தமிழகத்தில் உள்ள முகாம்களை விட இலங்கையில் உள்ள அகதி முகாம்கள் சிறப்பாக உள்ளன: EVKS இளங்கோவன்
Posted On Monday, 16 November 2009 at at 10:45 by Mikeஇவர் பேசுவது மட்டும் பெரியாருக்கு தெரிந்திருக்குமானால் பெரியார் இப்படி ஒரு தலைமுறையே வேண்டாம் என்று கருவறுத்திருப்பார், இந்த தமிழின கொலைகார கும்பலை. தமிழ் மக்கள் அழித்தது போதாதென்று அகில உலகத்திற்கும் பொய் செய்தி சொல்ல வந்த இவனை ஏதனால் அடிப்பது. தமிழக முகாம் யாரும் கொல்லப்படுவதில்லை. இந்த இனத்துரோகிகள் சென்றது ஒரு சில முகாம்களே அதுவும் ராணுவத்தின் முன்னிலையில் யாரும் வாயை துறந்தால் என்ன நடக்கும் என்பது தெரிந்ததுதான். இலங்கை முகாம் நல்லா இருக்குது என்றால் ஏன் உலக நாடுகள் அங்கே அனுமதிக்கப்படுவதில்லை. இவர் அங்கே சென்று முகாமில் ஒரு மாதம் இருந்துவிட்டு உயிரோடு வந்தால் அங்கு என்ன மாதிரி முகாம் என்று சொல்லட்டும். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோரின் பிறந்த நாள் விழா சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘’காங்கிரஸ் கட்சிக்கு என்று தனி வரலாறு உள்ளது. ஆரம்பத்தில் காங்கிரஸ் பாதையில் ஆரம்பித்த தலைவர்கள், பின்னர் வேறு திசையை நோக்கிச் சென்றுள்ளனர். அதுபோல் வேறு திசையில் பயணத்தைத் தொடர்ந்தவர்கள், இறுதியில் காங்கிரஸ் பாதையில் தங்களுடைய பயணத்தை முடித்துள்ளனர். விசா இல்லாமல், பாஸ்போர்ட் இல்லாமல், கப்பல் இல்லாமல், விமானம் இல்லாமல் இலங்கைக்கு சென்று வருவோம் என்று கூறிய சிலர், இலங்கைக்கு எங்களை விட்டுவிட்டுச் சென்று விட்டனர் என்று குற்றம்சாட்டியுள்ளனர். பேச்சளவில், விளம்பரத்துக்காக இதுபோல் நாடகமாடி வருகின்றனர். காங்கிரஸ், திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை சென்று வந்ததன் மூலம், முள்வேலி முகாம்களில் இருந்த 3 லட்சம் பேர்களில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள முகாம்கள், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களைவிட அனைத்து வசதிகளுடன் சிறப்பாக உள்ளன. இலங்கைத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட இந்திய அரசின் முயற்சிகளினால்தான், இவை அனைத்தும் அரங்கேறியுள்ளன. தமிழகத்தில் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான் இங்குள்ள அனைவரின் எண்ணமும். இதை மறைமுகமாகவும், சற்றுத் தயக்கமாகவும் மற்றவர்கள் வெளிப்படுத்தியிருந்தாலும், அனைவரின் லட்சியமும் இதுதான். தமிழகத்தில் கூட்டணி பலமாகத்தான் இருக்கிறது. ஆனால், சில சம்பவங்கள் நடைபெறுகின்ற போது, அதை எடுத்துக்காட்ட வேண்டிய சூழ்நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பள்ளிக்கரணை பஞ்சாயத்தில் தலைவராக இருந்த காங்கிரஸ்காரர் மீது, திமுகவினர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து தோற்கடித்துவிட்டனர். இது காங்கிரஸ் தரப்பினரிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலை நாளைக்கு ஈரோடு மாவட்டத்துக்கோ அல்லது கோவைக்கோ தொடருமேயானால், சென்னை கோட்டைக்கும் வந்துவிடும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இவையெல்லாம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதாலும், காங்கிரஸினுடைய சுயமரியாதை காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இப்போது கூறுகிறோம். எனவே இதுபோன்ற சிறு விஷயங்களில் முதல்வர் தலையிட்டு, காங்கிரஸ்காரர்களுடைய தன்மானத்தை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. மாவட்டங்களில் இருந்து வரும் சில செய்திகள் சென்னை நகரத்துக்கோ, முதல்வரின் காதுகளுக்கோ எட்டுவதில்லை என்ற எண்ணத்தைதான் ஏற்படுத்துகின்றன’’என்று தெரிவித்தார்
இத சொல்ல இந்த நாய்க்கு வெக்கம் கிடையாது. எதனாலன்னா இவன் தமிழ் நாட்டிற்குள் இருந்து கொண்டு தமிழனையும் , தமிழ் நாட்டையும் கெடுக்க தான். மானங்கெட்ட தமிழனுக்கு புரியவா போகிறது.