பிரித்தானிய அரசின் பின்னனியுல் பிரித்தானியாவில் சுதந்திர தமிழ் ஈழத்திற்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு

தமிழ் பேசும் மக்களை தன் மானத்தோடு அவர்களது தாயகத்தில் வாழவைக்க வேண்டிய
பொறுப்பும் கடமையும் புலம் பெயர் தமிழ் பேசும் மக்களின் கைகட்கு வந்துள்ள
நிலையில், பிரித்தானியாவில் சுதந்திர தமிழ் ஈழத்திற்கான கருத்துக்கணிப்பு
வாக்கெடுப்பு (30.01.2010 ) சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாகவும், தமது பூர்வீக
தாயகத்தில், சுயநிர்ணய உரிமையுடன் வாழவைக்கப்பட வேண்டுமேயானால்
வட்டுகோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையிலான தமிழீழத்தில்தான் அவர்கள்
சுதந்திரமாக வாழமுடியும்.

தற்சமயம் தமிழ் பேசும் மக்களின் போராட்ட வடிவங்கள் மாற்றமடைந்து தமிழ்
பேசும் மக்கள் எதிலிகளாக்கப்பட்ட நிலையில் புலம்பெயர் வாழ் தமிழ் பேசும்
மக்கட்கு மிகபெரியதோர் கடமையுண்டு
தமிழ் பேசும் மக்களை தன் மானத்தோடு அவர்களது தாயகத்தில் வாழவைக்க வேண்டிய
பொறுப்பும் கடமையும் புலம் பெயர் தமிழ் பேசும் மக்களின் கைகட்கு வந்துள்ள
நிலையிலேயே இக்கருத்துக் கணிப்பை நாடாத்தவுள்ளோம்.
தமிழ் பேசும் மக்கள் சிங்கள ஆட்சியை ஏற்காது சுதந்திரமாக வாழ
விரும்புகின்றனர் என்பதை உலக நாடுகளுக்கு ஜனநாயக முறையில் புலம்பெயர்
தமிழ் பேசும் மக்களை ஒர் நம்பகத்தன்மையை காட்ட (Legitimaiton)
பிரித்தானியா வாழ் தமிழ் பேசும் மக்கள் யாபேரும் தயவுசெய்து திரள் திரளாக
வந்து தை மாதம் 30ந் திகதி 2010 ஆண்டில் நடக்க இருக்கும் கருத்துக்
கணிப்பு வாக்கெடுப்பின் (Referendum) மூலம் தமிழ்மக்களின் அபிலாசைகளை
உணர்த்துவோம்.
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – ஒற்றுமையே உயர்வாகும்."
தமிழ் தேசிய சபை
www.vkr1976.org.uk
----
Muthamizh
Chennai

Posted in Labels: |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails