சோனியாவின் கைப்பாவை தமிழின துரோகி, வை.கோவை எந்த நேரமும் கைது செய்வாராம்இந்திய தேசியத்துக்கு எதிராக பேசியதாக வைகோ எந்த நேரமும் கைதாகலாம்?

பதிந்தவர்_குயிலி ON DECEMBER 10, 2009
பிரிவு: செய்திகள்
வைகோ கேள்விஈழத்தமிழர்கள் பிரச்சனை தொடர்பாக அண்மையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்ததாக கூறப்படும் ஆட்சேபகரமான கருத்தால் அவர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் அவர் கைது செய்யப்படலாம் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் இந்திய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பலமுறை கடிதங்கள் எழுதியிருந்தார்.இந்த கடிதங்கள் அனைத்தும் ஒன்றாக தொகுக்கப்பட்டு “குற்றஞ் சாட்டுகிறேன்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டு, ராணி சீதை மன்றத்தில் கடந்த ஜூலை மாதம் 15ந் தேதி இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய வைகோ, இந்திய அரசுக்கு எதிராகவும், நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் சில கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அவர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ஆயிரம்விளக்கு பொலிஸ்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் மோகன் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த வழக்கிலும் வைகோ எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடைத்தேர்தல் நேரத்தில் வைகோ கைது செய்யப்படலாம் என்று வெளியாகி உள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி மீனகம்


Posted in Labels: |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails