வேட்டைக்காரன்: தமிழ்நாடு, சுவிஸை ,டென்மார்க் தொடர்ந்து ஐரோப்பிய இளைஞர் பேரவையும் புறக்கணிப்பு
Posted On Monday, 14 December 2009 at at 05:21 by Mikeதமிழ்நாடு, சுவிஸை ,டென்மார்க் தொடர்ந்து இப்போது ஐரோப்பிய இளைஞர் பேரவையும் புறக்கணிப்பு
செய்தி:
ஒட்டுமொத்தத் தமிழ்த்தேசிய இனத்திடமும் நடிகர் விஜை பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்: ஐரோப்பிய இளையோர் பேரவை
திகதி: 13.12.2009 // தமிழீழம்
மிகப்பெரும் வேதனையுடன் உலகப்பந்தெங்கும் தமிழீழம் எனும் தணியாத தாகத்துடன் போரடிக்கொண்டிருக்கும் மக்களின் மனதில் விஜை எனும் தமிழ்த்திரையுலக நடிகருக்கு ஓர் இடம் இருந்ததென்றால் மறுப்பதற்கில்லை. ஆனால் பால் குடிக்கும் பிள்ளைகூட விஜையை நினைப்பதற்கு முன் எமது தலைவருக்கு வணக்கம் சொல்லி மாவீரர்களை வணங்கித்தான் நடிகர் விஜையான உம்மை நேரம் கிடைத்தால் சிந்திக்குமென்பதை நீர் உணரவேண்டும், என ஐரோப்பிய இளையோர் பேரவை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அன்புக்குரிய தமிழ் உறவுகளே,
சிங்கள இனவெறியர்களின் இரத்தக்கறைபடிந்த வரலாறு தெரியாமல் ஆயுதங்களை கைவிட்டு போராட்டத்தை மறந்து நட்புவலை வீசும்படி, உண்மையிலேயே இலங்கை அரசியல் வரலாறு தேரியாமல் வடிவேலு கூறுவதுயோல் சின்னப்பிள்ளைத்தனமாக பாடலுக்கு போருளமைத்துள்ளனர்.
சற்று எண்ணிப்பாருங்கள்.
நாம் கைகோர்கும் விதத்திலா சிங்களம் உள்ளது. பட்டப்பகலில் மக்கள் மத்தியில் தமிழனை அடித்துக்கொல்லும் போது தடுத்து நிறுத்தாது வேடிக்கை பார்த்து நின்றவர்கள் தான் சிங்களவர்கள். இதுமட்டுமா, நாம் அமைதி வழியில் போராட்டம் நடத்தியபோதெல்லாம் கொடுர ஆயுத வன்முறை திணிக்கப்பட்டுபோது தான் நாம் ஆயுதம் ஏந்தினோம். அதை தற்பொளுது மௌனித்துள்ளோம்.
சர்வதேசம் சரியான தீர்வு வழங்கவில்லையென்றால் மீண்டும் அவ்வாயுதங்களை கைகளில் ஏந்துவோம். ஏனெனில் 21 ஆம் நூற்றாண்டின் இனவழிப்பு வேட்டையாடும் கொடிய சிங்கள டினோசவுரியர்களிடமிருந்து எம்மைக் காக்க எமக்கு வேறு வழியில்லை. நாம் நிறுத்தவேண்டுமென்றால் நீங்கள் நிறுத்துங்கள். எம்மினத்துக்கான சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளுங்கள்.
மிகப்பெரும் வேதனையுடன் உலகப்பந்தெங்கும் தமிழீழம் எனும் தணியாத தாகத்துடன் போரடிக்கொண்டிருக்கும் மக்களின் மனதில் விஜை எனும் தமிழ்த்திரையுலக நடிகருக்கு ஓர் இடம் இருந்ததென்றால் மறுப்பதற்கில்லை. ஆனால் பால் குடிக்கும் பிள்ளைகூட விஜையை நினைப்பதற்கு முன் எமது தலைவருக்கு வணக்கம் சொல்லி மாவீரர்களை வணங்கித்தான் நடிகர் விஜையான உம்மை நேரம் கிடைத்தால் சிந்திக்குமென்பதை நீர் உணரவேண்டும்.
இப்படித்தான் எமது தலைவர் எமது தமிழ்த்தேசியத்தை சர்வதேசமயமாக்கியுள்ளார். உம்முடைய புதிய கூட்டணி உம்மை நேசித்த அனைத்து மக்களின் மனங்களையும் சீற்றத்துக்குள்ளாக்கியுள்ளது. இதற்குப்பதிலாக ஒட்டுமொத்தத் தமிழ்த்தேசிய இனத்திடமும் நடிகர் விஜை அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். அத்துடன் வேண்டாத தமிழினவழிப்புக் கும்பலுடனான தொடர்புகளை துண்டிக்கவேண்டும்.
இவை நடைபெறாத பட்சத்தில் வேட்டைக்காறன் கூட்டணிக்கெதிரான புறக்கணிப்புப் போராட்டம் தமிழ் இளையோர்களால் அனைத்துக் கிளைகளையும் ஒன்றிணைத்து சர்வதேசஅளவில் தீவிரப்படுத்தப்படும் என்பதனை அறியத்தருகிறோம்.
ஐரோப்பிய இளையோர் பேரவை
செல்வக்குமரன்
ஒருங்கிணைப்பாளர்
(ஐரோப்பிய இளையேர் பேரவை)
தமிழர்கள் வாழும் மற்றைய நாடுகளிலும் இப்பரப்புரை பின்பற்றப் படுமா ?
--ம. பொன்ராஜ்
செய்தி:
தமிழகத்தில் நாம் தமிழர் இயக்கம், தமிழ் இளையோர் பேரவை- சுவிஸ்-ஐத் தொடர்ந்து டென்மார்க் மாணவர் சமுதாயமாகிய நாமும் வேட்டைக்காரனை புறக்கணிக்கிறோம்.
எமது மதிப்புக்குரிய டென்மார்க் வாழ் தமிழ் மக்களே. இளையோர்கள் ஆகிய நாமே சினிமா, ரசிகர்கள் என்ற பொய்மை வாழ்க்கையைத் துறந்து இப்புறக்கணிப்புக்கு முன்வந்துள்ளோம்.
எமது தாயகத்தில் எமக்காக போராடியவர்களை அழித்த இந்தியக் காங்கிரஸ் நரகாசூரர்களுக்கு துணைபோகும் தமிழ்த்திரை சார் தோழர்களுக்கு நாம் பாடம் கற்பிக்க முடிவெடுத்துள்ளோம்.
அத்துடன் அந்த நாசாகாரச்செயலுக்கு செயல் வடிவம் கொடுக்கும் விதத்தில் இறக்குமதியாளர்கள் என்று புலத்தில் தம்மை அடையாளப்படுத்தும் மானமற்ற தமிழர்களை புலம்பெயர்வாழ் இளையோர் சார்பில் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். நீங்கள் இத்திரைப்படத்தை பார்ப்பதற்கு கொடுக்கும் ஒவ்வொரு டெனிஸ் குரோனரும் எமது உறவுகள் வருந்திச் சாகுவதற்காக நச்சுக்குண்டுகளை வழங்கிய, பெயரில் மட்டும் காந்தியம் பேசும் இந்திய தேசத்துக்குச் சென்றடையும் எம்பதை மறந்துவிடாதீர்கள். இவ் ஒரு திரைப்படத்தை நாம் பாக்காமல் விட்டால் தமிழ்த்தேசியம் வாழும், நாம் பார்த்தால் தமிழ்த் தேசியம் சாகும் என்று முடிவெடுங்கள். சினிமாவுக்கும் அரசியலுக்கும் என்ன சம்மந்தம்? என்று கேட்கும் தோழா, அப்படியென்றால் ஏன் எமது மக்கள் படும் துயரங்களை சினிமாவில் வெளிப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் தடைவிதித்துள்ளது? தமிழன் ஒருவனை வைத்து இசையமைத்தால் தமிழனும் சிங்களவனும் பாசமலர்களென்று கதைகூறலாம். இது தான் இன்றைய அரசியல். உறவுகளே உங்கள் மனங்களை தெளிவுபடுத்தி மதியினால் முடிவெடுங்கள் . நான் திரையரங்கம் செல்லவில்லையென்றுவிட்டு இரவில் ஒளிந்து செல்லாதீர்கள். அறிவுடைய சமுதாயமாகிய வளர்ந்துவரும் நாம் ஒன்றை மட்டும் நன்கு ஆழச் சிந்திப்போம். எமக்கான விடுதலை கிடைத்துவிட்டதா? அதை அழிக்க நினைக்கும் சக்திகள் யார்? அதற்கு நான் துணைபோகப் போகின்றேனா?
உங்கள் இளையதளபதி;: காங்கிரஸ் ஆதரவாளன்
விஐய் அன்டனி, எம் உறவுகளைக் கொண்டவர்களுக்கு பாட்டியற்றியவன்
சன் நிறுவனம்: எம்முறவுகளின் பிணத்தின்மேல் சிம்மாசனமிட்டு அரசியல் நடத்தும் கருணாநிதியின் குடும்பச்சொத்து.
வேட்டைக்காரன் தேவையா? இளைய தலைமுறையே, உனது உணர்வு செத்துவிட்டதா? மானமுள்ள தமழிச்சி ஒருத்தியின் பிள்ளையில்லையா நீ? தட்டிக்கேள் இவ் அநியாயத்தை.
தழைத்தெளும் தமிழ்த் தேசியத்தின் கூரிய கிளைகள் நாங்கள்.
தீண்டாதே
வாழ்க தமிழ்த்தேசியம்.
மாணவர் சமுதாயம் – டென்மார்க்.-
அமுதன்