எஸ்.ஐ படுகொலையும், பத்திரிக்கைகளின் மடத்தனமும்


இந்த படுகொலைக்கு காரணமனவர்களை உடனே கைது செய்து தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை. ஆனால் அமைச்சர்கள் மேல் பழி போடுவது பத்திரிக்கை விற்பனையினை மேலும், மேலும் அதிகரிக்க செய்திகளினை திரித்து கூறுவது போன்றவைகளுக்கே பத்திரிக்கைகள் கண்ணும் கருத்துமாக உள்ளன.


கண்டிப்பாக அமைச்சரின் காரில் முதலுதவிக்கான எந்த வசதியும் கிடையாது, அதுவும் ஆம்புலன்ஸ் வர நேரம் ஆகியதால் இவரே அவருடைய பாதுகாப்பு வாகனத்தினை அனுப்பி முடிந்த வரை போராடியுள்ளார்.


 இது மாதிரி கூலிப்படைகளை உடனடியாக கண்டறிந்து களைய வேண்டும்.   அதுவும் ஒரு அதிகாரியினை கடமையில் இருக்கும் போது கொல்ல துணிந்த இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது தைரியம்.


காவல் துறையும், சட்டமும் தனது கடமையினை செய்ய வேண்டும். வெறும் தமிழின உணர்வாளர்களை அழிப்பதில் குறியாக இருக்கும் இந்த கருணாநிதி அரசு  எதில் கவனமாக இருக்க வேண்டுமோ அதில் கோட்டை விடுகிறது.


ஒருவரின் கொலையினை வீடியோவில் பார்த்தற்கே நம்மால் தாங்க முடியவில்லை, எப்படி நமது மக்களை 90,000 பேரை இது போல் கொன்ற அரக்கனை தட்டி கேட்க முடியாத கருணாநிதி அரசு ஒரு கையலாகத முடக்கப்பட்ட அரசே.

தினமலர் செய்தி
http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=719

Posted in |

4 comments:

 1. கபிலன் Says:

  "ஒருவரின் கொலையினை வீடியோவில் பார்த்தற்கே நம்மால் தாங்க முடியவில்லை, எப்படி நமது மக்களை 90,000 பேரை இது போல் கொன்ற அரக்கனை தட்டி கேட்க முடியாத கருணாநிதி அரசு ஒரு கையலாகத முடக்கப்பட்ட அரசே. "

  கண்ணுக்கு முன்னாடி உயிரோடு துடித்துக் கொண்டிருந்தவனையே வேடிக்கைப் பார்ப்பவர்கள் இவர்கள். கண்ணுக்கு எட்டாத தூரத்தில் இருக்கும் ஈழத்து உறவுகளுக்கா செய்யப் போகிறார்கள்?

 2. குப்பன்.யாஹூ Says:

  you are right, English TV channels and magazines try to increase the circulation by twisting the news. and teasing peopel'e sentiments.

  When the SI was bombed, he was almost 95% died . So when Ministers' cars reached there Vetrivel was 95% died, and there were still unused bobs were there.

  So if someone weet near by to him there was a possibility that the bombs would have blasted and the casualties would be more.

  The people and the moinsiters have used the brain at that time and not used their sentiments.

  There is no second thought that the murderers are to be punished, Vetrivel's family is to be compensated, his children education is to be taken care etc.

  But Englsih TV channels and Tamil magazines should not try to twist the news and should not play around with people's sentiments.

 3. Anonymous Says:

  கூலிப்படை மற்றும் ஏவியவர்களை தூக்கிலிட வேண்டும்.

 4. Anonymous Says: This comment has been removed by a blog administrator.
Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails