வேண்டும் தமிழ் ஈழம்


வேண்டும் தமிழ் ஈழம்

ஈழத்து வேந்தன்
எதிர்ப்போருக்குக் காலன்
என் தமிழன் இராவணன்
இறுதி வரை போரிட்டான்.

அன்று தொடங்கிய ஆக்கிரமிப்பு
இன்றுவரை தொடர்கிறது
ஈழத்தில் !

குலத்தை அழிக்கும்
கோடாரிக் காம்புகளாய்
அன்று வீடணன்
இன்று கருணா

கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு
கொண்டாட்டம் -அவன்
குடிக்கின்ற இரத்தமெல்லாம்
தமிழ் இரத்தம் .

நம் இரத்தங்கள்-அங்கே
நடைப்பிணங்கள்
நம் சோதரிகளோ-அங்கே
சீருடை கயவர்களால்
குதறப்படுகிறார்கள்

வீடு, குடும்பம்
உயிர் ,உடைமை
சொத்து ,சுகம்
எல்லாம் அவர்களுக்கு
கனவாய் போனது

செத்தது போக
மிச்சம் இருக்கும்
எலும்புக் கூடுகளோ
முள் வேலிக்குள் முடங்கிப்போனது

உலகில் அழிந்து வரும்
உயிரினங்களின் பட்டியலில்
இன்று தமிழினம் !

இந்த இழிநிலைக்கு
பின்னாலும் இருக்கின்றோம்
தமிழர்களாய்

நடுங்க வைத்த
தமிழன்-இன்று
நடுங்குகிறான்

நாமமது தமிழர் என
வாழ்கின்றார்
சீச்சீ ... -வெட்கக்கேடு
புறப்பாட்டு பாடியவன்
தமிழன் என்றால்
புலிக் கொடியை நாட்டியவன்
தமிழன் என்றால்
கரிகாலன் வழிவந்த
தமிழன் என்றால்
கண்ணீரைத் துடைத்தெழுவோம்

ஓய்ந்து விடவில்லையடா
எங்கள் உரிமைப் போர்
மாய்ந்து விடவில்லையடா
எங்கள் மாவீரன்
வீரத்தின் இன்னொரு பேர்
எது தெரியுமா ?
பிரபாகரன்
-காட்டுக்கோட்டை . கண்ணதாசன்

Posted in Labels: |

1 comments:

  1. செயபால் Says:

    இராவணன் தமிழன் என்பதற்கு ஆதாரம் உண்டா?

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails