இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவைத் தலையிட கனடா வலியுறுத்தல்
Posted On Wednesday, 11 February 2009 at at 11:09 by Mikeகனடாக்கு நன்றிகள், தயவு செய்து இந்தியாவை விட்டு வேறு யாராவது பேச்சு வார்த்தைக்கு அனுப்புங்கள். தமிழர்கள் இந்தியர்களால் சபிக்கப்பட்டவர்கள்.
இலங்கைப் பிரச்சினையில் இந்தியா உடனடியாக தலையிட வேண்டும். அங்கு அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கனடா வெளியுறவு அமைச்சர் லோரன்ஸ் கேனான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதற்கு ஐ.நா. சபை, பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆனால் அதை சிறிலங்கா கண்டு கொள்வதாக இல்லை.இந்த நிலையில், உடனடியாக இப்பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும், சிறிலங்கா அரசுடன் பேசி அப்பாவிகளைக் கொல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கனடா கோரியுள்ளது.
இதுதொடர்பாக கனடா வெளியுறவு அமைச்சர் லோரன்ஸ் கேனான், மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அவசரமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
அப்போது பிரணாப் முகர்ஜி, கேனானிடம் கூறுகையில், இலங்கையின் வட பகுதியில் உள்ள மக்களின் நிலை குறித்து இந்தியா தொடர்ந்து கவலையுடன் உள்ளது.அப்பாவி மக்களின் பாதுகாப்பு முக்கியமானது என்பதை சிறிலங்காவிற்கு ஏற்கனவே இந்தியா எடுத்துக் கூறியுள்ளது.
மேலும், இடம் பெயர்ந்த அகதிகள் தொடர்ந்து தாக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் எனவும் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.இலங்கையில் எவ்வளவு விரைவில் அதிகாரப்பகிர்வுத் திட்டத்தை அமல்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். அதுதான் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்றார் முகர்ஜி.
இந்திய மத்திய வெளியுறவு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நன்றி http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=1915&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51