இந்திய அரசின் இறையாண்மை தமிழர்களின் உணர்வுகளை அழிப்பதுதானா?

இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள், இலங்கை பிரச்னை என்னவென்று தெரியாமல் நாரயணன் போன்றோர் சொலவதை கேட்டு முடிவு எடுப்பது முழு பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போன்றதாகும். இவர் தமிழர் விரோத மனப்பான்மை கொண்டவர். இவர் சொல்வதை எழுதறதற்கு, ஜால்ரா அடிப்பதற்கு பல பத்திரிக்கைகள். உண்மைகளை மறைப்பதற்ககாவே தமிழனை அழிப்பதற்க்காவே முளைத்த காளான்கள் இவை.

சேதுசமுத்திரம் முதல் தமிழீம் வரை இவர்கள் முட்டுகட்டை போடுவது தமிழர் முன்னேற்த்தை தடுப்பதே ஆகும். ஆட்சி நிலைக்கனும் நினைக்கிற கருணாநிதி கூட தமிழ் மக்களின் அவல நிலையை புரிந்து கொள்ள முடிவதில்லை. யார், யாருக்க்கு எல்லாமோ பயப்படறார். நாயை கண்டு பயந்தால் அது விரட்டதான் செய்யும்.

தைரியம் இல்லாட்டி எதுவுமே யாருக்கும் பண்ண முடியாது. இதற்குதான் நாங்கள் உங்களை ஆட்சியில் அமர்த்தினோமா. தமிழ் மக்களுக்கும், தமிழுக்கும் உதவாத யாரும் ஆட்சியில் வரவிட மாட்டோம். அடுத்த தேர்தலில் எங்கள் வாக்கு பயமறியா, தமிழனுக்கு உதவும் தமிழனுக்கே.

Posted in |

1 comments:

  1. Anonymous Says:

    http://thozharperiyar.blogspot.com/2008/02/blog-post_21.html

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails