சிங்களன் உனக்குப் பங்காளி;தமிழன் உனக்குப் பகையாளியா?

இந்திய அரசே சிங்கள அரசுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1500 கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளாய்! இத் தொகையை சிங்கள அரசு ஆயுதம் வாங்குவதற்குத்தான் பயன்படுத்தும் என்று தெரிந்தே, நிதி கொடுத்தாய்! ஆனால், பொருளாதார முற்றுகையில் சிக்கித் தவிர்க்கும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு வழங்கத் திரட்டப்பட்ட உணவு,உடை,மருந்துகளை செஞ்சிலுவைச் சங்கத்தின் வழியாக அனுப்பத் தடை போட்டாய்!

சிங்களப் படைக்குப் போர்க்கப்பல்,நவீனப்படைக்கருவிகள்,ரேடார் கருவிகள்,வெடி மருந்துகள் வழங்கியதுடன் பயிற்சி அழிக்கவும் 256 படைத்துறையினரையும் அனுப்பி உள்ளாய்!

ஈழத் தமிழர்களைக் கொல்வதற்குத் தானே இவை அனைத்தையும் கொடுத்தாய்!
சிங்களன் உனக்குப் பங்காளி;தமிழன் உனக்குப் பகையாளியா?

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails