தமிழர்களுக்கெதிரான இந்தியாவின் எத்தகைய செயலும் இந்தியாவுக்கு ஆபத்தானது


- - வெ.யுவராசன்

வரலாற்று சிறப்பும், பெருமையும் வாய்ந்த தமிழினம், தனக்கென்று ஒரு நாடின்றி உலகெங்கிலும் ஏதிலிகளாக சிதைந்துக் கிடக்கிறது.
இலங்கையில் சிங்கள இன வெறியர்கள் ஈழத்தமிழ் சொந்தங்களை திட்டமிட்டு இனப்படுகொலை செய்துவருகிறார்கள். தமிழர் நிலங்களில் சிங்கள
குடியேற்றமும், நில அபகரிப்பும் நடந்தேறுகின்றன.

இனவழிப்பை மேற்கொண்டு வரும் சிங்கள இனவெறிக்கு எதிரான போராட்டத்தின் ஒரு கட்டமாக தமிழர்கள் கடந்த முப்பது ஆண்டுகாலமாக கருவியேந்தி களத்தில் போராடி வருகிறார்கள்.

தனித் தமிழீழமொன்றே தீர்வென தங்கள் இன்னுயிரை பொருட்படுத்தாது களத்தில் நின்றனர்.

ஆனால், இலங்கை அரசு போர் முறைகளை மீறி தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக இலங்கை தீவிலிருந்து ஒழிக்க திட்டமிட்டு, தடைச் செய்யப்பட்ட கருவிகளையும், நச்சுப் பொருட்களையும், கொத்துக் குண்டுகளையும் பயன்படுத்தி, பாதுகாப்பு வலையத்தில் இருந்த அப்பாவி பொதுமக்களையும், மருத்துவமனைகளையும், கல்விக் கூடங்களையும் குறிவைத்து அல்லவா இனவழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இரண்டு இலட்சத்திற்குமேலான தமிழர்களை கொன்று குவித்தனர்.

கடந்த மே 16லிருந்து 18 வரையிலான மூன்று நாட்களில் வன்னிமண் பிணக்காடானது.

அந்நாட்களில் 50 ஆயிரம் தமிழர்கள் படுகொலைக்காளாயினர்.

பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் ஊனமுற்றனர்.


அதுமட்டுமல்லாது, வதை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் இளம் பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொமைகளுக்கு ஆளாகிறார்கள்.

முகாம்களில், கருவுற்ற பெண்களுக்கு கட்டாய கருச்சிதைவும், கட்டாய கருத்தடையும் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு... செல்வதோடு சரி, திரும்புவதே இல்லை.

முள்வேளி முகாம்களில் மூன்று இலட்சம் தமிழர்கள் வசதியற்ற வாழ்க்கையோடு வதைப்பட்டுக் கிடக்கின்றனர்.


உணவில்லாது, தண்ணீர் இல்லாது, போதிய சுகாதார வசதியற்ற நிலையில் அல்லலுறுகின்றனர்.

ஈழத்தில் கதறும் உறவுகளின் கதறல்கள் தாய் தமிழ் உறவுகளான தமிழகத்தின் காதுகளுக்கு கேட்காமலா போயிருந்தது...?

ஆளும் அரசுகளுக்கு இன உணர்வற்று போயிருந்தாலும், மனித நேய உணர்வு கூடவா இல்லாமலா போயிற்று?

இதோ போர் நிறுத்தம், அதோ மக்கள் விடுதலை, உண்ணாநிலை, தந்தி,மனித சங்கிலி என்றெல்லாம் உலகத்தின் கண்களுக்கு பூச்சாண்டி காட்டியது தானே மிச்சம்.

இலங்கையில் மனித நேய உணர்வை மீறித் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளையும், கொலைகளையும் செய்த சிங்கள இன வெறியர்களை எதிர்த்து, கண்டித்து, அய்நாவும், அமெரிக்கா, அய்ரோப்பிய நாடாளுமன்றமெல்லாம் அறிக்கையையாவது விடுத்ததே..

இந்திய அரசு பார்ப்பன, மலையாள ஊதுகுழல்களால் தமிழனத்தை அழிக்கும் பொருட்டு ஆயுதங்களையல்லவா அனுப்பி வைத்தது.

உலக வரலாற்றில் தம் இனத்தின் மீது இரண்டகத்தன்மையை காட்டிய பச்சைத் துரோகத்தனம் செய்தவர்களாக தமிழக ஆளும் அரசு ஆகிவிட்டது. இவர்களை உலக தமிழினம் மன்னிக்காது.

மராட்டிய சட்டமன்றத்தில் தாய்மொழியில் பதவியேற்காத உறுப்பினரை தாடையில் அறைந்தனரே!
கேரளத்திலே மலையாளம் அறிந்தவர்களுக்கே அரசு வேலை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறதே!

இங்கு தமிழுக்கு என்ன செய்திருக்கிறீர்கள் என்று கேட்பதற்கில்லை..? அது ஊரறியும்.

கடல் எல்லையிலே தமிழக மீனவர்கள் என்ன குற்றம் செய்தனர். பிடித்து அடித்து உதைத்து நாளுக்கு நாள் சுட்டுக்கொல்லப்படுவதும், விரட்டியடிக்கப்படுவதும், நிகழ்ந்தேறுவது மனித நேயமற்ற செயலல்லவா. இவர்கள் இந்நாட்டின் குடிமக்களல்லவா.. இவர்களுக்கான நீதியும் , உயிர்பாதுகாப்பும் எங்கே அளிக்கப்படுகிறது. என்ன பிழை செய்தார்கள் அவர்கள். நிரந்தரதீர்வாக இதற்கு என்ன செய்கிறது ஆளும் அரசு!

தமிழனை எங்கும் வாழவிடாமல் அழித்தொழிக்க திட்டமிடும் எத்தகைய கூட்டமும் பேரடியை சந்திக்கும் என்பது தமிழுலகம் நிரூபிக்கும்.

தமிழர்கள் தமிழுணர்வும், தமிழ்தேச உணர்வும் மிக்கவர்களாக இருக்கிறார்கள்.
இனம் தங்கள் உயிருக்கு சமமாக கொண்டுள்ளார்கள். அடக்கு முறைகளை தங்கள் மயிருக்கு சமமாக கருதுகிறார்கள்.

ஈழத்தில் நடக்கும் கொடுமைகளுக்கு தீர்வை வேண்டி, உலக சமூகத்துக்கு எடுத்துக்கூறி, தன் உடலில் நெருப்பை ஏற்றி, தமிழர்களின் உள்ளங்களில் இன்னும் எரிந்துக் கொண்டுதான் இருக்கிறான் முத்துக்குமரன்.

அதை மீண்டும் மீண்டும் இந்தியா ஊதிவிட முயற்சிக்கிறது. அந்நெருப்பு தமிழர்களிடமிருந்து வெளிப்பட்டால் இந்தியா தாங்காது.

தமிழர்களுக்கெதிரான இந்தியாவின் எத்தகைய செயலும் இந்தியாவுக்கு ஆபத்தானது.
அதை விரும்பினால், அதன் பயனை அவர்கள் பட்டறியும் நாளும் வெகு தொலைவில் இல்லை.
இதனை எண்ணிப்பார்த்துக் கொள்வதே இந்தியாவிற்கு சாலச் சிறந்தது.

மண்ணுள் இருக்கும் எம் மாவீரர்களின் இரத்தத்தின் சுவடுகள் , அதன் ஈரம் உலகத் தமிழினத்தின் மீது ஊறிக் கிடக்கிறது.
அதன் வீரியம் தளராது.
எண்ணற்ற தியாகங்களைச் செய்து, இறுதிவரை போராடிய போராளிகளும், விடுதலை போராட்டமும் பல நாட்டு கூட்டுச் சதியால் பின்னடைவை கண்டாலும், இது தற்காலிகமானதே.

மீண்டெழும் இப்போராட்டம். ஓயாது தனி ஈழம் பெரும் வரை!

Posted in Labels: |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails