சிங்கள மக்களை ஏமாற்ற முயற்சி: கொள்வனவு செய்த கப்பலை புலிகளுடையது என்கிறது அரசாங்கம்

ஸ்ரீலங்கா அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை வெற்றி பெறச் செய்வதற்காக சிங்கள மக்களை ஏமாற்ற முனைவதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான கப்பல் ஒன்றை விசேட நடவடிக்கை மூலம் கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் அந்த கப்பல் கொழும்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா அரசாங்கம் பாரிய பரப்புரைகளை மேற்கொண்டுள்ளது.
குறிப்பிட்ட கப்பல் தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல் என்பதை அரசாங்கம் ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியுமா என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்க பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த கப்பலை ஸ்ரீலங்கா கடற்படையினர் இந்தொனேசிய துறைமுகத்தில் வைத்து வெளிநாட்ட நிறுவனம் ஒன்றிடம் இருந்து கொள்வனவு செய்துள்ளமை குறித்து தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மக்கள் மத்தியில் சரிவடைந்து வரும் செல்வாக்கினை தூக்கி நிறுத்தும் நோக்கில் ஸ்ரீலங்கா அரசாங்கம் இவ்வாறான போலிப் பரப்புரைகளை மேற்கொண்டு சிங்கள மக்களை ஏமாற்ற முனைவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பணம் கொடுத்து கொள்வனவு செய்யத் கப்பலை தாங்கள் கைப்பற்றியதாக கூறுவதும் அதனை வீர சாதனையாக்கி சித்தரப்பிதும் அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தல் குறித்து கொண்டுள்ள அச்சத்தின் வெளிப்பாடே என்றும் இது போன்ற மேலும் பல போலி சாகசங்களை எதிர்வரும் நாட்களிலும் அரசாங்கம் மேற்கொள்ளக் கூடும் என்றும் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails