திருமாவை சபிப்பது தகுமே அதில் எந்த சந்தேகமும் இல்லை

இன்று உலக நாடுகளே தமிழர்களை நிலை கண்டு கொதித்து எழுந்து கொண்டிருக்கிறது. உலக நாடுகளின் நெருக்கடியினை குறைக்க ராசபக்சே, சோனியா, கருணாநிதி போட்ட திட்டம்தான் இந்த குழு விஜயம். அதுவும் இந்த கேடுகெட்ட தமிழர்களை வைத்தே அதற்க்கான சதிகளை பின்னி உள்ளது. திருமாவுக்கு இது தெரியாததல்ல. எப்படி கருணாநிதி ஆரம்பத்தில் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் சொல்வாரோ, அதே போல் இப்போது திருமாவும் ஒரு காரணத்தினை கண்டுபிடித்து கொண்டுள்ளார்.

முதலில் அங்கு சென்றவர் தனது எதிர்ப்பினை எத்தனையோ வழிகளில் காட்டி இருக்க முடியும். 50000 தமிழர்களை கொன்ற ஒருவனுக்கு, 3.5 லட்சம் தமிழ் மக்களை சிறையில் அடைத்து வைத்துள்ள ஒருவனுக்கு பொன்னாடை போர்த்துவது என்பது எந்த உண்மை தமிழனாலும் முடியாது.


ராசபக்சே ஒரே கல்லில் பல மாங்காய் அடிப்பதற்கு உதவி செய்யவே இவர்கள் சென்றுள்ளார்கள் என்பது மிகத்தெளிவு.

1) GSP+ எப்படியாவது கிடைக்க வேண்டும் இலங்கைக்கு

2) ராசபக்சே போர்குற்றவாளியாக உலக நாடுகளே சொல்லும் போது அதற்கான எந்த சூழலும் இல்லை என்று சொல்லவே இந்த குழு சென்றுள்ளது. விரைவிலே உலக நீதிமன்றத்தில் ஏற்றப்பட வேண்டியவருக்கு பொன்னாடை போர்த்தி வந்துள்ளது.

3) அடுத்து இலங்கை தேர்தலுக்கு ராசபக்சேவின் பிரச்சார பீரங்கியாகவே சென்றுள்ளது.

திருமாவுக்கு இது எல்லாம் தெரியாமல் சென்றிருப்பாறே என்றால் அவருடைய அரசியல் அறிவு காணாது, கண்டிப்பாக இவர் அரசியலை விட்டு வெளியேற வேண்டும். தெரிந்துதான் சென்றார் என்றால் இவரது பச்சை துரோகம். இதற்கு என்ன சொல்லப் போகிறார்.

நாம் இந்த அளவு நமது கோபத்தினை காட்டுவதால்தான் இவர்கள்(திருமாவும் சேர்த்துதான்) அறிக்கை சற்று மாற்றி விட ஆரம்பிக்கிறார்கள்.

இந்த குழு வந்த 10 நிமிடத்தில் அறிக்கை தயாராகி விட்டது. பொய்யன் கருணாநிதி அடுத்த அறிக்கை 50000 மக்கள் விடுவிக்கப்பட்டார்கள். பொய், பொய், பொய் எல்லாமே பொய் இவர் பேசுவது எல்லாமே பொய். தமிழர்களை அழித்ததில் இவருக்கும் சம பங்கு உள்ளது ராசபக்சே அடுத்து இவர்தான் முழுக்காரணமும்.

முள்கம்பிகளையே விட்டு வெளியேற்ற மறுப்பவன் பக்சே என்று தமிழர்களுக்கு சம உரிமை கொடுக்கப்போகிறான்.

Posted in Labels: |

3 comments:

  1. மதி Says:

    குருமா சொல்ற ஒரு வசனம், ராசபக்சே சொன்னாராம், அங்கெல்லாம் கன்னி வெடி இருக்குது, போககூடாது தம்பி பயம் காட்டியுள்ளாராம், இவரும் வெட்கம் இல்லாம வெளில சொல்லிட்டு அலையறாரு.

  2. venkat Says:

    தமிழனுக்கு விரோதி தமிழன்தான்

  3. சத்தியா Says:

    எத்தனை காலம் தான் இவர்கள் தமிழர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகின்றார்கள். முகமூடிகள் கிழியும் போது முகததை எங்கே வைத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்?
    ஜனா

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails