தீக்குளிப்பது தீக்குளிப்பவர்களின் தவறா அல்லது இந்த சமூகத்தின் தவறா

கண்டிப்பாக இது இவர்களின் தவறல்ல, இந்த சமூகமே அதற்கு முழுப்பொறுப்பும் ஏற்க வேண்டும்.தன்னால் தன் இனத்திற்கு எதுவும் செய்ய முடியவில்லையே, தன்னுடைய சாவாவது லட்சம் மக்களின் உணர்வினை தட்டி எழுப்பி அதன் மூலம் பல லட்சம் மக்கள் காக்கபட மாட்ட்டார்களா என்பதே இவர்களின் மனநிலை. ரொம்ப, ரொம்ப, ரொம்ப நல்லவர்கள். உறுதி மனநிலை படைத்தவர்கள். ஒரு நொடியில் எடுக்கும் முடிவல்ல. அதுவும் இந்த சமுதாய நலத்திற்க்காக தீக்குளிப்பவர்கள் வெளியில் நடக்கும் அனைத்து கொடுமைகளையும் அன்றாடம் பார்த்து,கேட்டு அதன் மூலமே முடிவெடுக்கிறார்கள்.


பல லட்சம் மக்களின் உணர்ச்சிகளை தட்டி எழுப்ப அதற்க்காக தன்னையே காணிக்கையாக்குகிற இவர்கள் பெரும் தியாகிகளே சமூகத்திற்கு.

ஆனாலும் இது தவறுதான், அவரும் அவருடைய குடும்பத்தை சார்ந்தவர்களுக்கும் ஒரு தாங்க முடியாத இழப்பே. இவர்களின் மனதில் எந்த சுயநலமும் இல்லாததே இந்த முடிவிற்கு வருவதற்கு எளிதாக இடம் கொடுத்து விடுகிறது. இவர்களின் இந்த முடிவிற்கு முக்கிய காரணம் சமூகத்தில் இவர்கள் காணும் துரோகிகளே. தமிழனாக இருந்து கொண்டே தமிழனை இகழ்ச்சியாகவும், பிரச்னைகளை திசைதிருப்பியும் பேசும் சமூக துரோகிகளே இவர்களது மரணத்திற்கு காரணம்.

தீக்குளிப்பிற்கு முழுப்பொறுப்பும் இந்த சமூகத்தினுடையதே. இன துரோகிகளே மாறுங்கள்.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails