மீனுக்கும், மீனவனுக்கும் ஒரே பாடை படகு : கவிஞர் தாமரை


==================================
மீனுக்கும், மீனவனுக்கும் ஒரே பாடை
படகு
===================================
வாயில் உணவுத் துகளுடன்
சாரை சாரையாய் எறும்புகள்
மழைக் காலத்துக்கு
சேமிக்கின்றன...

கையில் காலித் தட்டுடன்
சாரை சாரையாய் தமிழர்கள்
மழைக் காலத்துக்கு
சேமிக்கப்படுகின்றனர்...!!!

முள்வேலி முகாம்!
====================================
சக்கரம் சுழன்று
சிங்கப் பற்களாகிவிட்டது..
மூவர்ணக் கொடியில் இப்போது
ஒரே நிறம்
சிவப்பு
====================================
அயலுறவுத் துறை!
அயலானோடு உறவு கொள்ளும் துறை
அயலான் வீட்டில் விருந்துண்ணும் துறை
அயலானுக்கு ஆயுதம் கொடுக்கும் துறை
அயலான் எறிவதை பொறுக்கும் துறை
அயலான் பெண்களுக்குத் துரை!
====================================

நிர்வாணத்தை சுட்டுத் தள்ளுகிறது
கஞ்சியில் விரைத்த சீருடை...

உலகமே கைகொட்டி சிரிக்கும்
நிர்வாணம்

பாவம் புத்தனுடையது!

====================================

Posted in Labels: |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails