இலங்கையில் போர்நிறுத்தம் செய்யப்படவேண்டும்-ஜெயலலிதா தலைமையில் வரும் 10 ஆம் தேதி உண்ணாவிரதம்
Posted On Thursday, 5 March 2009 at at 10:21 by Mikeஅம்மா ஜெ, நீ யாருக்காகம்மா இருக்கற இந்த உண்ணாவிரதம், போரில் மக்கள் சாவது சாதரணம்தான் என அறிக்கை விட்டுட்டு இப்ப ஓட்டு எங்கே போய்விடுமோ என்று பயந்து இப்படி ஒரு உண்ணாவிரதம் தேவையா. இந்த தேர்தலில் அதிமுக, திமுக ஓரம் கட்டப்படுவது உறுதி. ஒரு புதிய தலைவரை கண்டுள்ளோம். உங்களின் ஊழல், மொன்னை மாரி தனங்கள் எல்லாம் இனி எடுபடாது.
சென்னை: இலங்கையில் போர்நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில், வரும் 10ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில், தான் பங்கேற்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கை ராணுவத்தின் கொடூரத் தாக்குதல் காரணமாக, அங்கு அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதாகவும், பசி, பட்டினியால் அந்நாட்டில், தமிழர்கள் வாடிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காயமடைந்த தமிழர்கள் போதிய மருத்துவ சிகிக்சை கிடைக்காமல், பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி வருவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். எனவே, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதே ஒரே வழி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை, மத்திய-மாநில அரசுகள் வேடிக்கை பார்ப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அந்நாட்டில், போர்நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் வரும் 10ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றும், சென்னையில், தனது தலைமையில் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த போராட்டத்தின் மூலம் திரட்டப்படும் நிதி, இலங்கை தமிழர்கள் நலனுக்காக ஒப்படைக்கப்படும் என்றும், எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒண்ணும் சீரியசா எடுத்துக்காதீங்க. ஜெ.யோட டயட்டிசியனும், மருத்துவ ஆலோசகரும் அவங்க ஒரு ரெண்டு நாளுக்கு சாப்பிடாம இருக்கிறது அவங்க ஒடம்புக்கு நல்லதுன்னு சொல்லியிருக்காங்களாம். இல்லனா போகுற போக்குல என்னிக்காவது வீங்கி வெடிச்சிருவாங்க. அதனால அவங்க ஒடம்புக்கு நல்லது பண்ணுற டயட்டு உண்ணாவிரதாம் இது.