இது உண்மையாக இருந்தால், புலிகள் செய்ய வேண்டியது

புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 750 படையினரை மீட்டுத்தருமாறு பெற்றோர் ஐ.சி.ஆர்.சியிடம் கோரிக்கை

1)தமிழர் நிலங்களை ஆக்கிரமித்த சிங்கள ராணுவம் அங்கிருந்து வெளியேற வேண்டும். இனி இப்படியானதொரு ஆக்கிரமிப்பை ஒரு நாளும் மேற்கொள்ள கூடாது.

2)தமிழர்களை கொல்வது நிறுத்தப்பட வேண்டும்

3)தமிழர்களை கொன்றதற்கு ராசபக்சே பொதுமன்னிப்பு கேட்க வேண்டும். தமீழீழ குற்றவாளி கூண்டில் ராசபக்சே ஏற்றப்பட வேண்டும். அதை தமீழீழ நீதித்துறை விசாரணை செய்ய வேண்டும்.

4)தமிழர்களை இனி கொல்ல மாட்டேன் என்ற ஒப்பத்தில் கையொப்பமிட வேண்டும்.

5)முதலில் 50 பேரை விடுதலை செய்யலாம், எப்படி மேற்கூறிய 4-விதிகளும் கடைபிடிக்கபடுகிறதோ அதை பொறுத்து பகுதி, பகுதியாக இவர்களை விடுவிக்கலாம்.இலங்கை இராணுவத்தில் இருந்து காணாமல் போனவர்களின் பெற்றோர்கள், தமது பிள்ளைகள் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் தேடிப்பார்க்குமாறு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.
இராணுவ செய்தி ஊடகத்தினால், இவர்கள் விஸ்வமடு பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டதையடுத்தே அவர்கள் இந்த வலியுறுத்தலை மேற்கொண்டுள்ளனர்.

கண்டியில் உள்ள, இராணுவத்தில் காணாமல் போனவர்களின் சங்கத்தினால், சர்வதேச செஞ்சிலுவை சஙகத்தின் கொழும்பு கிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் ஒன்றில், சுமார் 750 இராணுவத்தினர் விடுதலைப் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3ம் திகதி பெப்ரவரி மாதம் இலங்கை இராணுவத்தினால் விஸ்வமடு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட நகர்வினை தாங்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும், அந்த பிரதேசத்தில் உள்ள தடுப்பு முகாமில் சுமார் 750 க்கும் அதிகமானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் இராணுவ இணையத்தளத்தில் காண்பிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேவேளை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அவர்களை விடுவிப்பது தொடர்பில் துரிதமாக செயற்பட வேண்டும் என அந்த கோரிக்கை கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


நன்றி:
http://www.tamilwin.com/view.php?2a36QVH4b33P9EMe4d46Wn5cb0bf7GU24d2YYpD4e0dJZLu0ce02g2hF0cc3tj0Cde

Posted in |

3 comments:

 1. Anonymous Says:

  என்ன் உன்மை_
  எல்லாம் கட்டுக்கதை.
  அது அந்த் குள்த்தை உடச்ச கதைதான்

 2. Mike Says:

  /* என்ன் உன்மை_
  எல்லாம் கட்டுக்கதை.
  அது அந்த் குள்த்தை உடச்ச கதைதான் */

  ஆனால் அது உண்மையோ இல்லையோ, அது பல குடுமிகளின் தூக்கத்தை கலைச்சது உண்மை.
  குடுமி சாரே போயி நிம்மதியா தூங்குமய்யா.

 3. Anonymous Says: This comment has been removed by a blog administrator.
Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails