ராஜபக்சேயை கைது செய்ய கோரி புதிய தமிழகம் கட்சியினர் உண்ணாவிரதம்

இலங்கை அதிபர் ராஜேபக்சே, முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா ஆகியோரை போர் குற்றவாளிகாக அறிவித்து கைது செய்ய வேண்டும். இலங்கையில் நடைபெறும் அதிபர் தேர்தலை ரத்து செய்யக்கோரி உலக நாடுகள் மற்றும் ஐ.நா. சபையை வலியுறுத்தியும், ஈழத்தமிழர்கள் பகுதிகளில் சிங்களர்கள் குடியேறுவதை கண்டித்தும் இன்று காலை புதிய தமிழகம் கட்சி சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே உண்ணாவிரதம் நடைபெற்றது. உண்ணாவிரதத்துக்கு புதிய தமிழகம் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் கோ. சங்கர் தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட செயலாளர் அய்யப்பள் முன்னிலை வகித்தார். 

உண்ணா விரதத்தில் புதிய தமிழகம் கட்சியினர் பெரியார் திராவிடர் கழகத்தினர் தமிழக ஒடுப்பட்டோர் விடுதலை இயக்கத்தினர், பெரியார் தத்துவமைய நிர்வாகிகள், தமிழர் தேசிய இயக்கத்தினர் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்குழு உண்ணாவிரத்தை திருச்சி வேலுசாமி முடித்து வைக்கிறார்.

புத்தாண்டு தினத்தன்று புதிய தமிழகம் கட்சியினர் திருச்சியில் இன்று உண்ணாவிராதம் இருந்தால் பரபரப்பு ஏற்பட்டது. Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails