சீமானிடம் 'சிங்' சீறல்,... ''பிரபாகரன் பிரதரா?'
Posted On Thursday, 3 December 2009 at at 05:20 by Mike''பிரபாகரன் பிரதரா?'' |
![]() |
வீர வணக்க நாள் நிகழ்வுக்காக கனடா போன 'நாம் தமிழர்' இயக்கத்தின் சீமான், ![]() ''கனடாவில் அப்படி என்னதான் பேசினீர்கள்?'' ''வருடந்தோறும் கனடாவில் உள்ள ஈழமுரசு பத்திரிகை, மாவீரர் தினத்தை எழுச்சி நாளாகக் கொண் டாடும். கடந்த 2007-ம் ஆண்டே அந்த விழாவில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அதேபோல் இந்த வருடமும் 'ஈழமுரசு' என்னை அழைத்திருந்தது. இதற்கிடையில் 25-ம் தேதி கனடா மாணவர் சமூகம் என்ற இதில் எங்கே இருக்கிறது பிரிவினைக்கான சதி? இத்தனைக்கும் கனடா மிகப் பெரிய ஜனநாயக நாடு. அங்கேயும் ஜனநாயகத்தை நசுக்கும் வேலையை இந்திய தேசம் கற்றுக் கொடுத்து விட்டதோ என்னவோ... அதனால்தான் காரணமே இல்லாமல் என்னை கைது செய்து, மாவீரர் நாளில் நான் பேச முடியாதபடி தடுத்து விட்டார்கள்.'' ''கைது நடவடிக்கை மிகக் கடுமையாக இருந்ததாகச் சொல்லப்படுகிறதே?'' ''மாணவர் சமூக அமைப்பு விழாவில் நான் பேசிவிட்டு வந்த அடுத்தநாள் அதிகாலை என்னை எழுப்பியது கனடா நாட்டு போலீஸ். 'இந்தியாவை பழித்துப் பேசியது ஏன்?' எனக் கேட்டார்கள். அதை நான் மறுத்ததும், ஏதோ ஏழெட்டு கொலைகளை நிகழ்த்திய குற்றவாளியைப் போல் கையில் விலங்கிட்டு, பின்புறமாக கட்டி ரொம்ப தூரத்துக்கு என்னை நடத்திக் கூட்டிக்கொண்டு போனார்கள். அங்கு இந்திய அதிகாரியான சிங் ஒருவர் என்னை விசாரித்தார். ![]() ''பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும், மறைந்து விட்டதாகவும் மாறி மாறிக் கிளம்பும் செய்திகளால், உலகத் தமிழர்கள் இரு கூறாகப் பிரிந்து விட்டதாகச் சொல்லப்படுகிறதே? இதனால்தான், தமிழகத் தலைவர்கள் பலரும் வெளிநாடுகளில் தங்ளுக்குள் சங்கடம் நேரலாம் என்றெண்ணி இது போன்ற நிகழ்ச்சிகளுக்குப் போவதில்லை என்றும் கருத்து நிலவுகிறதே?'' ''வெளிநாடுவாழ் தமிழர்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாக நம்புகிறார்கள். அதனால்தான் அவர்களிடையேயான எழுச்சி எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது பன்மடங்காகப் பெருகியிருக்கிறது. வெளிநாடுகளில் பரவியிருக்கும் டக்ளஸ், ![]() ''ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீட்டை தாக்கியது உங்களின் 'நாம் தமிழர்' அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் என போலீஸ் சொல்கிறதே?'' ''என் வீட்டை தாக்கி, காருக்கு தீ வைத்து, இளங்கோ வனின் போஸ்டரையும் ஒட்டிவிட்டுப் போனவர்களின் மீது இன்றுவரை நடவடிக்கை இல்லை? பாரதிராஜாவின் அலுவலகத்தைத் தாக்கியவர்களின் கார் எண்ணைக் கொடுத்தும் இன்று வரை யாரையும் கைது செய்யவில்லை. தா.பாண்டியனின் கார் எரிக்கப்பட்டு இத்தனை மாதங்கள் ஆகியும் யார் மீதும் போலீஸ் வழக்குப் பதியவில்லை. ஆனால், இளங்கோவனின் வீடு தாக்கப்பட்ட விவகாரத்தில் மட்டும் தமிழக போலீஸ் சீறிக் கிளம்பியிருக்கிறது. அவசர கதியில் எங்களின் 'நாம் தமிழர்' அமைப்பைச் சேர்ந்த தம்பிகள் நால்வரை கொஞ்சமும் உண்மை இல்லாமல் குற்றவாளியாக ஜோடித்திருக்கிறது போலீஸ். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இளங்கோவனை நாங்கள் தோற்கடித்ததற்காக, வேண்டுமென்றே எங்கள் இயக்கத் தம்பிகளை அவர் கைகாட்டி இருக்கிறார். தைரியமிருந்தால் தேர்தல் களத்தில் இளங்கோவன் எங்களோடு மோதிப் பார்க்கட்டும். சிவாஜி கணேசன், வாழ்ப்பாடி ராமமூர்த்தி போன்றவர்கள் தனிக் கட்சி ஆரம்பித்தபோது, அவர்களுக்கு சாமரம் வீசிய இளங் கோவனுக்கு இப்போதுதான் ராஜீவ்காந்தி பாசம் பொத்துக் கொண்டு வருகிறதா? ராஜீவ் குடும்ப அன்பைப் பெறவும், அரசியலில் தான் இன்னமும் இருப்பதாகக் காட்டிக் கொள்ளவுமே பிரபாகரனின் போஸ்டரை இளங்கோவன் கிழித்திருக்கிறார். போஸ்டர் கிழிப்பதும் புளுகு பேசுவதுமே இளங்கோவனுக்குப் பிழைப்பாகிவிட்டது. இதற்கெல்லாம் பயப்படப் போவதில்லை. காற்றில் முறியும் முருங்கையல்ல நாங்கள்... வேங்கையின் பிடரியை உலுக்கும் புலிகள்!'' | |
|
--
-- பாக்கியராசன் சே..
நீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...
www.naamtamilar.org
"வரும் ஆண்டில் சந்திப்போம் தனித் தமிழீழத்தில்"
"Next Year in Tamil Eelam"