பிரணாப் முகர்ஜி கருத்துக்கு முதல்வர் வரவேற்பு

கருணாநிதி, காங்கிரஸ் உங்களை நாங்கள் நம்ப தயாரில்லை. நேற்றுவரை இருவரும் புலிகள் தீவிரவாதிகள் அப்படி இப்படின்னு சொல்லி கொண்டிருந்திர்கள். இன்று தமிழகத்தில் மக்களின் எழுச்சி எங்கே வரும் பாராளுமன்ற தேர்தலில் உங்களை கவிழ்த்து விடுமோ என்று இப்படி அந்தர் பல்டி அடிக்கும் உங்களை நம்ப தயாரில்லை.

இந்தப் போர்நிறுத்தம் பற்றிய பேச்செல்லாம் தமிழ்நாட்டுக்கு முகர்ஜி வருவதற்கேற்ப போடப்பட்ட நாடகம் என்றே நினைக்கிறேன்..! நீ அடிக்கிறமாதிரி அடி.. நான் அழுவது மாதிரி அழுகிறேன் என்பது போன்றது..! தானைத் தலைவரும் அதற்கு ஏற்ற மாதிரி நல்லாவே தாளம் போட்டிருக்கிறார்..!



உடன்பிறப்பே,
தூத்துக்குடி அனல் மின் நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட இந்திய வெளி யுறவுத் துறை அமைச் சரும் - என் நீண்ட கால நண்பருமான மாண்பு மிகு பிரணாப் முகர்ஜி அவர்கள், அந்த விழா மேடையிலேயே - என் உடல் நிலை விரைவில் குணமாகி நலம் பெற வேண்டுமென்று வாழ்த்துரைத் துள்ளார். அது கேட்டு எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை விட இரட்டிப்பான மகிழ்ச்சி எது தெரியுமா?
இதோ! அவர் உரை யில் குறிப்பிட்டுள்ள இந்தச்செய்திதான்! அது என்ன அவ்வளவு முக்கிய மான செய்தி?
தூத்துக்குடி விழா வில் அந்தத் தூயவர் பேசியது வருமாறு:
விடுதலைப் புலி கள் போர் நிறுத்தத்துக்கு முன் வந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின் றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இலங்கை அரசும் போர் நிறுத்தம் செய்து மக்களை பாது காப்பான இடத்துக்குக் கொண்டு வரவேண்டும். இதற்கு விடுதலைப் புலி களின் ஒத்துழைப்பும் தேவை.
தமிழ் மக்களை போர் நடைபெறும் இடத் தில் இருந்து பாது காப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல விடுதலைப் புலிகள் உதவ வேண்டும். தொண்டு நிறுவனங்கள், செஞ் சிலுவைச் சங்கம் ஆகிய அமைப்புகள் அவர் களுக்கு மருத்துவ வசதி களைச் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையின் வடக்குப் பகுதியில் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்வ தற்காக இந்திய அரசு மருத்துவக் குழு மற்றும் மருந்துகளை அனுப் பவும் ஏற்பாடுசெய்து வருகிறது.
அடுத்து அரசியல் தீர்வாக இலங்கையில் அனைத்து மாகாணங் களுக்கும் அதிகாரங் களைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் சம உரிமை கிடைப்பதை உறுதிப் படுத்தும் வகையில் அந்த அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும்.
குறிப்பாக தமிழ் மக்களுக்கு இலங்கை யின் சட்டத்துக்கு உட் பட்டு இறையாண்மை பாதிக்காத அளவில் அதி காரப் பகிர்வு இருக்க வேண்டும். இலங்கையில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களின் நல னுக்காக இந்தியாவின் இந்த பொறுப்பான வேண்டுகோளை இலங்கை அரசும், மற்ற வர்களும் ஏற்றுக் கொள் வார்கள் என்று நம்பு கிறேன்.
உடன்பிறப்பே, பிரணாப் அவர்கள் இப்படிப் பேசியது மட்டு மல்ல; டில்லியிலிருந்து அறிக்கையாகவும் இதை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிப்பில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் வழி காட் டும் தலைவி திருமதி சோனியா காந்தி அவர் களின் கருத்தும் - இந் தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர் களின் கருத்தும் கலந் திருக்கின்றன என்பதை நான் சொல்லவும் வேண் டுமோ?
இலங்கைத் தமிழர் களை வாழ வைப்பதற் கும் -
அவர்களின் உரிமை களை இலங்கையில் நிலை நாட்டுவதற்கும் -
தமிழகத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பிலும் - அரசு சார் பிலும் எடுத்த முயற்சி களுக்கும் -
எரியுண்டு மாண்ட இனமான ஏந்தல்களின் தியாகத்துக்கும்-
தமிழகச் சட்ட மன் றத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களுக் கும் -
நேரில் சந்தித்து தமி ழகத் தலைவர்கள் வலி யுறுத்திய முறையீட் டுக்கும்-
பலன் கிடைத்தது என்பது போல ; இந் தியப் பேரரசின் போர் நிறுத்த வலியுறுத்தல், எனக்கு மருத்துவ சிகிச்சை வெற்றியைப் போன்ற மன ஆறுதலை அளிக்கிறது. மத்திய அரசுடன், தீர்மானங்கள் மூலமாகவும் - சந்திப்பு கள் மூலமாகவும் - மகஜர்கள் மூலமாகவும் - நேரடியாகவும் - ஒல்லும் வகையெல்லாம் தொடர்பு கொண்டு செய்த முயற்சிகளால் இன்று;
அனல் மின் நிலைய விழா - பிரணாப் பேச்சு - அவரது அறிக்கை - இவைஅனைத்தும் நம் நெஞ்சத்து அனலைத் தணித்து ஆறுதல் பூங் காற்றாய் வீசச் செய் திருக்கிறது.
ஆனால். இந்த நேரத்தில்தான் இலங் கைத் தமிழர் பிரச் சினையை மாசாக்கி - மண்ணாக்கி - காசாக்கி - அரசியலில் நாணயத்தை தூசாக்கி வாழும் சில வக்கிற மூளையினர்; தாங்கள் வகித்த பொறுப் புகளுக்குத் தகுதியற் றோர் என்று காட்டிக் கொள்ள பிரணாப் வருகையை எதிர்த்து - மறியல் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு -நாகரிகக் கேடாக நடந்து கொண்டு நமது மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப்பின் படங் களுக்கும் தீயிட்டுப் பார்த்து திருப்தி அடைந் திருக்கின்றனர்.
யார் அவர்கள் - சிங் களவத் தலைமையாளர், ராஜபக்சே தமிழர் கள்மீது நடத்தும் படு கொலைக்கு நியாயவா தம் எடுத்துரைத்த ஜெய லலிதாவின் பாதார விந்தங்களே; தமக்கு ஆதார அடி பீடங்கள் என அர்ச்சித்துக் கொண் டிருப்பவர்கள்; அந்த அம்மா ஜெயாவின் அத்யந்த சீடர்கள், இலங் கைப் பகைவர்களை விட்டுவிட்டு, இந்தியத் தலைவர்களின் படங் களுக்குத் தீயிட்டுக் கொளுத்துகிறார்கள் என்றால்; தேசப் பாது காப்புக்கான சட்ட ரீதி யான நடவடிக்கைகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா?
முடியாது, முடியாது, முடியவே முடியாது!
இலங்கைத் தமிழர் களுக்கு அதிகாரமும் - அங்கே அமைதியும் கிடைத்து அவர்கள் வாழ்ந்திட நாம் தமிழ் உணர்வோடு பணி புரிகிறோம் - அதில் கிடைக்கும் வெற்றிக் காகக் காத்து நிற்கிறோம் - மத்திய அரசுடன் இணைந்து இலங்கையில் போர் நிறுத்தம் இப் போதே கேட்கிறோம் - ஆம்; இந்த உலகில் பெரிய தேசமாம் - இந்திய நாடு கேட்கிறது - பிர ணாப் முகர்ஜி கேட்டுள் ளார் - இந்திய அரசு கேட்கிறது - நாமும் கேட்கிறோம்;
போரை நிறுத்து
போரை நிறுத்து என்று!
மத்திய அரசிடமிருந்து புறப்பட்டுள்ளது அந்த வாசகம் -
அதுவும் மார்ச் முதல் நாள் - மருத்துவமனையி லிருந்து நான் மட்டுமல்ல; என் பழைய நண்பர் வாஜ்பாய் அவர்களும் நலம் பெற்று வெளிவரும் நாள் -
சென்னையில் தம்பி மு.க. ஸ்டாலின், இளை ஞர் அணியின் சார்பில், உருவாக்கிய அன்பகம் எனும் அழகு மாளி கையும் இந்த நாளில் திறக்கப்படுகிறது. நான் பொருளாளராக இருந்து, அண்ணா அவர்கள் திறந்து வைத்த அந்த அன் பகம், இன்று புதுப்பிக் கப்பட்டு, விரிவாக்கப் பட்டு பெரிய மாளி கையாக தம்பி ஸ்டாலின் பொருளாளராக இருக் கின்ற நேரத்தில் திறக்கப் படுகிறது.
இந்நாளில் -
அனைவர் அகமும்
பகையும் புகையும்
அகன்று; அன்பகங் களாக
மாறட்டும்!
அந்த ஆசையுடன்;
வலிநீங்கிய ஆறுதலு டன் -
வருகிறேன் உடன் பிறப்புகளே!
உமை வாரியணைத்து
மகிழ்ந்திட வருகிறேன்.
அன்புள்ள,
மு.க.

நன்றி விடுதலை

Posted in |

1 comments:

  1. Anonymous Says:

    எனக்கு வெறுத்தே போய்விட்டது.
    .தமிழர்கள் ஈழத்தில் இப்படிக் கொல்லப் பட்டு கொடுமைப்படுத்தப் பட்டு தினம் வதை படும்போது ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக குரல் கொடுக்காமல் அரசியல் நன்மைகளைக் கருத்தில் கொண்டு கூட்டணி பற்றி எல்லோரும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
    ஒரு சோதனை மிக்க கால கட்டத்தில்தான் உண்மையான மக்கள் தலைவன் அடையாளம் காணப் படுகிறான்
    தமிழ் நாட்டில் ஒருவரும் நம்பத்தகுந்த மாதிரி இல்லை.
    வைக்கோ ஜெயலலிதாவை விட்டு விலக வேண்டும் ,செய்வாரா?
    மருத்துவர் ராமதாஸ் தனது மகனைப் பதவி விலகச் செய்து காங்கிரசுடன் உள்ள தொடர்பை அறுக்க வேண்டும் செய்வாரா?
    கலைஞர் காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் அந்தக் கூட்டணியில் இருந்து திருமாவளவன் விலக வேண்டும் செய்வாரா? .
    இடது சாரிகள் ஜெயலலிதாவின் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் செய்வார்களா?
    கலைஞர் காங்கிரசில் இருந்து விலகி தனது பகையை மறந்து தமிழனத்தின் நன்மைக்காக வைக்கோவை சந்திந்து மதிமுக பாமக விடுதலைச் சிறுத்தைகள் இடதுசாரிகள் தேதிமுக ஆகியவுடன் இணைந்து ஒரு கூட்டணி அமைத்து வருகிற தேர்தலில் போட்டியிட்டு உருப்படியாக ஆக்க பூர்வமாக ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுத்தால் நிச்சயமாக நல்லது செய்ய முடியும் ஆனால் செய்ய மாட்டார். அவர் சொல்லி இலங்கை அரசோ மத்திய அரசோ கேட்குமா என்று சிலர் நினைக்க கூடும் .மக்கள் சக்தியும் சரியான ஒற்றுமையான அரசியல் பலம் கொண்ட தலைமையும் இருந்தால் நிச்சயம் மாற்றம் கொண்டு வர முடியும்
    இப்போது மக்கள் உணர்வும் எழுச்சியும் சரியான தலைமையும் பாதையும் இல்லாமல் தடுமாறிக் கொண்டுள்ளது
    அக்டோபர் மாதத்தில் தொடங்கிய ஈழ ஆதரவு அலை சரியாக கலைஞர் கருணாநிதியின் தலைமையில் எல்லா அரசியல் வாதிகளையும் உள்ளடக்கி (,ஜெயலலிதா ,காங்கிரஸ் தவிர ஏன் என்றால் அவர்கள் எப்போதுமே தமிழர்களுக்கு ஆதரவாக வரமாட்டார்கள் ).நேர்மையாக வழி நடத்தப்பட்டிருந்தால் ஈழதமிழரின் பல உயிர்களையும் அவர்களின் அரசியல் உரிமைகளும் பாதுகாக்கப் பட்டிருக்கும்
    துரதிஷ்டவசமாக தமிழகத்தில் தூர நோக்குப் பார்வை ,மக்கள் நலம் மீது அக்கறை ,நேர்மை ,சுயநலமின்மை போன்ற அரிய பண்புகள் கொண்ட தலைவர்கள் மிகவும் குறைவு ,அப்படி இருந்தாலும் அவர்களுக்கு அரசியல் பலம் இல்லை.
    ஈழத்தமிழரின் இன்றைய நெருக்கடியான கால கட்டத்தில் அவர்களை இப்படிக் கை விட்டு போலி அரசியல் செய்யும் கலைஞரும் அவரின் வாரிசுகளும் நாளை தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு எதிராக ஏதாவது இக்கட்டான நிலை வந்தாலும் இப்படித்தான் காலை வாரி விடுவார்கள்.
    ஈழத்தில் சிங்கள அரசுக்கு கூலிப்படையாகச் சில தமிழர்கள் இருந்து கொண்டு தமிழரின் உயிர்களையும் உரிமையும் விலை பேசுகிறார்கள் .
    இங்கே தமிழ் நாட்டில் பதவி ஒன்றே குறியாக காங்கிரசுடன் சல்லாபம் செய்து தமிழர்களுக்கு துரோகம் செய்கிறார்கள்.
    மற்ற இனங்களை விட தமிழ் இனத்தில் தான் ஒற்றுமை குறைவாகவும்
    துரோகிகள் கூடவாகவும் உள்ளனர்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails