அண்ணன் சீமானுக்கு ஈழத்தின் நன்றி குரல்

ஈழத்தமிழர்களின் குரலே...

ஈழத்தமிழர்களின் குரலாய் எம் இனத்தின் விடிவுக்காய்
வார்தைகளை தொடுத்து சீறிலங்கா அரசுக்கு
பதில் அடி கொடுத்து கொண்டு இருக்கும்
வார்த்தைகளின் செல்வனே..

எம் குரல்களின் குராலாய் உலகெங்கும்
ஒலித்து கொண்டு இருக்கும் சீமானே
உம்மை எங்களுக்கு கொடுத்த இறைவனுக்கு
நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
............................................................................

ஈழத்தமிழராக பிறந்த நாங்கள் அழிவை மட்டும்
கண்டு நிற்கும் ஏதிலிகள் .
நின்மதியாய் வாழ ஏங்கும்
அகதி அற்ற வாழ்வுக்கு ஏங்கும்
மானிடத்தின் பகுதி நாங்கள்.
பிறந்தவர்க்கு இறப்பு நிஜம் இது எங்களின்
முற்றத்தில் நித்தமும் நிஜம்.

துன்பத்தை கண்டு துவண்டு நிற்கும்
விடிவுக்காய் காத்திருக்கும் எங்களுக்கு
உங்கள் குரல்தான் நம்பிகை என்னும் திரியாக
தன்மானத் தமிழன் ஒவ்வொரு
இதயங்களிலும் சுடர் விட்டு எரிகின்றது.

வீர இனத்தின் பிறப்பென்னும் புகழுடன் உங்களின்
வழி தொடர்ந்திருப்போம் அலைகடல் என
மீண்டும் சொல்வோம் உரக்கத்தான் சொல்வோம்
தர்மத்தின் படை வெல்லும் நின்மதியாய் மூச்சுவிடும் நாள் மலரும்.

ஈழத்து நினைவுகளுடன்
பாமினி

Posted in Labels: |

1 comments:

  1. vanathy Says:

    சீமான் உண்மையான உணர்வுடன் பேசுகிறார் ,ஓகே நன்றி சொல்வோம் ,ஆனால் இப்போதெல்லாம் யார் என்ன பேசினாலும் பேச்சுப் போதும் ,பயன் தரும் நடவடிக்கைகளில் இறங்கினால் நல்லது என்றே தோன்றுகிறது. ஈழத்தில் அவலம் உச்சக் கட்டத்தை அடைந்த போது தமிழகத் தலைவர் பலர் பேசினார்கள் ,சிலர் ஈழத்தமிழரை உண்மையாக ஆதரித்தார்கள் சிலர் எதிர்த்தார்கள் ,சிலர் ஆதரிப்பது மாதிரி போக்குக் காட்டினார்கள் ஆனாலும் கடைசியில் பல்லாயிரம் மக்களும் போராளிகளும் முள்ளி வாய்க்காலில் துடித்துப் பதைத்து இறந்தே போனார்கள்
    ஆதரவாளர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை ,இலங்கை அரசுக்கு உதவியவர்களே தமிழ்நாட்டில் திரும்பவும் பதவிக்கு வந்தார்கள்.
    இனிமேல் வெறுமனே உணர்ச்சி வசப்பட்டு போகாமல் செயல்படுவோம் .
    எனக்கென்னவோ தமிழக அரசியல் வாதிகளால் பெரிதாக ஒன்றும் நடக்கப்போவதாக தெரியவில்லை ,முழு தமிழக மக்களும் அரசியல் ரீதியான மக்கள் போராட்டத்தில் பங்கு பற்றும் ஒரு நிலை வந்தால் ஒருவேளை அது சாதமாக அமையலாம் ,ஆனால் தமது அரசியல் ஆதாயத்தில் குறியாக இருக்கும் தமிழக அரசியவாதிகள் அப்படியான நிலை வர கூடிய சூழ்நிலையை உருவாக்க மாட்டார்கள்,அதனால் ஈழத்தமிழர்கள் இனி உணர்ச்சி வசப்பட்டு கவிதை பாடாமல் அடக்கியே வாசிப்போம் .
    நம் கையே நமக்குதவி ,ஆக்கபூர்மான நடவடிக்கைகளில் இறங்குவோம் .

    --வானதி

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails