பெரியாரின் தலைமுறையில் இப்படி ஒரு தருதலை


பெரியாரின் தலைமுறையில் இப்படி ஒரு தருதலை. இதுகளை எல்லாம் எப்படி தமிழன் என்று சொல்வது. சோனியாவின் பேச்சினை கேட்டு, கருணாநிதியின் செல்வாக்கில், வீரமணியின் அரவணைப்பில் வளரும் இவர்களை எத்தனை பெரியார் வந்தாலும் மாற்ற முடியாது.

விடுதலைப்புலிகள் தலைவர் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாளை முன்னிட்டு
ஈரோட்டில் பல்வேறு இடங்களில் தமிழ் தேச விடுதலை இயக்கத்தினர் மற்றும்
ஜவுளித் தொழிலாளர்கள் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.


இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய
அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில், முடக்குறிச்சி காங்கிரஸ்
எம்எல்ஏ ஆர்.எம்.பழனிச்சாமி, ஈரோடு துணை மேயர் பாபு மற்றும் காங்கிரஸ்
கட்சியினர் பிரபாகரன் சம்மந்தப்பட்ட பேனர்கள் அனைத்தையும்
அப்புறப்படுத்தியதோடு, கிழித்துள்ளனர்.


மேலும் பிரபாகரன் சம்மந்தப்பட்ட பேனர்கள் வைத்தவர்களை கைது செய்யக்கோரி
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


இன்று மாலை தமிழ் தேச விடுதலை இயக்கத்தினர் சார்பில் மாவீரர் நாள்
கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழின உணர்வாளர் தியாகு சிறப்புரை வழங்க
உள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் பிரபாகரன் பிறந்த நாள்
பேனர்களை அகற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Posted in |

2 comments:

  1. Anonymous Says:

    பெரியாரும் கீழ் வெண்மணி பிரச்சனையில் வன்முறையை ஆதரிக்கவில்லை.. ஆகவே சொல்ல முடியாது..

  2. Mike Says:

    உண்மைதான் பெரியார் இருந்திருந்தால் சிங்கள் வன்முறையை ஆதரித்திருக்கவே மாட்டார். தமிழ் மக்களை காப்பாற்ற ஒரு பெரிய ராணுவ இயக்கத்தினையே ஆரம்பித்திருப்பார்.

    ஒருவன் கொல்ல வரும் போது அதை தட்டி கேட்க ஒருவனும் இல்லாத போது ஒரே வழி அவனை தடுப்பதுதான் அதற்க்காக அவனிடன் தம்பி நீ கொலை எல்லாம் பண்ணகூடாது என்று சொல்லி கொண்டிருந்தால் ஓரே போடு அவ்வளவுதான். பெரியாரே சொல்லியுள்ளார் வன்முறை தேவை தேவையான இடத்தில்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails