மகிந்த, கோத்த தண்டனை உறுதி அமெரிக்கா, சாட்சியாகிறார் பொன் சகோ
Posted On Monday, 2 November 2009 at at 10:54 by Mike
மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கு எதிரான "ஆதாரமாக%27 கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவை அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரிகள் பயன்படுத்துவதற்கான "முன்நகர்வு%27 தொடர்பாக இலங்கை அரசாங்கம் கடும் ஆட்சேபனையைத் தெரிவித்திருப்பதாக நம்பிக்கையான அரச வட்டாரம் ஒன்று தெரிவித்ததாக "அததெரண%27 செய்திச்சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டிருக்கிறது. இலங்கை கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகாவை அமெரிக்க அரசாங்கம் அணுகியதாகவும் இந்தவருட முற்பகுதியில் தமிழ்ப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது இடம்பெற்றதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நாட்டின் "பாதுகாப்பு அமைச்சருக்கு%27 எதிரான ஆதாரமாக அவர் இருக்க முடியுமா என்று கேட்டதாகவும் அரசாங்க உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமது கிரீன்கார்ட்டை புதுப்பிப்பதற்காக அமெரிக்காவில் உள்ள ஜெனரல் பொன்சேகாவிடம் இந்த விடயம் தொடர்பாக அமெரிக்க உள்நாட்டுப்பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் கேட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனரல் பொன் சேகாவின் அமெரிக்க விஜயத்தின் ஓரங்கம் உத்தியோகபூர்வமானதாகவும் ஒரு பகுதி தனிப்பட்ட முறையிலாகவும் அமைந்துள்ளது. அமெரிக்க பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் திமோதி ஜே.கீற்றிங்கின் பிரியாவிடை வைபவத்தில் (ஹவாயில்) கலந்து கொள்வதற்காக ஜெனரல் பொன்சேகாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆயினும் இந்த அழைப்பு பின்னர் வாபஸ் பெறப்பட்டது. அமெரிக்க காங்கிரஸுக்கு அமெரிக்க இராஜங்க திணைக்களம் அறிக்கை சமர்ப்பித்ததையடுத்து இந்த அழைப்புவாபஸ் பெறப்பட்டதாகக் கூறப்பட்டது. இலங்கைக்கு எதிராக போர்குற்ற, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை உள்ளடக்கியதாக அந்த அறிக்கை உள்ளது. இதனால் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரியின் அமெரிக்க விஜயம் தனிப்பட்ட விஜயமாக மாற்றம் அடைந்தது.
மனித உரிமை மீறல்களுக்காக அரச அதிகாரிக்கு எதிரான ஆதாரமாக இருக்குமாறு அமெரிக்க அதிகாரிகள் ஜெனரல் பொன்சேகாவை அணுகியதையடுத்து அது தொடர்பாக இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோதõபய ராஜபக்ஷவுக்கு ஜெனரல் பொன்சேகா அறிவித்துள்ளார். ஏனைய அதிகாரிகளுக்கும் இந்த விடயங்கள் தொடர்பாக அறிவித்துள்ளார். ஜெனரல் பொன்சேகாவால் அவர்களுக்கு குறும்செய்தி சேவை (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப்பட்டுள்ளது. "அக்டோபர் 28 இல் மைக்கேல் தரன்தினோ என்பவரிடமிருந்து எனக்கு அழைப்பொன்று வந்தது%27 இலங்கையில் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து உங்களை "நேர்முகம்%27 காணவிரும்புகிறேன் என்று அவர் கூறினார் எமது ஜனாதிபதியை கூறிப்பிடுகிறீர்களா, ஏனென்றால் எமது பாதுகாப்பமைச்சர் ஜனாதிபதியே என்று நான் அவரைக் கேட்டேன். "இல்லை திரு.கோதாபய ராஜபக்ஷ, என்று அவர் பதிலளித்தார்%27 என்று ஜெனரல் பொன்சேகா குறும் செய்திச் சேவையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் எமது பாதுகாப்பு அமைச்சர் அல்ல. ஆனால் பாதுகாப்பு செயலாளர் என்றுநான் கூறினேன். அந்த அதிகாரி இதனை ஏற்றுக் கொண்டார். திரும்ப அவரிடம் கதைப்பதாக நான் அறிவித்தேன். அதன்பின்னர் நான் சனத் டி சில்வாவுடன் கதைத்தேன். அவருடைய சட்டத்தரணிகளூடாக இதனை பரிசீலிக்க நான் விரும்பியிருந்தேன். சனத்தின் வழக்கறிஞர் மைக்கேல் தரன்தினோவிடம் கதைத்திருந்தார். அத்துடன் டி.எச்.எஸ்./ ஐ.சி.ஈ. இன் ஏ.ஜே.பாட் என்பவருடனும் அவர் கதைத்திருந்தார். சட்டத்தரணிகளுக்கு திரு.பாட் என்பவரால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது அவர்கள் என்னை செயலாளர்/ பாதுகாப்பு இனால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு ஆதாரமாக பயன்படுத்த விரும்புவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தகவல் கிடைத்ததையடுத்து இலங்கை அரசாங்கம் உரிய முறையில் செயற்பட்டது. அமெரிக்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்படுவதாக கூறப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஆட்சேபனையை தெரிவித்துள்ள அதேசமயம் ஜெனரல் சரத் பொன்சேகா நாட்டுக்கு திரும்புவதற்காக இராஜதந்திர வட்டாரங்களூடாக நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்காக அமெரிக்காவில் ஜெனரல் பொன்சேகாவை வைத்திருந்து நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதற்காக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் சாத்தியப்பாடாக இந்த நகர்வு உள்ளது.
அமெரிக்கப் பிரஜைகளும் அந்த நாட்டின் பிரஜைகளாக விரும்புவோரும் அமெரிக்க சட்டத்தினாலேயே நிர்வகிக்கப்படுகின்றனர். அவர்களால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் எந்தவொரு மீறல்கள் தொடர்பாகவும் அந்நாட்டின் சட்டத்தை அமுல்படுத்தும் முகவரமைப்புகளுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டியதாக அமெரிக்க சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன