ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்தாரா கருணாநிதி.. உண்மை என்ன தெரிந்து கொள்ளுங்கள்

வணக்கம்...

சமீபத்தில் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் தான் இரண்டுமுறை ஆட்சியை ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்திருக்கிறேன், மூன்றாவது முறையும் இழக்க தயார் என்று கூறி உள்ளார்...

பல முறை தன் ஆட்சி பறிக்கப்பட்டதை பற்றி கருணாநிதி புலம்புவதுண்டு, ஆனால் இம்முறை ஈழத்தமிழர்களுகாக ஆட்சியை இழந்தேன் என்று கூறியதால் அதை பற்றி அலச வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபட்டிருக்கோம்...


1977:
முதன்முதலில் ஜனவரி திங்கள் 31 ஆம் தேதி திமுக ஆட்சி, கருணாநிதி இரண்டாம் முறையாக முதல்வராக இருந்த பொழுது நடுவண் அரசான காங்கிரசினால் கலைக்கப்பட்டது.. அதற்கான காரணத்தை பார்போம்.
1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கபடுகிறது.. அதற்க்கு அடுத்த நாளே திமுகவின் செயற்குழுவை கூட்டி கலைஞர் தலைமையில் "ஜனநாயகத்தை பாதுகாக்கிறோம் என்று கூறி சர்வாதிகார கொற்ற குடையின் கீழ் தர்பார் நடத்திட எடுக்கப்படும் முயற்சி நாட்டுக்கு ஏற்றதுதானா" என்று தீர்மானம் நிறைவேற்றபடுகிறது... பிரதமர் இந்திரா மிகவும் கோபம் கொள்கிறார். மேல் சபையில் நடந்த ஒரு விவாதத்தில் " இந்தியாவின் கட்டுபாடற்ற தீவாய் தமிழகம் இருப்பதாய்" அறிவிக்கும் அளவிற்கு திமுகவின் ஆட்சியின் மீது கடுமையாகிறார்.. இதை அடுத்து ஜனவரி 30 ஆம் தேதி அப்போதைய கவர்னர் ஆட்சியை பற்றி நல்லவிதமாய் எடுத்துக்கூறிய பிறகும் 31 ஆம் ஜனாதிபதி ஆட்சியை கலைக்கிறார்...


இதற்க்கு நடுவே எம்.ஜி.ஆர் 1972 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டு புதிய கட்சி ஆரம்பித்து, 1973 யில் திண்டுக்கல் இடைதேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறுகிறது. 1973 ஆம் ஆண்டே எம்.ஜி.ஆர் திமுக அமைச்சரவை மீதான் 54 ஊழல் புகார்களை கொண்ட பட்டியலை மத்திய அரசிடம் அளித்தார் அதன் அடிப்படையிலும் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆட்சி கலைக்கபட்டது.. மிசாவில் திமுகவினர் கைது செய்யப்பட்டனர். அதில் இருவர் மரணமடைந்தார்கள்..


திமுக ஆட்சி கலைக்கபட்டபின் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்திரா காங்கிரசுடன், அதிமுக கூட்டணி காண்டது. 1977 மார்ச் மாதம் நடந்த அத்தேர்தலில் பிற மாநிலத்தில் காங்கிரஸ் தோற்றாலும் தமிழ்நாட்டில் மிக பெரும்பான்மையாக வெற்றி பெற்றது... அதற்க்கு பின் நடந்த சட்டமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர் இந்திரா காங்கிரஸ்யுடன் கூட்டணியில் இருந்து விலகிய பின்னும் வெகு வாக்குகள் வித்தியாசத்தில் அதே 1977 யில் வென்றார்...


72-இல் இருந்து 77-க்குள் தமிழ்நாட்டு அரசியலை ஆட்டிப்படைத்த இராஜாஜி, பெரியார், காமராசர் ஆகியத் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மறைந்தார்கள். தமிழக அரசியலில் அவர்கள் இடத்தை இட்டு நிரப்ப அவர்கள் அளவிற்குத் தகுதி பெற்றத் தலைவர்கள் இல்லை. அந்த வேளையில் எம்.ஜி.ஆரா கருணாநிதியா என்ற கேள்விதான் மக்கள் முன்னால் வைக்கப்பட்டது. மக்கள் எம்.ஜி.ஆர் அவர்களை தேர்ந்தெடுத்தார்கள்..


அன்றைய காலகட்டத்தில் ஈழத்தில் ஆய்தபோராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை... அதே ஆண்டு அங்கேயும் தேர்தல் நடந்தது, தனி நாடுதான் தீர்வு என்று கூறி அமிர்தலிங்கம் தலைமையில் இருந்த "ஒருங்கிணைந்த தமிழர் விடுதலை முன்னணி" பெருவாரியாக வெற்றிபெற்றது.. இதுதான் நடந்தது... இதில் எங்கே ஈழப்பிரச்சனை வந்தது?...இதில் எந்த இடத்தில் கருணாநிதி ஈழபிரச்ச்னைக்கு பாடுபட்டார், குரல் குடுத்தார் ஆட்சி இழந்தார் என்பதை நாம் அறிய முடியவில்லை?...


1983 ஆம் ஆண்டு தான் இலங்கை இனப்பிரச்சினை தலைதூக்கிய சமயத்தில் அவரின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.. யாரும் அவரை நிர்பந்திக்கவில்லை அவராகவே ராஜினாமா செய்தார்..அப்பொழுது வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா அரசு ராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழர்களை பாதுகாக்க தவறிவிட்டது, எத்தனையோ வெளிநாடுகளுடைய பிரச்னையை ஐக்கிய நாடுகள் சபை கவனத்திற்கு கொண்டு சென்ற ஈர்த்த இந்தியா இலங்கை தமிழர் பிரச்சனையில் பாராமுகாய் இருந்துவிட்டது, இபொழுது நண்பர் பழ.நெடுமாறனின் தியாக பயணத்தையும் தடுக்க முனைகிறது" என்று குற்றஞ்ச்சாட்டி ராஜினாமா செய்தார்... ஆனால் அடுத்த வருடத்திலேயே மேல்சபைக்கு போட்டியிட்டு மேல் சபை உறுப்பினராகிவிட்டார்... அதற்க்கு பின் 1979 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதே காங்கிரசுடன் கூட்டணி கண்டு போட்டியிட்டு அனைத்து இடங்களையும் வெற்றி பெற்ற பின் அனைத்து இடங்களையும் தோற்ற எம்.ஜி.ஆர் ஆட்சியை இந்திரா காந்தி துணையுடன் கலைத்தார் கலைஞர். ஆனால் முன்னவிட அறுதி பெரும்பான்மை பெற்று மீண்டும் எம்.ஜி.ஆர் முதல்வரானார்.

1991:
1991 ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக அதே ஜனவரி 30 ஆம் தேதியில் மூன்றாம் முறையாக முதல்வரான கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது... அதற்கான காரணத்தை பார்போம்... எம்.ஜி.யாரின் மறைவிற்கு பிறகு அதிமுக பிளவுபட்டது, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து ஜானகி அம்மாள் முதலமைச்சரானார், 24 நாட்களில் அவர் ஆட்சி கலைக்கப்பட்டது... பிளவுபட்ட அதிமுக தேர்தலை சந்தித்து, அதில் திமுக அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது... கருணாநிதி மீண்டும் முதல்வரானார்... அடுத்து வந்த பாராளுமன்ற தேர்தலில் போர்ப்ஸ் ஊழல் முக்கியமான பங்கு வகித்தது..
கருணாநிதி வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணியில் இருந்தார்.. அதிமுகவும், காங்கிரசும் கூட்டணி போட்டு அனைத்து இடத்தையும் வென்றது.

தமிழகத்தில் ஒரு இடத்தை கூட தேசியமுன்னணி பெறவில்லை.. வடமாநிலத்தில் பல இடங்களில் வெற்றி பெற்றதால் தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது வி.பி.சிங் பிரதமரானார்.. மண்டல் கமிசன் பரிந்துரையை வி.பி.சிங் அமல்படுத்தியதால் ஆன அரசியல் மாற்றத்தில் காங்கிரஸ் பின்னணியில் சந்திரசேகர் 54 எம்.பி களோடு வெளியேறியதால் வி.பி.சிங் ராஜினாமா செய்தார், சந்திரசேகர் பிரதமரானார்.. வி.பி.சிங்குடன் நெருக்கமாய் இருந்த திமுக ஆட்சியை ராஜிவ் காந்தியின் ஆசியோடு ஜெயலலிதாவிற்காக சந்திரசேகர் கலைத்தார்... அதற்க்கு அவர் சொன்ன பல காரணங்களில் ஒன்று விடுதலைபுலிகளை அடக்க தவறிவிட்டார் என்பதுதான்... அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும் எதற்காக ஆட்சி கலைக்கபட்டதென்று... மேற்சொன்ன காரணம் உண்மையா பொய்யா என்று.. ஏனெனில் விடுதலைபுலிகள் அப்போது இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் அல்ல...

ஆக 1980 ஆம் அண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியை இந்திரா காந்தி உதவியோடு கலைஞர் கலைத்ததற்கு என்ன காரணங்களோ அதே காரணம் தான் அவர் ஆட்சி 1991 ஆம் ஆண்டு ராஜிவின் உதவி கொண்டு ஜெயலலிதா கலைஞர் ஆட்சியை கலைத்ததற்கும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
அவர் ஆட்சி கலைக்கபட்டதற்கு உள்ளூர் அரசியல்.. அதிகார மாற்றங்கள்.. கூட்டணி மாற்றங்கள் என பல காரணங்கள் இருக்கிறது.. ஈழத்தமிழர்களுக்காக மட்டுமே கலைஞரின் எந்த ஆட்சியும் பறிக்கபடவில்லை என்பதே வரலாறு. இனிமேலும் கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக ஆட்சி இழந்தேன் என்று கூறுவதை தமிழ்கூறும் நல்லுலகம் நம்பக்கூடாது..


இக்கட்டுரையின் நோக்கமே ஈழத்தமிழர்கள் ஆதரவு இப்பொழுதுதான் தமிழகத்தில் பல வருடம் கழித்து எழுந்துள்ளது. அந்த எழுச்சியானது இதை போன்ற பொயுரைகளினால் இம்மியளவும் நலிந்துவிட கூடாது என்பதாலும், தமிழகத்தின் சில முக்கியமான அரசியல் வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதாலும் தான் ..


--
Thanks & Regards
karthik udaiyar.k
Accel Frontline Ltd,
Sun Support Team,
New Delhi.
+91 9717707939

Posted in Labels: |

3 comments:

 1. டவுசர் பாண்டி... Says:

  //ஈழத்தமிழர்கள் ஆதரவு இப்பொழுதுதான் தமிழகத்தில் பல வருடம் கழித்து எழுந்துள்ளது. அந்த எழுச்சியானது இதை போன்ற பொயுரைகளினால் இம்மியளவும் நலிந்துவிட கூடாது என்பதாலும், தமிழகத்தின் சில முக்கியமான அரசியல் வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதாலும் தான் ..
  //

  இந்த பின்னூட்டத்தை அனுமதிப்பீர்களோ என்னவோ தெரியாது, என் கருத்தினை பதிந்து வைக்க வேண்டியது என் கடமை..

  நான் தமிழ் நாடு முழுக்க பயணம் செய்கிறவந்தான்....நீங்கள் சொல்கிற மாதிரியான எழுச்சியோ, புரட்சியோ எங்கேயும் காணோம்....சீமானும் அவரை சுற்றிய சிலரும் ஆங்காங்கே சுய சொறிதல் போல பேசி வருகின்றனரே தவிர பொதுமகன் எவரும் இந்த பிரச்சினைகளை குறித்து ஆர்வம் காட்டுவதாய் நான் அறிந்த வரை தெரியவில்லை....

 2. Mike Says:

  நன்றி டவுசர் பாண்டி, நீங்கள் எப்படியோ அப்படியேதான் உங்கள் கருத்தும், நீங்கள் இந்த பூனூலில் வளர்ந்தவராயிருந்தால் கண்டிப்பாக் உங்கள் கண்களுக்கு எதுவும் தெரியாது, தெரியப்போவதுமில்லை.

  எங்கள் ஊருக்கு சீமான் வரும் போதும் வந்திருந்த கூட்டத்தினை பார்த்தால் இப்படி சொல்ல மாட்டிர்கள். அங்கு ஒரமாக நின்று கொண்டிருந்த நான், அனைத்து மக்களையும் நன்றாகவே கவனித்தேன். சீமானுடன் வந்தது இருவர் மட்டுமே. மற்ற அனைவரும் அவரின் அந்த உண்மையான பேச்சினை கேட்கவும், அடுத்து ஏதாவது தமிழர்களுக்கு பண்ண வேண்டும் என்ற பார்வையுடன் வந்தவர்கள். சிறியவர் முதல் முதியவர் வரை ஏறக்குறைய 10,000 க்கும் அதிகமான மக்கள் மழையிலும் நின்று கேட்டது நினைத்தால் இன்றும் பெருமையாக உள்ளது தமிழனின் அக்கறையினை நினைத்து.

 3. KPR Says:

  Nanbar Karthik,

  You have written a very good article with crystal clear facts to shut the mouth of Goebbals MuKa. Well Done! Pls try to pass over the contents to many websites for millions of our Tamil brothern to read and realise the facts.

  Anbutan,
  KPR
  Dubai

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails