடிக்கும் உள்ளதை சுருக்கமாகச் சொன்னால் புரிய வில்லை.
  தயை செய்து இந்திய வெளிநாட்டுத் துறை,செளத் பிளாக்,ரா பற்றியெல்லாம் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

  பண்டித ஜவஹர்லால் நேரு சொன்னார்,தங்கள் வீடுகளையும் ஊர்களையும் விட்டு எங்கும் வெளியே செல்லாது கடுமையாக உழைத்துத் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கித் தந்த மூன்றாம் தலைமுறையினருக்கு நாட்டுரிமை கொடுக்க மாட்டேன் என்பது நியாயமில்லை என்றார்.

  லால்பகதூர் சாஸ்த்திரி அதே மலையகத் தமிழர்களை இந்தியா ஏற்றுக் கொள்ளும் என்று சொன்ன போது பெருந்தலைவர் காமராசர் இது என்ன மடத்தனம்,யாரைக் கேட்டுக் கொண்டு இந்த ஒப்பந்தம் என்றார்.

  ஒரு மணித்துளி சிந்தித்துப் பாருங்கள்.
  தமிழினத்திற்கு நடக்கும் கொடுமை,
  இந்தியாவின் மற்ற இனங்களுக்கு வெளி நாடுகளிலே நடந்த கொடுமைகள்
  இவற்றில் இந்திய அரசின் மாறு பட்ட
  போக்கு எதனால்?

  ஈழத்திலே இன்று பார்ப்பனர்களோ,குஜராத்தி,மராட்டியரோ
  இனப் படுகொலைக்கு ஆளாகியிருந்தால் இந்தியா என்ன செய்திருக்கும்?
  பிரணாப் முகர்ஜி,மலையாள நாராயணன்கள் அந்த நாட்டு படைதலைவனை அழைத்து இனப் படு கொலைக்கு வழி சொல்கிறேன் வா என்று சிவப்புக் கம்பள்ம் விரித்திருக்க முடியுமா?

  இது உங்களுக்கு காமெடி,எங்களுக்கு டிராஜெடிதான்.

 9. Thamizhan Says:

  சிகாமோ தமிழரே!
  உங்கள் உடலில் நூல் தொங்கினால் உங்கள் வார்த்தைகள் சரியே!
  இல்லாவிட்டால் கொஞ்சம் கிண்டலைக் குறைத்து சரித்திரம் படிக்கவும்.
  அறிக்கைகள் உங்களைப் போன்றோருக்காக என்பதை உணர்ந்து கொள்வது நல்லது.நீங்கள் படிக்கிறீர்களோ இல்லையோ படிக்க வேண்டியவர்கள் கட்டாயம் படிக்கிறார்கள்,கவணிக்கிறார்கள்.

  80 ஆண்டுகட்கு முன்னர் முதல் சுய மரியாதை மாநாடும் அதன் அறிக்கைகளும் வெளியாயின.அதில்
  ஆணும் பெண்ணும் சமம்,மனித்ர்கள் அனைவரும் சமம் என்றெல்லாம்,சொத்துரிமை பற்றியெல்லாம் அறிக்கை விடப் பட்டது.அந்த அறிக்கைகளின் கொள்கை களுக்காகப் பல போராட்டங்கள் நடந்தன.

  உங்களுக்குத் தெரியுமோ,சென்னை மவுண்ட் ரோடிலே யாரெல்லாம் நடக்கக் கூடாது,சமஸ்கிருதம் தெரிந்தவர்கள்தான் மருத்துவக் கல்லூரியில் சேரலாம் என்றெல்லாம் இருந்தவை மாற்றப் பட்டது நீங்கள் படித்துப் பட்டம் பெற்று சிகாமோ ஆகியுள்ளது எல்லாம் அந்த அறிக்கைகளினால் தான்.

  பழங்கதை வேண்டாம்.

  தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜ ராஜனோ,தாங்களோ நுழைய முடியாதக் கருவறையில் நமது குப்பன்
  இன்னும் மூன்று மாதங்களிலே வந்து
  உங்களுக்கெல்லாம் அர்ச்சனை செய்யப் போகிறானே அது அந்த அறிக்கையால் தான்.

  நன்றி என்பது என்ன வென்றே தெரியாமல் வளர்ந்து விட்ட சிகாமோக்களுக்காக நன்றி எதிர் பார்க்காமல் கேலியையும்,கிண்டலையும் பொருட்படுத்தாது தங்கள் உடலையும்,உயிரையும் பணயம் வைத்துப் போராடி பல உரிமைகள் வாங்கித் தந்துள்ள முன்னோடிகளுக்குத் தங்கள் கிண்டலை அன்புக் காணிக்கையாக்குகின்றேன்.

  வாழ்க சிகாமோக்கள் வளமுடன்,சுய மரியாதையுடன்!

 10. PRINCENRSAMA Says:

  viduthalaiyin arikkaikku ulla viiriyam theriyaamal ularum tharuthalaikalukku enna thamizan ayya pathil thanthu kondu irukkireerkal...

  sariyaana eelath thalaivarai thamiz naattukku adaiyaalam kaatiyathilirunthu inru varai nadathiyirukkum poratam eththanai enbathaiyum antha thalaiyillaatha tharuthalai unarnthukollattum...

  inthiya pirathamar ilangai poka iruppathaaka deccan chronicle-in muulaiyil etho oru petti seythi vanthathai parthuvittu.... arikkai mattumalla... porattam nadaththi mulaiyileye antha ennathai killi eriya vaithavar thamizar thalaivar veeramani enbathai eela thamizarkal sariyakave unarnthu irukkirarkal...
  arai vekkadukal ularuvatherkellam pathila?

 11. மைக் Says:

  நண்பர்களே, நான் சொல்ல வந்த திராவிட குஞ்சு அனைத்து கட்சியினரையும் தான், வீரமணி தி.க வை மட்டும் குறிப்பிட்டு அல்ல. அவர் நிச்சயமாக (ஈழ)தமிழர்களுக்க்காக பாடுபடுகிறார் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை எனக்கு. ஆனால் தி.மு.க,அ.தி.மு.க. முதல் இன்று தோன்றிய சரத் குமார் வரை யாரிடம் ஒரு ஒற்றுமை இல்லை. தைரியம் இல்லை. தமிழன் சாகிறான் என்ற உணர்வு இல்லை.

 12. சுகாமோ Says:

  //சிகாமோ தமிழரே!
  உங்கள் உடலில் நூல் தொங்கினால் உங்கள் வார்த்தைகள் சரியே!
  இல்லாவிட்டால் கொஞ்சம் கிண்டலைக் குறைத்து சரித்திரம் படிக்கவும்.//

  எதுக்கு சார் சரித்திரம் படிக்கணும். நிகழ்காலம் தெளிவாக இருக்கும் போது சரித்திரம் பேசி உங்களை போல முட்டளாகவா?

  //அறிக்கைகள் உங்களைப் போன்றோருக்காக என்பதை உணர்ந்து கொள்வது நல்லது.நீங்கள் படிக்கிறீர்களோ இல்லையோ படிக்க வேண்டியவர்கள் கட்டாயம் படிக்கிறார்கள்,கவணிக்கிறார்கள்.//

  யாரு படிக்கிறாங்க? வீரமணி எதாச்சும் அறிக்கை விட்டா உடனே நம்ம கொளத்தூர் மணி அதை விட வீரமாக அறிக்கை விடுவாரு. அதை தவிர என்ன நடக்குது?
  தெரியாமத்தான் கேட்க்கிறேன், உங்க நண்பர் வீரமணி தன் கல்லூரிகளையும் சொத்துகளையும் பாதுக்காக்கதான் இன்னமும் லெட்டர்பேடு அறிக்கைகள் விடுகிறார் என்பது உங்களுக்கு தெரியாதா? இல்லை நீங்களும் பகல் கூட்டா? :))))

  //80 ஆண்டுகட்கு முன்னர் முதல் சுய மரியாதை மாநாடும் அதன் அறிக்கைகளும் வெளியாயின.அதில்
  ஆணும் பெண்ணும் சமம்,மனித்ர்கள் அனைவரும் சமம் என்றெல்லாம்,சொத்துரிமை பற்றியெல்லாம் அறிக்கை விடப் பட்டது.அந்த அறிக்கைகளின் கொள்கை களுக்காகப் பல போராட்டங்கள் நடந்தன.//

  அதெல்லாம் சரி தந்தை பெரியார் செய்தது. அவர் போராடியதால் தான் நமக்கு உரிமை கிடைத்தது. அதை சொல்லியே எத்தனை நாளு மாவாட்ட போறீங்க. நீங்க கூடத்தான் சிகாகோ பெரியார் மன்றம்ன்னு வைச்சு இருக்கீங்க. அங்க இருக்கிற பார்பானுக்கு பூனூலை உங்களால அறுக்க முடியுமா? இல்லை மணியாட்டுற பார்பான் குடுமியை நறுக்க முடியுமா? நிங்களும் வீரமா எல்லா இடத்துல எழுதிகிட்டு வறீங்க ஏதாச்சும் பயன் உண்டா??

  //உங்களுக்குத் தெரியுமோ,சென்னை மவுண்ட் ரோடிலே யாரெல்லாம் நடக்கக் கூடாது,//

  உது உடான்சு

  //சமஸ்கிருதம் தெரிந்தவர்கள்தான் மருத்துவக் கல்லூரியில் சேரலாம் என்றெல்லாம் இருந்தவை மாற்றப் பட்டது நீங்கள் படித்துப் பட்டம் பெற்று சிகாமோ ஆகியுள்ளது எல்லாம் அந்த அறிக்கைகளினால் தான்.//

  தலிவர் வீரமணி அறிக்கை விட்டு இதெல்லாம் நடந்தது என்பதை கேட்டு புல்லரிக்குது

  //பழங்கதை வேண்டாம்.

  தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜ ராஜனோ,தாங்களோ நுழைய முடியாதக் கருவறையில் நமது குப்பன்
  இன்னும் மூன்று மாதங்களிலே வந்து
  உங்களுக்கெல்லாம் அர்ச்சனை செய்யப் போகிறானே அது அந்த அறிக்கையால் தான்.//
  நடந்தால் உங்களை விட ஆனந்தம் அடைபைவன் நானாக தான் இருப்பேன்.

  //நன்றி என்பது என்ன வென்றே தெரியாமல் வளர்ந்து விட்ட சிகாமோக்களுக்காக நன்றி எதிர் பார்க்காமல் கேலியையும்,கிண்டலையும் பொருட்படுத்தாது தங்கள் உடலையும்,உயிரையும் பணயம் வைத்துப் போராடி பல உரிமைகள் வாங்கித் தந்துள்ள முன்னோடிகளுக்குத் தங்கள் கிண்டலை அன்புக் காணிக்கையாக்குகின்றேன்.//

  சரி சரி பழங்கதையை பேசாம என்ன நடக்குது என்ன பண்ண போறீங்கன்னு சொல்லுங்க. உங்களுக்கு உண்மையே சுயமரியாதை இருந்தா சிகாவொவில் பார்பான் பூனூல அறுங்க சரி அது கூட வேணாம் ஒரு ஞாயிறு சிகாகோ பொந்து மத கோவில்களில் சுயமரியாதை பிராசார கடிதம் கொடுங்க. எனக்கு தெரியும் உங்களால முடியாது. ஏன்னா உங்களுக்கு எல்லாம் பகுத்தறிவு உங்க தலிவரு நண்பர் வீரமணி போல சம்பாதிக்க ஒரு வழிதான் :)))))))) பார்பான் பூனூலை அறுக்க வேணாம், நம் ஈழ தமிழ்மக்கள் சுதந்திர போராட்டதை ஆதரித்து வெள்ளை மாளிகை எதிரே ஒரு ஐந்து நிமிடமாவது கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த முடியுமா??

  //வாழ்க சிகாமோக்கள் வளமுடன்,சுய மரியாதையுடன்!//

  அதையே அங்கு எதிர்பார்க்கும்
  சுகாமோ

 13. Anonymous Says:

  மைக் உங்கள் உங்கள் வார்த்தைப் பிரயோகம் மிக அபந்தமானது மற்றவர் தாமாக முன்வந்து உதவுவதற்க்கு பெயர்தான் உதவியை நிர்பந்திக்கவும் கூடாது எதிர் பார்க்கவும் கூடாது.

  மற்றதை யோசிக்க வேண்டும் அவர்கள் எங்களுக்கு உதவும் வகையில் நாங்கள் அவர்களுக்கு நம்பிகையானவர்களாக இல்லை

  கருணாநிதி ஒரு தடவை பதவியிழக்க யார் காரணம் நீங்கள் எக்கேடு கெட்டாலும் எங்களுக்கு உதவுங்கள் என்பது அதீத சுயநலவாதியே கருணாநிதி ஒரு கவிதை ஒன்றை வாசித்தாரே நம் தமிழ்ச் செல்வனுக்காக அது போதும் இப்போது..

 14. Anonymous Says:

  ஈழத் தமிழர்களை படுகொலை செய்து வரும் சிறிலங்கா இராணுவத்தின் தளபதி சரத் பொன்சேகாவை இந்திய அரசாங்கம் அழைத்ததற்கு தமிழ்நாட்டின் திராவிடர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
  திராவிடர் கழகத்தின் அதிகார வழி ஏடான "விடுதலை"யின் இன்றைய வெளியீட்டில் (05.03.08) எழுதப்பட்டுள்ள தலையங்கம்:

  இலங்கை இராணுவத் தளபதியை இந்தியாவுக்கு அழைத்து, காஷ்மீர்ப் பகுதியில் இந்தியாவுக்குச் சொந்தமான இராணுவ முகாமில் சில சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

  இலங்கை இராணுவத்துக்குப் போர்ப் பயிற்சி அளிக்கப்பட மாட்டாது என்று பல நேரங்களில் இந்தியா அளித்து வந்த உறுதிமொழிக்கு எதிரான நடவடிக்கை இது என்பதில் ஜயமில்லை.

  இலங்கை அரசுக்குச் செய்யப்படும் எந்தவித உதவியும் உறுதியாக அங்கு வாழும் தமிழர்களுக்கு எதிரானது என்பது பால பாடமாகும்.

  எதிலும் விடுதலைப் புலிகளை மட்டும் மனதில் இருத்திக் கொண்டு ஒரு வழிப் பாதையாக இந்தியா செயல்படுவது கண்மூடித்தனமானதாகும்.

  இலங்கையைப் பொறுத்தவரை அதன் அண்டை நாடுகளுடன் போர் நடத்தும் சூழல் இல்லை. இந்த நிலையில் இலங்கை ஒவ்வொரு ஆண்டும் தனது நிதி நிலை அறிக்கையில் போர்க் கருவிகளை வாங்குவதற்குத்தான் பெரும் பொருளைச் செலவழிக்கிறது. இந்த ஏற்பாடுகள் அனைத்துமே அங்கு வாழும் தமிழினத்தைப் பூண்டோடு ஒழிப்பதற்காகத்தான் என்பது இந்திய அரசுக்குத் தெரியாத ஒன்றா?

  செஞ்சோலை என்ற இடத்தில் பச்சிளம் குழந்தைகளைக் கூட குண்டு போட்டு அழித்த இலங்கை இராணுவத்தின் - மனிதநேய மற்ற மூர்க்கத்தனத்திற்குப் பிறகும்கூட, அதற்கு ஊக்கம், ஊட்டம் அளிக்கும் வகையில் இந்திய அரசு நடந்துகொள்கிறதே - இதன் பொருள் என்ன?

  சேர்பியாவிலிருந்து கொசோவோ தனிநாடாகப் பிரிந்து செல்வதாக அறிவித்ததை வரவேற்கும் இந்திய அரசு, ஈழத்தில் வாழும் உரிமைக்காகப் போராடும் மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகுவது - ஏன்?

  தமிழ்நாட்டு மக்களும், தமிழ்நாடு அரசும் ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகளைப் பல நேரங்களில் சுட்டிக்காட்டி வந்துள்ள நிலையில், அதனைச் சற்றும் பொருட்படுத்தாமல், ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்கிற முறையில் இந்தியா நடந்துகொள்ளலாமா?

  உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், மனிதநேயர்களும், மனித உரிமைச் சிந்தனையாளர்களும் இந்தியாவின் இத்தகு போக்கு குறித்து எப்படி நினைப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா?

  ஈழத்தில் தமிழர்கள் வாழும் பகுதியில் மின்சாரம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு நிலையை சிங்கள அரசு உருவாக்கி வைத்துள்ளது.

  இந்த நிலையில், தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திலிருந்து இலங்கைக்கு மின்சாரம் வழங்கப்பட உள்ளது என்கிற செய்தி வெளிவருகிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது என்று சொல்வார்களே, அது இதுதான் போலும்!

  இந்தியாவுக்கும், அண்டை நாடுகளுக்கும் போர் நடந்த காலகட்டங்களில் எல்லாம் இலங்கை அரசு இந்தியாவுக்கு எதிராகத்தான் நடந்துகொண்டிருக்கிறது என்ற உண்மைகளை நன்கு அறிந்திருந்தும், கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் சொரிந்ததைப்போல இலங்கை இராணுவத்திற்கு இந்திய இராணுவம் நேசக்கரம் நீட்டுகிறது - பயிற்சிகளை அளிக்கிறது - போர்க் கருவிகளை வாரி வழங்குகிறது.

  தமிழர்களின் உணர்வை உரிய வகைகளில் எல்லாம் வெளிப்படுத்திய பிறகும், இந்தியாவின் நிலை இதுதானா? என்று அதில் எழுதப்பட்டுள்ளது.

 15. Anonymous Says:

  நாங்கள் செத்த பாம்புகளை அடிப்பதில்தான் வீரர்கள். அதற்கெல்லாம் வேற ஆளைப் பாருங்கள்.

  இப்படிக்கு,
  இணைய திராவிட குஞ்சுகள்

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails