நாள் 3 - ஈழத்தமிழர்களை பாதுகாக்க தமிழ் வலைப்பதிவர்கள் தொடர் போராட்டம்

உங்களின் அர்ப்பணிப்புகளுக்கு மிக்க நன்றி. இந்த அளவு வரவேற்பு இருக்கும் என நினைத்திருக்கவில்லை. இந்த போராட்டத்தின் இரண்டே நாட்களில் ஏறக்குறைய நாம் 50 பதிவுகளை நெருங்கி விட்டோம். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ஈழதமிழர்களுக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவை நினைத்து. உங்கள் அனைவரையும் இரு கரம் கூப்பி வணங்குகிறேன். இதே ஆதரவை தொடர்ந்து கொடுத்திட வேண்டுகிறேன் எப்பொதும். இந்த தொடர் போராட்டம் தொடர்ந்து ஒரு வார காலம் நடைபெறும் (18 Oct 08 முதல் 24 oct 08) வரும் வெள்ளி வரை தொடரும்.

அனைத்து படைப்புகளுமே ஈழதமிழரின் இன்றைய நிலைமைகளை அப்படியே படம் பிடித்து காட்டுகின்றது. ஈழமககளின் போராட்டத்திற்கு வலைப்பதிவர்களின் பங்களிப்பு என்ன என்று இனி யாரும் கேட்க முடியாது. இரு நாட்களில் தமிழ்மணத்தை நிரப்பி விட்டீர்கள். அனைத்து பெரும்பாலான சூடான பதிவுகளும் ஈழதமிழர்கள் பற்றியதே.

கண்டிப்பாக புதியவர்களுக்கு ஈழதமிழர் படும் துன்பங்களை மிக அழகாக விளக்கியிருக்கிறிர்கள். ஆனால் தமிழ் மணத்துடன் நம்து பணி முடிவடைந்து போவதில்லை. இதுதான் ஆரம்பம்.

அடுத்த கட்டமாக அனைத்து இடுகைகளையும் நாம் ஆங்கில மொழியாக்கம் செய்ய வேண்டும். அதற்கு தமிழ் ஆங்கில புலமை மிக்கவர்களின் உதவி தேவை. தமிழின உணர்வாளராக, உண்மையானவராக இருந்தால் இன்னும் நன்று. சற்று கடினமான வேலைதான் ஆனால் முயன்றால் முடியாதது இல்லை.


வலைப்பதிவர்களின் பங்களிப்புகளை இங்கு காணலாம்.

http://thamilar.blogspot.com/2008/10/blog-post_18.html

இந்த வாரம் உங்களால் முடிந்த அளவு ஈழதமிழர்கள் படும் கொடுமைகள் பற்றி எழுதுங்கள் அல்லது ஒரு சிறிய கண்டனமாவது தெரிவித்த்தால் குட போதுமானது. நாமெல்லாம் ஈழதமிழர்களுக்கு பாதுகாப்பாக உள்ளோம் என்று மத்திய அரசுக்கும், சிங்களத்துக்கும் என்றும் நினைவில் இருக்க வேண்டும்.

வலைபதிவு இல்லாதவர்கள், பதிவுகள் இட நேரமில்லாதவர்கள் உங்கள் கண்டனத்தை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கவும்.

ஈழதமிழர்களுக்காக போராடுவதில் பெருமை படுவோம்.

உண்மை வெல்லும்.

நன்றி...

பி.கு நாம் நமது போராட்ட நாட்களை இந்திய நேரப்படியே ஆரம்பிப்போம். ஏதும் உங்கள் இடுகைகள் விடுபட்டால் தயவு செய்து பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் இங்கே

http://thamilar.blogspot.com/2008/10/blog-post_18.html

Posted in |

2 comments:

  1. Unknown Says:

    Please add the following to ur list
    Noam Chomsky,சர்வதேச ஊடகங்கள் மற்றும் ஈழப்போராட்டம்


    http://crashonsen.blogspot.com/2008/01/noam-chomsky.html

  2. Anonymous Says:

    ஈழப்போராட்டம் வெற்றி பெற எனது வாழ்த்துகள்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails