தமிழ்நாட்டின் கூடங்குளத்திலிருந்து மின்சாரத்தை வழங்குகிறோம்: சிறிலங்காவுக்கு இந்தியா யோசனை, தமிழன் இருட்டில் தவிக்க, தமிழனை கொல்பவனுக்கு வெளிச்சமா?

தமிழன் இருட்டில் தவிக்க, தமிழனை கொல்பவனுக்கு தமிழ்நாட்டிலிருந்தே வெளிச்சமா, எங்கு இல்லா இந்த கொடுமையை என்னவென்று சொல்ல. தமிழனை இந்தியாவிலிருந்து விரட்டுவதுதான் இதன் நோக்கமா அல்லது தமிழனின் எதிரி எல்லாம் இந்திய அரசின் நட்புகளா.


கடும் மின்சார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ள சிறிலங்காவுக்கு மின்சாரத்தை தமிழ்நாட்டிலிருந்து வழங்குவதற்கு இந்திய அரசு முன்வந்துள்ளது.
சிறிலங்காவின் மின்சார பிரச்சனைக்கு தீர்வாக தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டுவரும் மின்விநியோக திட்டங்கள் பூர்த்தியாவதற்கு 2012 ஆம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டும்.

இந்நிலையில் இந்திய அரசாங்கம் ஓராண்டினுள் சிறிலங்காவுக்குத் தேவையான முழுமையான மின்சாரத்தை வழங்க தயாராக இருப்பதாக இந்தியத் தரப்பிலிருந்து சிறிலங்காவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கூடங்குளம் அனல் மின்நிலையத்திலிருந்து தனுஷ்கோடி தலைமன்னார் ஊடாக இந்த மின்விநியோக மார்க்கத்தை அமைப்பதற்கு இந்திய மின் சக்தி நிபுணர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அந்த மின்விநியோக வழியை நிறுவிய பின்னர் மன்னாரில் மின்விநியோகத்திற்கென சிறப்பு விநியோக நிலையத்தை சிறிலங்கா அரசாங்கம் நிர்மாணிக்க வேண்டும்.

இந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஒருவருடத்தினுள் சிறிலங்காவுக்குத் தேவையான அதிகபட்ச மின்சாரத்தை வழங்க முடியும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

மின்சக்தி அமைச்சின் நிபுணர்களுடன் இது சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக அடுத்த சில நாட்களில் இந்திய மின்சக்தி வல்லுநர்கள் 10 பேர் பொழும்பு செல்கின்ற்னார்.

சிறிலங்கா அரசாங்க அறிக்கையின் படி மொத்த மக்கள் தொகையில் 75 வீதமானவர்களுக்கு மட்டுமே தற்பொழுது மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் யோசனைக்கமைய நாட்டில் மின்சாரம் தேவைப்படும் அனைவருக்கும் மின்விநியோகத்தினை வழங்க முடியும் என்று இந்திய வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails