கருணாநிதி பொய்க்கு அளவே இல்லை, முழு யானையை சட்டை பைக்குள் அடைக்க நினைக்கும் இவர் திருந்தவே மாட்டாரா?


பேராசிரியர் கா.சிவதம்பி செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்கிறார்‐ கருணாநிதி ‐அறிவிப்பு ‐பேராசிரியர் எமக்கு வழங்கிய குரல் ‐ குரலைக் கேட்க விரிவான செய்திக்கு மேலும் என்பதனை அழுத்தவும் Click the icon to listen the Audio
26 October 09 02:07 pm (BST)

உடன்பிறப்பே என்று தனது ரத்தத்தின் ரத்தங்களுக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதம் வடிவிலான அறிக்கையில்,ஈழத்து மொழியறிஞர் பேராசிரியர் கா.சிவத்தம்பி செம்மொழி மாநாட்டிற்கு வருவது சந்தேகமே என்று ஒரு ஆங்கில நாளிதழும், வரவே மாட்டார் என்று இன்னொரு ஆங்கில நாளிதழும் சில நாளிதழ்களும் சிவதம்பி இந்த மாநாட்டிற்கு வந்து விடக்கூடாது என்பதையே குறிக்கோளாகக் கொண்டு செய்தி வெளியிடுகிறார்கள்.
திமுக தமிழுக்காக ஆண்டாண்டுகாலமாக அரும்பணியாற்றினாலும் இவர்கள் தங்களின் திருவிளையாடலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த சிறு நரிக் கும்பல் ஒன்றும். இந்த சிறு நரிக்கூட்டத்தின் காலடியில் விழுந்து கிடக்கும் விபீடணக் கூட்டமொன்றும். சில நெடுமறங்களும் ( நெடுமாறனைச் செல்கிறார்) நமக்கு எதிராக செயல்படுகிறார்கள்.
அதனால் உண்மையை மறைத்து ஜீரணிக்க முடியாத அளவுக்கு உண்மையை மறைத்து அன்றாடம் இவர்கள் வாந்தி எடுக்கிறார்கள். இவர்களுக்காக சில உதாரணங்களைச் சொல்கிறேன்.
உடன்பிறப்பே பேராசிரியர் சிவத்தம்பி எழுதிய முதல் கடிதத்தில் கால அவகாசம் போதாது என்றூ கால அவகாசம் கேட்டு கடிதம் எழுதினார்.
அவரது கோரிக்கையை ஏற்று கால அவகாசம் கொடுக்கப்பட்டது. பின்னர் அவரே மொழி தொடர்பான ஆய்வரங்கத்தில் ஐந்து தலைப்புகளில் கலந்துரையாட்லும், அறிக்கைகளையும். ஆய்வையும் செய்யலாம் என்று பரிந்துரைத்தார்.
இதை எல்லாம் மறைத்து விட்டு விபீடணக் கூடம் நம்முடன் விளையாடிப் பார்க்கிறது. பேரசிரியர் கா.சிவத்தம்பி ஆர்வத்தோடு முன் வந்து சொன்ன அறிவுரைகளின் படி அவரின் நேரடிப் பங்களிப்போடு மாநாடு சீரோடும் சிறப்போடும் நடைபெறும் என்கிற பொருள் தரும் படி கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
எனினும் மகாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன் என முதன் முதலாக எமது இணையத்தளத்தளமான குளோபல் தமிழ் செய்திகள் இணையத்திற்கே பேராசிரியர் சிவத்தம்பி தனது குரலில் செவ்வி அளித்திருந்தார். அத்துடன் தான் மகாநாட்டில் கலந்து கொள்வேன் என அதன் பின்பு தனது குரலிலோ கை எழுத்திலோ அறிக்கைகள் எதனையும் வெளியிடாத நிலையில் கலைஞரின் அறிவித்தல் தற்போது வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Posted in Labels: |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails