தமிழ் வலைப்பதிவர்கள் தொடர் போராட்டம் ஆரம்பம், ஈழத்தமிழர்களை பாதுகாக்க

இந்த தொடர் போராட்டம் நாளை முதல் தொடர்ந்து ஒரு வார காலம் நடைபெறும் நாளை(18 Oct 08-24 oct 08) முதல் அடுத்த வெள்ளி வரை தொடரும்.

இந்த வாரம் உங்களாம் முடிந்த அளவு ஈழதமிழரை படும் கொடுமைகள் பற்றி எழுதுங்கள் அல்லது ஒரு சிறிய கண்டனமாவது தெரிவித்த்தால் குட போதுமானது. நாமெல்லாம் ஈழதமிழர்களுக்கு பாதுகாப்பாக உள்ளோம் என்று மத்திய அரசுக்கும், சிங்களத்துக்கும் என்றும் நினைவில் இருக்க வேண்டும்.

வலைபதிவு இல்லாதவர்கள் உங்கள் கண்டனத்தை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கவும்.

ஈழதமிழர்களுக்காக போராடுவதில் பெருமை படுவோம்.

உண்மை வெல்லும்.

நன்றி...

Posted in |

60 comments:

  1. தமிழச்சி Says:

    நல்ல சிந்தனை!
    இனி தேவை செயல் மட்டுமே!


    தோழமையுடன்
    தமிழச்சி
    http://tamizachi.com/

  2. தேவன் Says:

    நல்லது வாழ்த்துக்கள்!
    நானும் கரம் இணைக்கின்றேன் mike
    தமிழிச்சி அக்கா புலியை நீங்கலாகப் பார்க்கும் உங்கள் ஈழ ஆதரவுப் போக்கை சற்று விளங்கச் சொல்வீர்களா?

  3. தமிழச்சி Says:

    //புலியை நீங்கலாகப் பார்க்கும் உங்கள் ஈழ ஆதரவுப் போக்கை சற்று விளங்கச் சொல்வீர்களா?//

    தோழர் தேவன் அவர்களுக்கு முதலில் ஒரு விஷயத்தில் தெளிவான முடிவு இருக்க வேண்டும். புலி நீங்கலான போராட்டமாக ஈழ போராட்டத்தை எண்ணிவிட முடியாது.
    இவை குறித்த விவாதங்களை உண்மையான வாதங்களையும் .......... வலைபூவில் தொடலாம் என்பது என் எண்ணம்.

    Milk அவர்களுக்கு விவாதங்களை உடனுக்குடன் வெளியிட நேரம் இருக்குமா என்று
    தெரியவில்லை.

    Milk உங்கள் கருத்தென்ன?

  4. Anonymous Says:

    ஆகா!
    தமிழச்சி வந்துட்டிங்களா?
    நானும் வருகிறேன்.

  5. Mike Says:

    நன்றி தமிழச்சி மற்றும் தேவன் அவர்களே. நாமும் இந்த அரசியல் கட்சிகள் போல் பிரிய வேண்டாம், நம்முடைய தேவை ஈழத்தமிழர்களை காப்பது. விவாதங்களை நாம் இந்த போராட்டம் முடியவும் வைத்து கொள்ளலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

  6. தமிழச்சி Says:

    //விவாதங்களை நாம் இந்த போராட்டம் முடியவும் வைத்து கொள்ளலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.//

    mike விவாதம் என்பது என்ன? விவாதம் என்றதும் ஏன் பதறுகின்றீர்கள்? அவை நமக்கு தெளிவைக் கொடுக்கலாம்.

    மனம் விட்டு கருத்துக்களை
    பரிமாறிக் கொள்ளாமல் இருப்பதால் தான் குடும்பங்களிலும் சரி சமூகத்திலும் சரி நாம் வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

    ஈழம் மிக இக்கட்டான சூழலில் இருக்கின்றது. இணையத்தில் தசாவதாரம் சூடு பிடித்ததில் பாதியளவு கூட ஈழப் பிரச்சனைகள் பேசப்படாமல் இருப்பது வெக்கக்கேடானது! மிக இழிவானது! மனிதத் தன்மை இல்லாத முண்டங்களா நாம்?

    கற்பனையில் வாழ்வதையும், யதார்த்தங்களை மறப்பதிலுமே வாழ்ந்துக் கொண்டிருக்க வேண்டுமா mike

    சொல்லுங்கள்...

    விவாதங்ளை தொடரலாமா?

  7. Mike Says:

    நிச்சயமாக விவாதத்திற்கு பயப்படவில்லை. விவாதம் என்ற பெயரில் மக்களை குழப்புவதில் யாருக்கு என்ன பிரயோசனம். முதலில் தமிழுக்கு, ஈழத்தமிழருக்கு உழைப்போம். தமிழீழம் வென்றெடுப்போம். பின்னர் நீயா, நானா போட்டு பார்த்துக்கலாமே.

  8. தமிழச்சி Says:

    //நிச்சயமாக விவாதத்திற்கு பயப்படவில்லை. விவாதம் என்ற பெயரில் மக்களை குழப்புவதில் யாருக்கு என்ன பிரயோசனம். முதலில் தமிழுக்கு, ஈழத்தமிழருக்கு உழைப்போம். தமிழீழம் வென்றெடுப்போம். பின்னர் நீயா, நானா போட்டு பார்த்துக்கலாமே.//


    இதுதான் தமிழன் புத்தி!
    என்ன சொல்கிறோம்?
    ஏது சொல்கிறோம் என்பதற்குள் தானாக எதையாவது நினைத்துக் குழப்பிக் கொள்வது?

    தேவையா மைக்?

  9. Mike Says:

    உங்களின் விவாதம் என்னவாக இருக்கும் என்பது பற்றி என்னுடைய ஆறாவது அறிவு ஓரளவு சரியாகவே ஊகித்தது. வரும் முன் காப்போம் என்பது தமிழனின் புத்தியானால் ரொம்ப சந்தோசமே.

  10. தமிழச்சி Says:

    //உங்களின் விவாதம் என்னவாக இருக்கும் என்பது பற்றி என்னுடைய ஆறாவது அறிவு ஓரளவு சரியாகவே ஊகித்தது. வரும் முன் காப்போம் என்பது தமிழனின் புத்தியானால் ரொம்ப சந்தோசமே.//

    தவறு!

    தவறான சிந்தனை எப்போதும் சரியான பாதைக்கு கொண்டுச் செல்லாது. நீங்கள் எதை ஊகித்தீர்கள் என்பது உங்களுக்குத் தான் தெரியும்!

    ஆனால் நீங்கள் ஊகித்தது தான்
    சரியானவையாக இருக்கும் என்பது சரியாக இருக்காது என்பதையாவது உங்களால் ஊகிக்க முடிகிறதா?

  11. தமிழச்சி Says:

    இலக்கியவாதிகளும், தீவிரவாதமும்! தமிழக அரசே விசாரணை நடத்து!


    http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/09/blog-post_16.html

  12. Mike Says:

    தேவனுடன் ஆரம்பித்து, இப்போது என்னுடன் விவாதமா. சரி உங்கள் விவாதத்தை ஆரம்பியுங்கள், கண்டிப்பாக இது ஈழத்தமிழருக்கான் போராட்டம் அதை திசைதிருப்பும் வகையில் உங்கள் விவாதம் இருந்தால் கண்டிப்பாக அது நிறுத்தப்படும்.

  13. தேவன் Says:

    துவங்கலாமே நான் தயாராகவே இருக்கின்றேன்.
    முதலில் நான் உங்களைக் கேட்க இருப்பது நானும் சுத்தமான பெரியார் கொள்கை வாதிதான் ஆனால் கடவுள் மறுபுக் கொள்கை எப்படி சாதீயத்தை விரட்டும் என்பதில் எனக்கு பெரிய உடன்பாடு இல்லை. (தொடர்கின்றேன்)

  14. தேவன் Says:

    சாதீய கடைப்பிடிப்பு என்பது தனிமனித அகம்பாவப் புத்தியின் வெளிப்பாடு, கடவுள் இல்லை என்ற உணர்வால் இப்படி பட்ட சிந்தனையாளனை நற்பண்பு கொள்ள வைக்க முடியும் என்று கருதுகின்றீர்களா?

  15. தமிழச்சி Says:

    இதற்கு முன்பு ஒரு லீங்க் அனுப்பி இருந்தேனே ஏன் அதை மட்டுறுத்தல் செய்து விட்டீர்கள். அதில் மிக முக்கிய சம்பவங்கள் உள்ளது. வெளியிடவும்.

  16. தமிழச்சி Says:

    ///தேவன் said...
    துவங்கலாமே நான் தயாராகவே இருக்கின்றேன்.
    முதலில் நான் உங்களைக் கேட்க இருப்பது நானும் சுத்தமான பெரியார் கொள்கை வாதிதான் ஆனால் கடவுள் மறுபுக் கொள்கை எப்படி சாதீயத்தை விரட்டும் என்பதில் எனக்கு பெரிய உடன்பாடு இல்லை. (தொடர்கின்றேன்)///

    நீங்க கேட்கிற கேள்விக்கு எங்கே போய் முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை! பெரியாரைப்பற்றி பேசவா இங்கே வந்தேன்.

    ஈழத்திற்கு எதிராக நடைப்பெறும் சதிகளை சுட்டிக் காட்டவே வந்தேன்.

  17. தமிழச்சி Says:

    //தேவன் said...
    சாதீய கடைப்பிடிப்பு என்பது தனிமனித அகம்பாவப் புத்தியின் வெளிப்பாடு, கடவுள் இல்லை என்ற உணர்வால் இப்படி பட்ட சிந்தனையாளனை நற்பண்பு கொள்ள வைக்க முடியும் என்று கருதுகின்றீர்களா?//

    தேவன் ப்ளீஸ்...

    கொஞ்சம் அமைதியாக இருங்கள்!
    பெரியாரைப்பற்றிய உங்களுடைய விளக்கத்திலேயே உங்களுக்கு
    பெரியாரைப்பற்றி எவ்வளவு
    தெரிந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன்.

    நாம் தற்போது ஈழ பிரச்சனைகளைப் பற்றியும் வலை பதிவர்களாகிய நாம் இனி என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் பேசுவோம்!

  18. தேவன் Says:

    இருந்தாலும் துவக்கம் இங்கிருந்தே ஆரம்பிக்கட்டுமே உங்கள் பதிலைத் தாருங்கள்.

  19. தேவன் Says:

    சரி துவங்குங்கள்.

  20. தமிழச்சி Says:

    //தேவன் said...
    இருந்தாலும் துவக்கம் இங்கிருந்தே ஆரம்பிக்கட்டுமே உங்கள் பதிலைத் தாருங்கள்.//

    அடங்கமாட்டிங்க போல...
    இதுல இருக்குற லீங்க்கை முதலில் படியுங்கள்.

  21. தேவன் Says:

    உங்கள் லிங்கைப் பார்ப்பதற்க்கு நெற்றிக்கண் ஏதாவது தேவையா?
    எனக்கு தெரியவில்லையே.

  22. தமிழச்சி Says:

    27- ஆம் வருட பெண்கள் சந்திப்பும், தீவிரவாதமும், கேள்விகளும்! – மீள் ஆய்வு.

    http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=262

  23. தேவன் Says:

    mike moderation mode ஐ மாற்றிவிட்டால் வேலை உங்களுக்கு இலகுவாக இருக்குமே உங்கள் நித்திரைக்கு தொல்லைகளாக அல்லவா இருக்கப் போகின்றோம் நாம்.

  24. தமிழச்சி Says:

    //எனக்கு தெரியவில்லையே.//

    http://thamizachi.blogspot.com/2008/08/blog-post_19.html

    தெரியும்
    கோப்பி செய்யுங்கள்

  25. தமிழச்சி Says:

    //தேவன் said...
    mike moderation mode ஐ மாற்றிவிட்டால் வேலை உங்களுக்கு இலகுவாக இருக்குமே உங்கள் நித்திரைக்கு தொல்லைகளாக அல்லவா இருக்கப் போகின்றோம் நாம்.//

    நாளை வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். எனக்கு பிரச்சனை இல்லை. இங்கு இரவு 12.28 ஆகிறது. நித்திரையில் இருந்து என்ன சாதித்துவிட்டோம் அவலங்களுக்கு மத்தியில் சுயத்தை கூட்டுக்குள் அடைத்துக் கொண்டு.. நமக்கு மட்டும் பாதுகாப்பான வாழ்க்கை இல்லையா?

  26. தேவன் Says:

    சரி சொல்லுங்கள் இப்பதிவில் உங்கள் கருத்தை உங்கள் பதிவு ஒன்றில் வாசித்திருக்கின்றேன் புலிகள் சகோதரக்கொலை மோசமாகச் செய்தவர்கள் என்ற வகையில் அது என்னை மிகக் கொதிப்படையச் செய்துவிட்டது புலிகளோடு வாழந்தவர்கள் நாங்கள் வெறும் இரண்டு மூன்று வருட அநுபவம் உடையவர்கள்தான் இந்த இந்த மாற்றுக் குழுக்களின் கூட்டம் இவர்கள் கதை சொல்கின்றார்கள் எமக்கு

  27. Mike Says:

    மாற்றி விட்டேன், நீங்கள் விவாதம் தொடருங்கள்.

  28. தேவன் Says:

    எனக்கு எதுவும் பறவாய் இல்லை இங்கு நேரம்11.31 pm

  29. தமிழச்சி Says:

    சாட்சியங்கள் ஏன் அழிக்கப்படுகின்றன?

    http://thamizachi.blogspot.com/2008/08/blog-post_22.html

  30. தமிழச்சி Says:

    //தேவன் said...
    எனக்கு எதுவும் பறவாய் இல்லை இங்கு நேரம்11.31 pm//

    தோழர் தேவன் முதலில் நான் கொடுக்க வேண்டிய இணைப்புக்கள் அனைத்தையும் கொடுத்து விடுகிறேன். படித்ததும் விவாதிக்கவும்.

    நன்றி

  31. தமிழச்சி Says:

    ஈழமும், இந்திய ஜனநாயகக் கைக்கூலிகளும்...!


    http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=287

  32. தேவன் Says:

    எனக்கு விளங்கவில்லை உங்கள் கேள்வி.
    துரோக அம்பை எய்தவர்கள் புலியை எதிர்க்கும் அரசுகள் அந்த அம்புகளுக்கு தண்டனை வளங்கப்படுவதை பயங்கரவாதம் என்று பிதற்றுகின்றார்கள். உண்மையில் அதற்க்கு காலான இவர்கள் செயல்கள் என்ன என்று செல்வதாம்.

  33. தமிழச்சி Says:

    27 -ஆம் வருட பெண்கள் சந்திப்பும், பாலீயல் கலப்படங்களும்...!


    http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=298

  34. தமிழச்சி Says:

    //எனக்கு விளங்கவில்லை உங்கள் கேள்வி.//

    புரியவில்லை?

    எந்த இணைப்பை படித்ததால் வந்த கேள்வி என்று சுட்டிக்காட்டுங்கள் தோழர்!

  35. தமிழச்சி Says:

    பாரீசில் தாதாக்கள் நடத்திய 1983-2008நெடுங்குருதி..!


    http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=258

  36. தேவன் Says:

    நான் UK இற்க்கு வரும் வரையும் தமிழீழத்தில் தான் வாழ்ந்தேன் எனவே எனக்கு அவர்களை பற்றி அறிவு இருக்கின்றது. உங்கள் கருத்துக்களை என்னைப் போலவே வையுங்கள் லிங்குகளுக்குள் போய் படிக்கச் செல்லாதீர்கள். அதற்க்கு நேரம் போதாது.

  37. தமிழச்சி Says:

    தீவிரவாதிகளை ஒன்றிணைக்கும் ´பெண்கள் சந்திப்பு´ தடை செய்யப்பட வேண்டும்!

    http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=284

  38. தேவன் Says:

    எனக்கு விளங்கவில்லை உங்கள் கேள்வி.//

    புரியவில்லை?

    எந்த இணைப்பை படித்ததால் வந்த கேள்வி என்று சுட்டிக்காட்டுங்கள் தோழர்!

    17 October 2008 15:43

    மன்னிக்க வேண்டும் வெறும் தலையங்கத்தைப் படித்தால் சொன்னேன் இப்ப புரிகின்றது லிங்கில் போய் படிக்கச் சொல்கின்றீகள் என்று.

  39. தேவன் Says:

    நீங்கள் தருபவையில் பல ஏற்க்கனவே படித்திருக்கின்றேன் தெரியும் அவற்றைப் பற்றி நான் கேட்ப்பது உங்கள் பார்வையில் புலிகள் பற்றி ஏன் அந்த அவதூறு செய்யப்பட்டது அதை செல்வீர்களா?

  40. தேவன் Says:

    நாளை தொடருவோமா?

  41. தமிழச்சி Says:

    //நான் UK இற்க்கு வரும் வரையும் தமிழீழத்தில் தான் வாழ்ந்தேன் எனவே எனக்கு அவர்களை பற்றி அறிவு இருக்கின்றது. உங்கள் கருத்துக்களை என்னைப் போலவே வையுங்கள் லிங்குகளுக்குள் போய் படிக்கச் செல்லாதீர்கள். அதற்க்கு நேரம் போதாது.//

    நீங்கள் சொல்வது புரிகின்றது.

    ஆனால் எதையும் ஆதாரத்தோடு
    சமர்பித்து விவாதத்தை தொடங்கினால் நல்லது என்று எனக்கு தோன்றுகிறது.

    அதுவுமில்லாமல் mike அவர்கள் நல்ல தலைப்பில் பதிவு போட்டிருக்கின்றார். இச்சூழலில் ஈழத் தமிழர்களுக்காகவும் அவர்களுக்கு எதிராக நடக்கும் மனித உரிமை மீறல்களையும் வலைபதிவர்களாகிய நாம் எவ்வாறு தமிழக அரசுக்கு விளங்க வைக்க முடியும் என்பதை கவனிக்க வேண்டும்.

    இந்திய அரசாங்கம் இங்கை இராணுவத்தினருக்கு அசாம் மாநிலத்தில் பயிற்சி அளித்தது மற்றும் சிங்கள இராணுவத்தினருக்கு ஆயுதம் விநோகம் செய்வது அல்லாமல் புலம் பெர்ந்திருக்கும் தமிழர்கள் மத்தியில் புலியெதிர்ப்பு பிரச்சாரத்தை ஊக்குவிக்கிறார்கள்.

    சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டைச் சேர்ந்த இலக்கியவாதிகள் மற்றும் தமிழ்நாட்டை சே ர்ந்த பெண்களை புலியெதிர்ப்புக் கூட்டம் பலவகையில் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பதை பற்றியே இனி விவாதம்

  42. தமிழச்சி Says:

    // நாளை தொடருவோமா?//

    பிரான்ஸ் நாட்டு நேரப்படி இரவு
    7.00 க்கு முடியுமா?

  43. தமிழச்சி Says:

    தோழருக்கு இரவு வணக்கம்

    நாளை சந்திப்போம்.

  44. தேவன் Says:

    நன்றி உங்கள் ஊக்கம் தரும் செயற்பாடுகளுக்கு எல்லோர் கரங்களும் இணைய வேண்டிய தருணமிது மீண்டும் நாளை சந்திப்போம்.

  45. தேவன் Says:

    நாளை தொடருவோமா?//

    பிரான்ஸ் நாட்டு நேரப்படி இரவு
    7.00 க்கு முடியுமா?

    17 October 2008 சரி இரவு 7.00 pm தொடருவோம் நன்றி!

  46. Anonymous Says:

    கேரளா வில் இருந்து சரக்கு ரயில் மூலம் அழகான பெண்களை அழைத்து வந்து ..பணக்காரர்களுக்கு விருந்து கொடுத்தார் அந்த பெரியார் பற்றிய பேசுகிறீர்கள்?
    இன்று அவர் இருந்தால் தமிழச்சியை நன்கு சுவைத்திருப்பார்.

  47. Anonymous Says:

    //சில செய்திகள் கூறும் உண்மையும்--புரிந்தும் நடிக்கும் பொறம்போக்குகளின் அரசியலும்//

    1. இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்குவதும் ஒரு வகை போர் கொள்கைதான். அதுமட்டுமல்ல, இந்தியப் பெருங்கடலில் ஆதிக்க சக்தியாகத் திகழ்வதற்கு ஈழ தமிழ் மக்களை அழிக்கும் இந்த வழிமுறையைத் தொடர்ந்து பின்பற்றுவோம்.(அப்போ தமிழர்கள் மனிதர்கள் இல்லை எருமைகள்)

    ----மத்திய இராணுவ அரசாங்க அமைச்சர் எம்.எம்.பல்லம் ராஜு

    2.நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பான நடவடிக்கைகள் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டவை .எதையும் செய்யவோ, செய்யுமாறு மத்திய அரசிடம் கேட்கவோ கூடாது
    ----காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி(அப்போ 40 எம்பி சீட்டு கொடுத்தாலும் நாங்க வேற நாடு தானே!)

    ஆக இந்த செய்திகள் உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான் தமிழர்களை நாங்கள் எருமை மாடுகளிலும் கேவலமாகவே கருதுகிறோம்!.. ஆரிய 'இந்தி'யாவை எதிர்த்து எதுவும் உங்களால் செய்ய முடியாது!
    நெய்வேலியில் இருந்து நிலக்கரியை திருடி அண்டை கருநாகத்தானுக்கும் கொலையாளிக்கும் மின்சாரம் என்ற பெயரில் எவன் கொடுப்பது?நரிமணத்தில் இருந்து இயற்கை எரிவாயுவை திருடுபவன் யார்? எல்லாம் 'இந்தி' அரசுதானே? சுனாமியால் தமிழகம் துயருற்ற போது 5 பைசா கூட கொடுக்காமல் வந்து உதவி செய்ய இருந்த நாடுகளையும் தடுத்து.. நேரடியாக 5 கப்பல்கள் மூலம் உங்கள் ஆரிய சகோதரனான சிங்களவனுக்கு உதவி பொருட்கள் அனுப்பியவர்தானே நீங்கள்!நாங்கள் இலங்கை தமிழர்களுக்கு குருவி போல சேர்த்த பொருட்கள் எல்லாம் இன்று குப்பையாக மாறிவிட்டன!தமிழனின் சொரனை எங்கே போனது?

    உங்கள் வளத்துக்கு அப்துல் கலாம் தேவை படுக்கிறார் ,பாகிஷ்தானோடு சண்டை போட மேஜர் சரவணன் போன்ற ஆள்கள் தேவை படுகிறார்கள்,கொடி நாள் வசூலில் தமிழகம் முதலில் நிற்க ஆசைபடுகிறீர்கள்! ஆனால் நாங்கள் உங்களிடம் எதையும் கேட்க கூடாது!

    ஆக இங்கு தமிழ்நாட்டில கட்சி நடத்தும் அனைவருக்கும் தெரியும் நாங்கள் எச்சில் இலைதான் என.
    தமிழ் இனத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் தமிழகத்தின் அனைத்து தேர்தல் அரசியல் கட்சிகளும் தில்லி ஏகாதிபத்தியத்தின் கைகூலிகள்தான் எனவும், தில்லி ஏகாதிபத்தியத்தின் கூட்டுக் கொள்ளையர்கள் தான் எனவும் தற்போதைய சமூக நிகழ்வுகள் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.

    இந்த 'இந்தி'யத் தேசியத்தில் இருந்து கொண்டு, தமிழருக்கு எதிராக செயல்படும் அமைப்புகளை தேர்தல் அரசியல் கட்சிகளை தமிழ் மக்கள் இனங்காண வேண்டும். மாற்றத்திற்கு வழி தமிழ்த் தேசியமே என்பதை உணர வேண்டும். 'இந்தி'யத் தேசியம் பேசி இனியும் ஏமாந்து விடக் கூடாது. தமிழர்களே! நன்றாக யோசித்து பாருங்கள். எங்கோ வடநாட்டில் இருக்கும் பனியாவின் மகன் மகளுக்கெல்லாம் முடி சூட்டு விழா நடத்தும் கங்காணிக் கட்சியில் இருந்து கொண்டு எம் தமிழினத்திற்கு துரோகம் இழைக்காதீர்.

    சிங்கின் தலைப்பாகை பிரச்சனைக்கு பிரான்சு அதிபரோடு கடிந்து கொண்ட மன்மோகன்'சிங்கு' தமிழனின் தலை போகும் பிரச்சனைக்கும் பம்மாத்து காட்டுவதன் நோக்கமேன்ன?ஆரியன் சிங்களவனின் பங்காளி! 6 1/2 கோடி மக்களின் உணர்வுகளை கொச்சை படுத்துகிற ஒரு தேசத்தில் இன்னும் நாம் இருக்கத்தான் வேண்டுமா? தமிழன்னை நமக்கு எந்த குறையையும் வைக்கவில்லை பிறகு ஏன் நாம் இவர்களிடம் கை ஏந்தி கொண்டு? நம் உணர்வுக்கும் சிந்தனைக்கும் தடை போட இவர்கள் யார்?சுடு சொரனை உள்ள அனைத்து தமிழர்களும் சிந்திப்பீர்!

  48. Anonymous Says:

    சில செய்திகள் கூறும் உண்மையும்--புரிந்தும் நடிக்கும் பொறம்போக்குகளின் அரசியலும்

    1. இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்குவதும் ஒரு வகை போர் கொள்கைதான். அதுமட்டுமல்ல, இந்தியப் பெருங்கடலில் ஆதிக்க சக்தியாகத் திகழ்வதற்கு ஈழ தமிழ் மக்களை அழிக்கும் இந்த வழிமுறையைத் தொடர்ந்து பின்பற்றுவோம்.(அப்போ தமிழர்கள் மனிதர்கள் இல்லை எருமைகள்)

    ----மத்திய இராணுவ அரசாங்க அமைச்சர் எம்.எம்.பல்லம் ராஜு

    2.நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பான நடவடிக்கைகள் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டவை .எதையும் செய்யவோ, செய்யுமாறு மத்திய அரசிடம் கேட்கவோ கூடாது
    ----காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி(அப்போ 40 எம்பி சீட்டு கொடுத்தாலும் நாங்க வேற நாடு தானே!)

    ஆக இந்த செய்திகள் உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான் தமிழர்களை நாங்கள் எருமை மாடுகளிலும் கேவலமாகவே கருதுகிறோம்!.. ஆரிய 'இந்தி'யாவை எதிர்த்து எதுவும் உங்களால் செய்ய முடியாது!
    நெய்வேலியில் இருந்து நிலக்கரியை திருடி அண்டை கருநாகத்தானுக்கும் கொலையாளிக்கும் மின்சாரம் என்ற பெயரில் எவன் கொடுப்பது?நரிமணத்தில் இருந்து இயற்கை எரிவாயுவை திருடுபவன் யார்? எல்லாம் 'இந்தி' அரசுதானே? சுனாமியால் தமிழகம் துயருற்ற போது 5 பைசா கூட கொடுக்காமல் வந்து உதவி செய்ய இருந்த நாடுகளையும் தடுத்து.. நேரடியாக 5 கப்பல்கள் மூலம் உங்கள் ஆரிய சகோதரனான சிங்களவனுக்கு உதவி பொருட்கள் அனுப்பியவர்தானே நீங்கள்!நாங்கள் இலங்கை தமிழர்களுக்கு குருவி போல சேர்த்த பொருட்கள் எல்லாம் இன்று குப்பையாக மாறிவிட்டன!தமிழனின் சொரனை எங்கே போனது?

    உங்கள் வளத்துக்கு அப்துல் கலாம் தேவை படுக்கிறார் ,பாகிஷ்தானோடு சண்டை போட மேஜர் சரவணன் போன்ற ஆள்கள் தேவை படுகிறார்கள்,கொடி நாள் வசூலில் தமிழகம் முதலில் நிற்க ஆசைபடுகிறீர்கள்! ஆனால் நாங்கள் உங்களிடம் எதையும் கேட்க கூடாது!

    ஆக இங்கு தமிழ்நாட்டில கட்சி நடத்தும் அனைவருக்கும் தெரியும் நாங்கள் எச்சில் இலைதான் என.
    தமிழ் இனத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் தமிழகத்தின் அனைத்து தேர்தல் அரசியல் கட்சிகளும் தில்லி ஏகாதிபத்தியத்தின் கைகூலிகள்தான் எனவும், தில்லி ஏகாதிபத்தியத்தின் கூட்டுக் கொள்ளையர்கள் தான் எனவும் தற்போதைய சமூக நிகழ்வுகள் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.

    இந்த 'இந்தி'யத் தேசியத்தில் இருந்து கொண்டு, தமிழருக்கு எதிராக செயல்படும் அமைப்புகளை தேர்தல் அரசியல் கட்சிகளை தமிழ் மக்கள் இனங்காண வேண்டும். மாற்றத்திற்கு வழி தமிழ்த் தேசியமே என்பதை உணர வேண்டும். 'இந்தி'யத் தேசியம் பேசி இனியும் ஏமாந்து விடக் கூடாது. தமிழர்களே! நன்றாக யோசித்து பாருங்கள். எங்கோ வடநாட்டில் இருக்கும் பனியாவின் மகன் மகளுக்கெல்லாம் முடி சூட்டு விழா நடத்தும் கங்காணிக் கட்சியில் இருந்து கொண்டு எம் தமிழினத்திற்கு துரோகம் இழைக்காதீர்.

    சிங்கின் தலைப்பாகை பிரச்சனைக்கு பிரான்சு அதிபரோடு கடிந்து கொண்ட மன்மோகன்'சிங்கு' தமிழனின் தலை போகும் பிரச்சனைக்கும் பம்மாத்து காட்டுவதன் நோக்கமேன்ன?ஆரியன் சிங்களவனின் பங்காளி! 6 1/2 கோடி மக்களின் உணர்வுகளை கொச்சை படுத்துகிற ஒரு தேசத்தில் இன்னும் நாம் இருக்கத்தான் வேண்டுமா? தமிழன்னை நமக்கு எந்த குறையையும் வைக்கவில்லை பிறகு ஏன் நாம் இவர்களிடம் கை ஏந்தி கொண்டு? நம் உணர்வுக்கும் சிந்தனைக்கும் தடை போட இவர்கள் யார்?சுடு சொரனை உள்ள அனைத்து தமிழர்களும் சிந்திப்பீர்!

  49. யாழ் Yazh Says:

    சாட்டையடி கேள்விகள்... நன்றி தமிழ்தேசியன்

  50. தமிழச்சி Says:

    தேவன், மைக் இருக்கின்றீர்களா? விவாதம் தொடரலாமா?

  51. தேவன் Says:

    ????????????
    தமிழிச்சி!

  52. தமிழச்சி Says:

    test

  53. Mike Says:

    விவாதம் தொடருங்கள், உங்களுக்காக settings மாற்றப்பட்டுள்ளது.

  54. தமிழச்சி Says:

    தோழர் தேவன் அவர்களுக்கு

    இனி விவாதித்துக் கொண்டிருப்பதில் பயன் இல்லை! இனி என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

    நீங்களும் நானும் மட்டுமே விவாதித்துக் கொண்டிருக்கின்றோம். சகபதிவர்களைக் காணவில்லை.

    ஒரு வேளை நடிகர் நடிகைகள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஞாயிற்றுக் கிழமை போராட்டம் செய்யப் போகிறார்களாம். அதன் பிறகு வேண்டுமானால் என் அபிமான
    நடிகர் இப்படிச் சொன்னார், அப்படிச் சொன்னார் என்று ஈழப்பிரச்சனை சூடுபிடிக்கலாம்.

  55. தமிழச்சி Says:

    //Mike said...
    விவாதம் தொடருங்கள், உங்களுக்காக settings மாற்றப்பட்டுள்ளது.//

    நன்றி மைக்

  56. தமிழச்சி Says:

    மைக் இப்பதிவுடன் மேலும் 5 பதிவுகள் போட்டிருக்கிறீர்கள். யாரும் பின்னூட்டம் கூட போடவில்லை! அணுகுமுறையை மாற்றிப் பார்க்கலாம் அல்லவா?

  57. Mike Says:

    கொஞ்சம் வேலை உள்ளது, உங்கள் கருத்துகளை கூறுங்கள், 1 மணி நேரம் கழித்து பேசலாம்

  58. தேவன் Says:

    தமிழிச்சி வந்துவிட்டீர்களா?

  59. தேவன் Says:

    தமிழிச்சி யாழ்களத்தில் விவாதம் செய்தல் இலகுவாக இருக்கும் கூடவே பலரும் பங்கேற்பார்கள் முடியுமா அங்கே இதை மேற்க்கொள்ள?

  60. Mike Says:

    மன்னிக்கவும் முக்கிய அலுவல் ஒன்று இருந்தது. சரி என்ன அணுகு முறையை மாற்றுவது,தமிழ் இன அழிப்பு மன்னன் மகிந்தவுக்கு சாதகமாக பேசணுமா அல்லது சோ, சு.சாமி-க்கு காவடி எடுக்கனுமா

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails