போரியல் குற்றம் மேற்கொண்டோர் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
Posted On Friday, 1 January 2010 at at 04:06 by Mike
கடந்த மே மாதம் 18 ஆம் நாள் சரணடைந்த விடுதலைப்புலிகளை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவத் தளபதிகளின் பெயர் விபரங்களையும், அதற்கு உடந்தையாக இருந்த அரச அதிகாரிகளின் விபரங்களையும் ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட சமரின் போது மே 18 ஆம் நாள் சரணடைந்த விடுதலைப்புலிகளை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவ அதிகாரிகளின் பெயர் விபரங்களை ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
இந்த அதிகாரிகள் போரியல் குற்றங்களை மேற்கொண்டவர்களாகும் என தெரிவிக்கப்படுகின்றது. பின்வரும் இராணுவ அதிகாரிகள் சரணடைந்தவர்கள் மீதான படுகொலையை மேற்கொண்டவர்களாவார்கள்.
59 ஆவது படையணியுடன் இணைந்து இயங்கிய சிறப்பு படை றெஜிமென்ட்டின் கட்டளை அதிகாரி கேணல் அதுலா கொடிபிலி, 1 ஆவது சிறப்புப்படை பற்றலியன் கட்டளை அதிகாரி மேஜர் மகிந்த ரணசிங்கா, 2 ஆவது சிறப்பு படை பற்றலியன் கட்டளை அதிகாரி மேஜர் விபுலதிலக இகலகே.
சிறப்பு படையின் கொல்ஃப் கொம்பனியின் கட்டளை அதிகாரி கப்டன் சமிந்த குணசேகரா, றோமியோ கொம்பனியை சேர்ந்த கப்டன் கவின்டா அபயசேகர, எக்கோ கொம்பனியை சேர்ந்த மேஜர் கோசலா விஜகோன், டெல்ரா கொம்பனியை சேர்ந்த கப்டன் லசந்தா ரட்னசேகரா.
மேற்கூறப்பட்டவற்றில் கோல்ஃப் மற்றும் றோமியோ கொம்பனிகள் 1 ஆவது சிறப்பு படை பற்றலியனின் கீழ் செயற்பட்டிருந்தன. எக்கோ மற்றும் டெல்ரா கொம்பனிகள் 2 ஆவது சிறப்பு படை பற்றலியனை சேர்ந்தவை.
டிவிசன் (படையணி) தர அதிகாரிகள்:
மேஜர் ஜெனரல் பிரசன்னா டீ சில்வா -59 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி
மேஜர் ஜெனரல் சிவேந்திர சில்வா -58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி
மேஜர் ஜெனரல் கமால் குணரட்னா-53 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி
கேணல் ரவிப்பிரியா -எட்டாவது நடவடிக்கை படையணியின் கட்டளை அதிகாரி
அரச தரப்பில போரியல் குற்ற்களை மேற்கொண்டவர்கள்:
அரச தலைவர் மகிந்த ராஜபக்சா
அரச தலைவர் செயலாளர் லலித் வீரதுங்கா
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சா
சிறப்பு ஆலோசகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சா
வெளிவிவகார செயலாளர் பாலித கோகன்
நன்றி சங்கதி
அப்போ சரத் பொன்சேகா?