இலங்கை சென்று திரும்பிய எம்.பிக்கள் குழு பிரதமரை சந்தித்தது - திருமாவளவனை புறக்கணித்தனர்

இலங்கை சென்று திரும்பிய எம்.பிக்கள் குழு பிரதமரை சந்திக்கச் சென்றபோது விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை அழைத்துச் செல்லவில்லை.

டி.ஆர்.பாலு தலைமையில் இலங்கை சென்று திரும்பிய எம்.பிக்கள் குழு கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து அறிக்கை சமர்ப்பித்தனர். இந்தக் குழுவில் டி.ஆர்.பாலு, கனிமொழி, காங்கிரஸ் எம்.பிக்கள் மற்றும் திருமாவளவனும் இடம் பெற்றதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால், திருமாவளவனை பிரதமரை சந்திக்க அழைத்துச் செல்லப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

முதல்வர் கலைஞரின் இந்தச் செயலால் திருமாவளவன் கோபத்தில் உள்ளதாகத் தெகிறது. ஆனால், திருமாவளன் மீதான காங்கிரஸ் தலைமையின் கோபத்தை குறைக்கவே, அவரை தி.க. கூட்டிச் செல்லவில்லை என்று காரணமும் கூறப்படுகிறது. இலங்கைக்குச் சென்று வந்த தி.க., காங்கிரஸ் எம்.பிக்கள் அங்கு முகாம்களில் தமிழர்கள் மிக நிம்மதியாக இருப்பது போலவும், சிறிய அளவிலேயே பிரச்சினைகள் இருப்பது போலவும் பேட்டி அளித்திருந்தனர். அறிக்கையும் விடுத்தனர்.

ஆனால், திருமாவளவன் மட்டும் தான் உண்மை நிலையை வெளியில் எடுத்தச் சொன்னார். அங்கு தமிழர்கள் அல்லல்படுவதாகவும், அந்த நாட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் அறிக்கை விட்டதோடு பேட்டிகளும் கொடுத்தார். இதனால் தி.க. காங்கிரஸ் கூட்டணி போட்ட மூடி மறைக்கும் திட்டம் தவிடுபொடியானது.

திருமாவளவனின் இந்த நடவடிக்கைகள் முதல்வர் கருணாநிதியை அதிகம் கோபப்படுத்தியுள்ளதாகத் அறியப்படுகின்றது. இதனால் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க டில்லி சென்ற குழுவில் திருமாவளவனுக்கு இடம் தரப்படவில்லை.

இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பவர் திருமாவளவன். அவர் தனது அறிக்கைகள், பேச்சுக்கள் மூலம் அதை வெளிப்படுத்தியுள்ளார்
தோழர் திருமா இப்பொழுதாவது கருங்காலி கருணாநிதியின் குள்ளநரித்தனத்தை புரிந்துகொள்ளுங்கள் இனிமேலாவது ஈழ விசயத்தில் சுயமாக போராடுங்கள்
அன்புடன்
சுகுமாரன்
அபுதாபி

இருப்பாய் தமிழா நெருப்பை

Posted in Labels: |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails