யூதர்களை ஹிட்லர் படுகொலை செய்த போது அதனை உள் நாட்டு விவகாரமென உலகம் பார்த்துக் கொண்டிருக்கவில்லை

தமிழகத்தில் தற்போது இலங்கைத் தமிழ் மக்களுக்காக எழுந்துள்ள எழுச்சி யானது வெறும் தேர்தலை நோக்கியதல்ல. நாம் இலங்கையில் அல்லல்படும் தமிழ் மக்களுக்காகவே குரல் எழுப்புகிறோம் என்று தமிழக முதல்வரின் புதல்வியும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கேசரி வார இதழுக்கு வழங் கிய விசேட செவ்வியில் தெரிவித்தார்.

""இலங்கையிலுள்ள தமிழர்களின் விவ காரம் உள்நாட்டு விவகாரம் என்பதை ஏற் றுக் கொள்கிறோம். ஆனால் அதற்காக நாம் ஒதுங்கியிருக்க முடியாது. நாஸி முகாம்களில் யூதர்களை ஹிட்லர் படுகொலை செய்த போது அதனை உள் நாட்டு விவகாரமென உலகம் பார்த்துக் கொண்டிருக்கவில்லை.

அந்த வகையில் இலங்கையில் தமிழர்கள் பாதிக்கப்படு வது உள்நாட்டு விவகாரமாக இருந்தா லும் கூட அது குறித்து நாம் கவலை கொள்ள வேண்டியுள்ளது'' என்றும் அவர் தமது செவ்வியில் குறிப்பிட்டார்.

தமிழீழ மக்களையும் விடுதலைப் புலிக ளையும் இணைத்து இந்த பிரச்சினை களை

திசை திருப்புவதற்கு இலங்கை அரச தரப்பு ஜெயலலிதா போன்ற பலரும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். தமிழகத்தில் குரல் எழுப்பப்படுவதற்கு முக் கியமாக அமைவது, இலங்கையில் அவதிப் படும் அப்பாவி குழந்தைகளுக்காக, பெண்க ளுக்காக முதியோர்களுக்காகவுமேயாகும்.

இதற்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. விடுதலைப் புலிகள் அவர்களுடைய போராட்டத்தை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அது எமது நோக்கமுமல்ல'' என்றும் அவர் குறிப்பிட்டார்.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails