ஈழப்போர் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்த போகும் சமர்

விடுதலைப் புலிகளை இராணுவம் மிகவும் குறுகிய பிரதேசத்திற்குள் முடக்கி விட்டதாகவும், அந்த பரப்பளவு நாளுக்கு நாள் சுருங்கி வருவதாகவும் படைத்தரப்பு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது. எனவே தென்னிலங்கை சிங்கள மக்கள் தொடக்கம் அனைத்துலக சமூகம் வரையிலும் இறுதிப்போரின் முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

ஆனால் இறுதிப்போரை விடுதலைப்புலிகள் எங்கு இருந்து ஆரம்பிப்பார்கள்? பெரும்பாலான படைத்துறை அதிகாரிகள் இறுதி போர் கிளிநொச்சியில் நடக்கலாம் என எதிர்பார்த்தனர், பின்னர் முல்லைத்தீவில் நிகழலாம் என கூறினர். அதன் பின்னர் சாலைப் பகுதியில் என கணிப்பிட்டனர். ஆனால் எதுவும் நிகழவில்லை. முல்லைத்தீவில் இருந்து விடுதலைப்புலிகள் பின்வாங்கியது பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை கொடுத்தது.

ஆனால் தென்னிலங்கை பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தின் ஆய்வுகள் எல்லாம் தவறாகி போனது எதனால்? அவர்கள் விடுதலைப்புலிகளை சாதாரண இராணுவமாக கணிப்பிட்டது தான் அதற்கான காரணம். பொதுவாக இராணுவ உத்திகளில் எதிர்த்தரப்பு பலம் பொருந்திய நிலையில் இருக்கும் போது மறு தரப்பு தப்பி செல்லும் உத்திகளுடன் கூடிய பின்தளத்தையே பேண முற்படும். அதற்கு ஏற்ற இடங்கள் சாலையும், முல்லைத்தீவும் தான். எனவே தான் அதனை விடுதலைப்புலிகளின் இறுதி சமர்க்களங்களாக அரசு கணிப்பிட்டிருந்தது.

எனினும் விடுதலைப்புலிகள் முல்லைத்தீவில் இருந்து வெளியேறியது அகில உலகத்தையும் ஆச்சரியத்திற்கு உட்படுத்தியிருந்தது. அவர்கள் அங்கு தமது ஆயுதக்களஞ்சியங்களையும், படையணிகளையும் வைத்திருப்பார்கள் என படைத்தரப்பும் நம்பியது. ஆனால் விடுதலைப்புலிகளை சாதாரண இராணுவத்துடன் ஒப்பிட முடியாது. அவர்களின் உளவுரனும், போரிடும் நுட்பமும் அலாதியானவை.

1996 ஆம் ஆண்டு வரை சிறீலங்கா இராணுவம் முகாம் அமைத்து இருந்து இடம் முல்லைத்தீவு. அதன் பூகோள அமைப்பு சிறீலங்கா இராணுவத்திற்கு நன்கு பரீட்சயமானது. எனவே அங்கு கனரக ஆயுதங்களையும், படையணிகளையும் தக்கவைத்து இறுதி போரை நடத்துவதற்கு விடுதலைப்புலிகள் எண்ணியிருப்பார்கள் என சிறீலங்கா இராணுவம் எண்ணிணால் அது அவர்களின் முட்டாள்த்தனம்.

விடுதலைப்புலிகளின் புலனாய்வு கட்டமைப்பு உலகின் மிகச்சிறந்த புலனாய்வு கட்டமைப்புக்களில் ஒன்று. அது அனைத்துலக படைத்துறை ஆய்வாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். அவர்கள் படைத்தரப்பின் உத்திகளை முன்கூட்டியே அறிந்து கொண்டதுடன், முல்லைத்தீவை தமது பிரதான தளமாகவும், சாலையை கடற்புலிகளின் பிரதான தளமாகவும் எல்லோரையும் நம்ப வைத்திருந்தனர். ஆனால் படைத்தரப்பு அவற்றை கைப்பற்றிய போது அங்கு எதுவும் இருக்கவில்லை.

படைத்தரப்பு இறுதி நகர்வுக்கு தற்போது தயாராகி வருகின்ற போது விடுதலைப்புலிகள் தமது தாக்குதல் களமாக புதுக்குடியிருப்பை தெரிவு செய்துள்ளனர். புதுக்குடியிருப்பு தொடர்பான செய்மதி புகைப்படங்களை அவதானிக்கும் போது மேலும் சில விடயங்களை புரிந்து கொள்ள முடியும். மக்கள் குடியிருப்புக்களை கொண்ட அந்த கிராமம் கடலுடன் நேரடியான தொடர்புகளை கொண்டது. ஊடகங்கள் விடுதலைப்புலிகள் கட்டுப்புற சண்டைக்கு மாறப்போகின்றனர் என ஆருடம் கூறுகின்ற போதும், யதார்த்தம் மாறுபட்டது. ஏனெனில் புதுக்குடியிருப்பை ஊடறுத்து செல்லும் ஏ-35 நெடுஞ்சாலைக்கு தெற்குப்புறம் தான் அதிக காடுகளை கொண்ட பிரதேசம் உள்ளது. கிழக்குப்புறம் சிறிய காடுகளும் குடியிருப்புக்களுமே அதிகம்.

தற்போது இராணுவம் ஏ-35 சாலைக்கு தெற்குபுறமே நிலைகொண்டுள்ளது. அதாவது காட்டுப்பகுதிக்குள் அவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். எனவே விடுதலைப்புலிகளின் இறுதித்தாக்குதல் காட்டுப்புறச்சமாரக இல்லாது கிராமப்புற சமராக இருக்கலாம் என்பது தற்போது எழுந்துள்ள ஊகம். இராணுவம் காட்டு பகுதிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதும் அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

சிறிலங்கா படைத்தரப்பு தினமும் 10 தொடக்கம் 20 விடுதலைப் புலிகளின் சடலங்களை கைப்பற்றி வருவதாக தெரிவித்து வருகின்றது. எனினும் அது தொடர்பான புகைப்படங்களை தற்போது அவை வெளியிடுவதில்லை. அவர்கள் உடைந்த கட்டடங்களையும், கைவிடப்பட்ட எண்ணை பரல்களையும், கைவிடப்பட்ட பொருட்களையுமே காட்டுகின்றனர். வவுனியா வைத்தியசாலை பிரேத அறையில் 40 தொடக்கம் 50 சடலங்களையே வைக்க முடியும். நீதிமன்னறத்தின் அனுமதியின்றி சடலங்களை அடக்கம் செய்யவும் முடியாது. இரண்டு தடவைகளில் 70 சடலங்களே அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளன. எனவே படையினரின் தகவல்கள் தவறானவை.

விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் இராணுவத்தை புதுக்குடியிருப்பு நோக்கி வரவைத்துள்ளனர். புதுக்குடியிருப்பு சமருக்காக அவர்கள் பெருமளவான கனரக ஆயுதங்களையும் நகர்த்தியுள்ளனர். விடுதலைப்புலிகள் வசம் 10 பிரதான போர் டாங்கிகள், பல டசின் கவச வாகனங்கள், இரண்டு பல்குழல் உந்துகணை செலுத்திகள், 200 மோட்டார்கள், 60 பீரங்கிககள் உட்பட பெருமளவான கனரக ஆயுதங்கள் உள்ளதாக நம்பப்படுகின்றது. சிறீலங்கா வான்படையினரின் வான் தாக்குதல்களில் இருந்து அவற்றை பாதுகாத்து இறுதிச்சமருக்காக தயார்படுத்தி வைத்துள்ளனர்.

முன்னைய அனுபவங்களில் இருந்து தெரிந்து கொண்டது ஒன்று தான் அதாவது விடுதலைப்புலிகள் தமது கனரக ஆயுதங்களை நிலையான இடத்தில் வைத்து தொடர்ந்து பயன்படுத்துவதில்லை. உதாரணமாக டாங்கி ஒரு இடத்தில் இருந்து சூடுகளை வழங்கினால் அது சில நிமிடங்களில் வேறு இடத்திற்கு நகர்ந்து விடும். விடுதலைப்புலிகள் கவசத்தாக்குதல் படை பிரிவை ஆரம்பித்துள்ளதாக படைத்தரப்பு ஒத்துக்கொண்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. விமானங்களின் வரவை கண்டறியும் நவீன ராடார் வசதிகளும் விடுதலைப்புலிகள் வசம் உண்டு. எனவே தான் வான்படை திடீர் தாக்குதல்களுக்கு தாழ்வாக பறக்கும் எம்ஐ-24 மற்றும் எம்ஐ-35 ரக உலங்குவானூர்திகளை பயன்படுத்தி வருகின்றது. ஆனால் அவற்றின் தாக்குதல் எல்லைகள் மட்டுப்படுத்தப்பட்டவை.

முல்லைத்தீவும், சாலைப்பகுதியும் நீரேரிகளை உடைய குடா பகுதிகளை கொண்டவை அந்த நீரேரிகளை தற்காலிக அமைக்கப்பட்ட பாலங்கள் மூலம் கடந்து 55 ஆவது படையணியும், 59 ஆவது படையணியும் கனரக வாகனங்களை புதுக்குடியிருப்பு நோக்கி நகர்த்தி வருகின்றன. ஆனால் விடுதலைப்புலிகள் திடீர் தாக்குதலை நிகழ்த்தும் போது அவர்கள் இந்த கனரக வாகனங்களை கைவிட்டே ஓடவேண்டியிருக்கும். எடுத்து செல்வது கடினம். புதுக்குடியிருப்பின் கரையோர பகுதிகளை இரு படையணிகள் கைப்பற்ற முனைந்து வருகையில் ஏனைய 5 டிவிசன்களும் தெற்கு மற்றும் மேற்கு திசைகளில் நகர்ந்து வருகின்றன.

ஆனால் விடுதலைப்புலிகள் இராணுவத்திற்கு காட்டுப்புற பகுதிகளை விட்டுவிட்டு நகர்ப்புற பகுதிக்கு நகர்ந்துள்ளனர். இராணுவம் புதுக்குடியிருப்பின் மேற்கிலும், தெற்கிலுமாக காட்டுப்பகுதிகளில் நிலைகொண்டுள்ளது. ஆய்வாளர்கள் விடுதலைப்புலிகள் காட்டுப்புற பகுதியில் நிலையெடுக்க போகின்றனர் என தெரிவித்து வந்த நிலையில் அதற்கு மறுதலையான களமுனை மாற்றம் அங்கு நிகழ்ந்துள்ளது. அதாவது இராணுவத்திற்கு காட்டுப்புற பகுதிகளையே அவர்கள் விட்டு வைத்துள்ளனர். அதன் காரணம் என்ன?

இராணுவ உத்திகளில் விடுதலைப்புலிகள் தரமான அனுபவங்களை கொண்டவர்கள். அவர்கள் முல்லைத்தீவிலும் சாலையிலும் நிலைகொள்ள போவதாக அனைத்து உலகின் படைத்துறை நிபுணர்களை எல்லாம் நம்பவைத்துவிட்டு அதற்கு மறுதலையான களமுனையை தெரிவு செய்துள்ளனர். சிறீலங்கா இராணுவத்திற்கு காட்டுப்புற தற்காப்பு சமர் அனுபவம் குறைவு. அதாவது காட்டுப்புற தற்காப்பு சமருக்கு பழக்கமற்ற இராணுவம் தற்போது காட்டுப்பகுதியில் நிலையெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது. இது சிறீலங்கா இராணுவத்திற்கான மரணப்பொறி.

காட்டுப்பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் மீது வலிந்த தாக்குதல்களை விடுதலைப்புலிகள் தீவிரப்படுத்தப்போகின்றனர். அதற்கான ஆரம்பமே கடந்த 1 ஆம் நாள் புதுக்குடியிருப்பில் நிலைகொண்டிருந்த 59 ஆவது படையணிக்கு ஏற்பட்ட அனுபவம். அடர்ந்த காட்டுப்பகுதிகளில் இராணுவத்திற்கு வான்படை அதிக உதவிகளை வழங்க முடியாது.

காட்டுப்பகுதியில் உள்ள தமது தளங்களுக்கு இராணுவம் ஆயுதங்களை தருவிக்கும் போதும் விடுதலைப்புலிகள் அதிர்ச்சிகரமான தாக்குதல்களை நிகழ்த்தலாம். காட்டுக்குள் ஊடுருவி தாக்கும் விடுதலைப்புலிகளின் சிறப்பு அணிகளினால் இராணுவம் அதிக அச்சங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதுடன்;, அவர்களின் உளவுரனும் பாதிப்படையலாம். ஆழமான காட்டுப்பகுதிகளில் வினியோகங்களை பேணுவதும் படைத்தரப்பிற்கு கடினமானது.

இந்த உத்திகளை நடைமுறைப்படுத்துவதற்கு விடுதலைப்புலிகளுக்கு போதிய படைபலம் உண்டா? விடுதலைப்புலிகள் வசம் 1000 போராளிகள் உள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் அது தவறான தகவல் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. ஏனெனில் 1000 பேர் 7 டிவிசன் படையணிகளை பல முனைகளில் எதிர்த்து ஒரு நாள் கூட சமர் புரிய முடியாது. முன்னர் 15,000 சதுர கி.மீ பரப்பினை சில ஆயிரம் போராளிகளை கொண்டு அவர்கள் தக்கவைத்திருந்திருக்கவும் முடியாது.

வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்களை பார்க்கும் போது விடுதலைப்புலிகள் எந்த அச்சமும் இன்றி தமது கடமைகளை செய்து வருவதாகவே தெரிவிக்கப்படுகின்றது. நிலப்பரப்புக்களை இழந்ததை தவிர வெற்றி நிச்சயம் படை நடவடிக்கையின் போது ஏற்பட்ட நெருக்கடிகளின் நிலையை கூட தாம் இன்னும் எட்டவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர். போராளிகளின் முகங்களிலும் பதட்டம் தென்படவில்லை. எனவே அவர்கள் உறுதியாக உள்ளனர்.

விடுதலைப்புலிகளின் பகுதியில் ஏறத்தாள 300,000 மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 10 விகிதமானவர்கள் போரிடும் தகமை உடையவாகள் என வைத்து கொண்டால் கூட அவர்களின் பலம் 30,000 இனால் அதிகரித்துவிடும். விடுதலைப்புலிகளின் வசம் ஏற்கனவே 15,000 பயிற்றப்பட்ட போரளிகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அவர்களின் பலம் 45,000 ஆக அதிகரிக்கலாம். விடுதலைப்புலிகளின் செயற்திறன் மிகவும் அதிகம்.

போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த 6 ஆண்டு காலப்பகுதியில் அவர்கள் வீதிகளையும், கட்டடங்களையும் கட்டிக்கொண்டு இருந்திருப்பார்களா அல்லது மக்கள் பாதுகாப்பு படையையும், தமது தாக்குதல் படையணிகளையும் கட்டி எழுப்பியிருப்பார்களா என்பதை நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்.

புதுக்குடியிருப்பு களமுனையில் இராணுவத்திற்கு பல அதிhச்சிகள் காத்திருக்கின்றன. இறுதிப் போர் என்பது அரசு எதிர்பார்ப்பது போல இருக்கப்போவதில்லை. தமிழ் மக்கள் தமது உரிமைக்காக போராடுபவர்கள். அவர்கள் சாவதற்கு அஞ்சுவதில்லை. எப்போதும் சாவிற்கள் வாழ்பவர்கள். ஆனால் சிங்கள சிப்பாய்கள் அவ்வாறனவர்கள் அல்ல. அவர்களில் பெரும்பாலானவர்கள் வறிய விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் சம்பளத்திற்காக படையில் சோந்தவர்களே அதிகம். அவர்கள் ஒரு போதும் சாக துணிவதில்லை. களமுனைகள் பாதகமானால் முதலில் தப்பி ஓடவே எத்தனிப்பார்கள்.

கொள்கை ரீதியாக பார்த்தால் ஒரு படை சிப்பாய் கொல்லப்படும் போது இரு படை சிப்பாய்கள் காயமடைகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் ஒரு சிப்பாய் படையை விட்டு தப்பியோடுவது யதார்த்தமானது. அதாவது 1000 சிப்பாய்கள் கொல்லப்படும் போது 2000 சிப்பாய்கள் காயமடைவதுடன், 1000 சிப்பாய்கள் படையை விட்டு தப்பியோடும் நிகழ்தகவும் உண்டு. அவ்வாறு பார்த்தால் 8,000 பேர் கொண்ட டிவிசனின் பலம் ஒரு ஊடறுப்பு தாக்குதலுடன் 4,000 ஆக குறைந்துவிடும். அதாவது 50 விகித வீழ்ச்சி. தனது பலத்தில் 50 விகிதத்தால் வீழச்சி காணும் எந்த டிவிசனும் மீண்டும் ஒரு பாரிய சமரை எதிர்கொள்ள துணியாது என்பதுடன் அதனை வெற்றி கொள்வதும் இலகுவானது. அதாவது முழு டிவிசனும் செயலிழந்ததாகவே கொள்ளப்படும்.

விடுதலைப்புலிகளின் ஊடறுப்பு தாக்குதலின் போது ஒவ்வொரு டிவிசனும் 1000 சிப்பாய்களை இழக்குமானால் அது இராணுவத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்பதுடன் போரும் முடிவுக்கு வந்ததாகவே கொள்ளப்படும். அரசு கூறுவது போல விடுதலைப்புலிகளின் பலம் 1000 மட்டுமே எனில் இது சாத்தியமற்றது. ஆனால் அவர்களின் பலம் 45,000 எனில் இராணுவம் பேரழிவை சந்திப்பது தவிர்க்க முடியாதது.

எனவே இந்த சமர் ஈழப்போரில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தப்போகும் சமராகும். அனைத்துலகத்திலும் சிறீலங்கா தொடர்பான கருத்துக்கள் மாற்றமடைந்து வருகின்றன. இன்னும் சில வாரங்களில் அவை மேலும் மாற்றமடையலாம். இந்த போர் மேலும் சில மாதங்கள் இழுபட்டு சென்றால் அனைத்துலகத்தின் போக்கில் பல மாற்றங்கள் நிகழலாம். எனவே அனைத்துலகத்தின் ஆதரவுகளை தமிழ் மக்கள் ஒன்றிணைந்து திரட்டும் போது விடுதலைப்புலிகள் பாரிய படைத்துறை வெற்றி ஒன்றை அடையக்கூடும். இது உண்மையானால் எதிர்வரும் சமர் ஈழப்போர் வரலாற்றின் திருப்புமுனை சமராகும்.

நன்றி: நிலவரம் (13.02.09)
-வேல்சிலிருந்து அருஸ்-

Posted in |

11 comments:

  1. Anonymous Says: This comment has been removed by a blog administrator.
  2. மு. மயூரன் Says: This comment has been removed by a blog administrator.
  3. Mike Says:

    /*This post has been removed by a blog administrator. */

    மன்னிக்க வேண்டும், மக்களுக்கு உற்சாகத்தை இழக்க வைக்கும் உங்களது கருத்து சிங்கள மக்களின் இனவெறி கருத்தை போன்று உள்ளது.

  4. Anonymous Says: This comment has been removed by a blog administrator.
  5. Anonymous Says: This comment has been removed by a blog administrator.
  6. Mike Says:

    /*.This post has been removed by a blog administrator.*/

    மீண்டும் மன்னிக்க வேண்டும், நம்மவர்களிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கம், தன் குறையை எங்கு பேச வேண்டுமோ அங்கு பேச தெரிவதில்லை. நீங்கள் உங்கள் கருத்துகளை சிங்கள காடையர்களிடம் சொன்னால் மிக்க மகிழ்ச்சியடைவார்கள். தமிழன் என்ற போர்வையில் இங்கு வேண்டாமே.

  7. Anonymous Says:

    தமிழ் உலகமே எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் மின்னல்-இடி
    யாருமே எதிர் பார்க்காத வகையில் நிகழத்தான் போகிறது.

  8. Anonymous Says:

    மைக் .
    நீங்கள் கூறுகிற மாதிரி நடந்தால் தமிழர்கள் நம்பிக்கை அடைவார்கள்தான்.
    இப்போதைய நிலையில் சில தமிழர்கள் மிகவும் மனச்சோர்வு அடைந்துள்ளார்கள்.அதுவும் தினமும் தமிழர்கள் கொல்லப் படுகிற செய்திகளை அறியும்போது பலர் தங்களால் ஒன்றுமே செய்யமுடியவில்லையே என்று விரக்தியின் எல்லைக்கே போய்க் கொண்டு இருக்கிறார்கள்.எத்தனோயோ தியாகங்கள் செய்து நடத்தப் பட்ட தமிழரின் உரிமைப் போராட்டம் சிங்கள இனவாத சக்திகளாலும் அதற்கு உதவி செய்யும் நாடுகளாலும் நசுக்கப் பட்டு ஈழத்தமிழர் அழிக்கப் பட்டோ அல்லது அடிமை கொள்ளப்பட்டு விடுமோ என்று பலரும் தவிக்கிறார்கள்.
    இந்த சமயத்தில் சிங்கள அரசு ராணுவ ரீதியாக மட்டுமின்றி பிராச்சார அரசியல் ரீதியாகவும் போரைக் கட்டவிழ்த்திருக்கிறது.தமிழ் மணத்தில் வரும் மாற்றுக்கருத்து புலி எதிர்ப்பு என்ற பாவனையில் வரும் சிங்கள பிரச்சார பதிவுகளே இதற்கு சாட்சி .
    மேற்குலக ஊடகங்கிலும் இதே மாதிரி புலிகள் பயங்கரவாதிகள் பொதுமக்களை கேடயமாகப் பாவிக்கிறார்கள் என்ற மாதிரி தமிழர்கள் சில சொன்ன மாதிரி இன்று செய்திகள் போட்டுள்ளார்கள்.இலங்கை அரசு செய்யும் கொடுமைகளை பெரிதாக ஒன்றும் சொல்லாமல் இந்த ஊடகங்கள் ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு சிலரிடம் போய் பேசிவிட்டு வருகிறார்கள்.அங்குள்ள தமிழர்கள் இராணுவத்தினால் இப்படி சொல்லக் கட்டாயப் படுத்தப் படுகிறார்கள் என்று எனக்குத் தெரிந்த ஒருவருக்கு வவுனியாவில் இருக்கும் ஒரு உறவினர்
    எனக்கு சொன்னார்.
    சில தமிழர்களுக்கு இப்போது கடவுள் நம்பிக்கை கூட குறைந்து விட்டது.
    தர்மம் ஜெயிக்கும் அதர்மம் தோல்வி அடையும் என்றால் இத்தனை கொடுமை செய்யும் ராஜபக்ச இப்படி வெற்றிக்கு மேல் வெற்றி அடைவது எப்படி என்று இளைய சமுதாயம் கேள்வி கேட்கிறது.
    அது மட்டுமில்லை இப்படி அக்கிரமம் செய்யும் சிங்கள அரசை ஒரு உலக நாடுமோ அமைப்போ பெரிதாகக் கண்டிக்கவில்லை ,அத்துடன் ராஜபக்சவுக்கு உதவியும் செய்கிறார்கள் இதுவும் பல தமிழர்களை வருத்தம் கொள்ள வைக்கிறது.
    நான் அறிந்து பல தமிழர்கள் இப்போது சரியாக நித்திரை கூடக் கொள்ளாமல் தவிக்கிறார்கள் .
    அன்பான தமிழ் மக்களே,
    நாங்கள் என்ன செய்ய வேண்டும் இந்த நிலைமையை மாற்றுவதற்கு என்று சொல்லுங்கள்

  9. Anonymous Says:

    Mike,
    Reading of all the civilian deaths, and the lack of sensitivity by world medias(again Gaza!), we the Tamils of the world, can't but feel depressed.

    Tigers must win this war. Tamils in Tamilnadu and around the world must unite. Around the world, we are starting to unite. But it is Tamilnadu politics, which has become a bane for Tamilians. When will this change?

    Vetri kodi pulikaL pakkam vendum. Athe en venduthal. Athe ulaga niyayam kooda. But this loss so far has been unexpected by Tamils. That is also the truth.

    Hope to see many thousands, in US of Feb 20. If only we can arrange for a crowd even 1/2 the size of Martin Luther King's march 50 years ago, we can bring awareness to the people's feelings.

    -kajan

  10. Anonymous Says:

    அங்கிருந்து இது வரை... இனி இங்கிருந்து எது வரை?...
    [திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2009, 07:57 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]
    இன்றைய கட்டத்திற்கு தமிழர் போராட்டம் எப்படி வந்தது, இங்கிருந்து இனி எப்படிச் செல்ல வேண்டும் என்பதை ஆராய்கின்றது இந்த கருத்துரை. வன்னிப் போரினதும், உலகளாவிய போராட்டங்களினதும் பின்னணயில் - காலத்தின் தேவை கருதியும், படித்தோரின் அறிவுரையின் படியும் இதை மீள் பிரசுரம் செய்கின்றது "புதினம்." நன்றி: "தமிழ்நாதம்".
    ஜனவரி 18, 2009

    அன்பானவர்களே!

    அண்மையில் உங்களுக்கு 'இன்னொரு கடிதம்" எழுதியிருந்தேன். பதில்களுள் பல கேள்விகளாகவே வந்திருந்தன. முதன்மையாய் இருந்தது, "இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்ற சிந்தனைக் கேள்வி.

    எம்மைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கின்ற இந்தச் சர்வதேசச் சதி வலை எவ்வாறு படிப்படியாக [Systematically] பின்னப்பட்டது என்பதையும், நாம் எப்படி அதற்குள் சிக்கிக்கொண்டோம் என்பதையும் தெளிவாக விளங்கிக்கொள்வதே எம் முதற் கடமை.

    அந்தச் சதி வலையின் ஒவ்வொரு முடிச்சுக்களும் - ஒவ்வொரு நகர்வுகளாய் - எம்மைச் சுற்றி எப்படிப் போடப்பட்டன என்பதை விளங்கிக்கொண்டால் தான், அவற்றை அவிழ்த்துச் செல்வது எப்படி என்பது பற்றியும் நாம் சிந்திக்க முடியும்.

    பெரும் இராணுவ சாதனையைப் படைத்து புலிகள் முன்னேறினாலும், அல்லது நிலைமை மேலும் சிக்கலாகி அவர்கள் பின்னடைந்தாலும் -

    இதுவரை என்ன நடந்தது என்பதை உற்று நோக்குவது, இனிமேல் நாம் செயற்படும் போது என்ன முட்டுக்கட்டைகள் எம் வழியில் போடப்படும் என்பதை விளங்கிக்கொள்ளவும் அவற்றை மேவிக்கடந்து நாம் முன்னே செல்வது எப்படி என்பது பற்றிச் சிந்திக்கவும் உதவும்.

    நிகழ்வு:

    தமிழர்களுக்கு எதிரான இந்தச் சதிவலையை இந்தியாவும், மீதி உலகமும் [Rest of the world] இரண்டு முனைகளினூடாகப் பின்னுகின்றன.

    முதலாவது - தமிழீழப் போர்க்களம். அது நேரடியான இராணுவப் படையெடுப்பு.

    அடுத்தது - பன்னாட்டுப் போர்க்களம். அது இராஜதந்திர அரசியல் கபட நகர்வுகள்.

    முதலாவது - பல கற்களை வீசியாவது ஒரே காயை வீழ்த்தும் நோக்கம்: இலக்கு விடுதலைப் புலிகள் இயக்கம்.

    அடுத்தது - ஒரே கல்லில் பல காய்களை வீழ்த்தும் எண்ணம்: இலக்கு பன்னாட்டுத் தமிழ் சமூகம்.

    முதலாவதின் நோக்கம் - புலிகள் இயக்கத்தின் மரபு வழிப் போர்த் திறனை அழித்து, பின்னர் அதனை அரசியல் ரீதியாகவும் ஒதுக்கி - தமிழர்களை நேர்த்தியான அரசியல் பிரதிநிதித்துவம் அற்றவர்களாக்கிச் சிதைப்பது.

    அடுத்ததின் நோக்கம் - வெளிநாட்டுத் தமிழர்களைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரித்து, அரசியல் சக்தியற்றவர்களாக்கி, பின்னர் தமிழர்களது தேசியத் தன்மையையே சிதைப்பது.

    இந்தப் போரில் பல பங்காளிகள் இருக்கின்றார்கள்: முதன்மைப் பங்காளி - இந்தியா; முக்கிய பங்காளி - மேற்குலகம்; உப-பங்காளி - மீதமுள்ள உலகம்.

    இந்த இரண்டு போர்க் களங்களுமே அவற்றிற்குள் பல உப-முனைகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு முனையும் ஒவ்வொரு உடனடி இலக்கு நோக்கி நகர்த்தப்படுகின்றது.

    நோக்கம்:

    இந்த இரண்டு போர்க் களங்களையும் சேர்ந்த ஒட்டுமொத்தமான போரின் இறுதி இலக்கு - தமிழ் தேசிய சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டைச் சிதைத்து, தமிழீழக் கோரிக்கையை அடிப்படை அற்றது ஆக்குவதாகும்.

    ஆனால் ஏன் இப்படி எல்லோரும் சேர்ந்து தமிழர்களுக்கு எதிரான போரை நடாத்துகின்றார்கள்?...

    இந்தியா ஒரு காரணத்திற்காக, அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் வேறொரு காரணத்திற்காக, மேற்குலகிற்கு எதிரான கிழக்குலகம் இன்னொரு காரணத்திற்காக, இஸ்லாமிய உலகம் வேறொரு காரணத்திற்காக நடாத்துகின்றார்கள்.

    ஆனால் - சுருக்கமாக - எல்லோரும் சேர்ந்து, தம் சொந்த கேந்திர அரசியல் நலன்களிற்காக - சிங்கள இனத்தைப் பகடைக் காய்களாகப் பாவித்து, தமிழினத்திற்கு எதிராகப் படை எடுக்கின்றார்கள்.

    இந்தப் போரை நடாத்துகின்றவர்கள் மிகத் தெளிவாக ஒழுங்கமைத்து - நன்கு திட்டமிட்ட வழிமுறைகளினூடாக - படிப்படியாக, நிதானமாக அதைச் செய்கின்றார்கள்.

    அதனால் - இந்தப் போருக்கு உட்பட்டு இருக்கின்ற தமிழர்களாகிய நாங்கள் இந்தச் சர்வதேசச் சதியின் பரிமாணங்களைப் போதிய ஆழத்திற்கு விளங்கிக்கொள்ள வேண்டும்.

    இதுவரை காய்கள் எப்படி நகர்த்தப்பட்டன, இப்போது எப்படி நகர்த்தப்படுகின்றன என்பதை மிகவும் நுணுக்கமாகவும், நெருக்கமாகவும் நோக்கி நாம் ஆராய வேண்டும்.

    அப்போது தான் - இனிமேல் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சரியாகச் சிந்தித்துச் செயலாற்ற முடியும்.

    நகர்வு - 1:

    2001 இன் சூழலைப் பற்றி எனது முதற் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். ஆனையிறவை வீழ்த்தி, புலிகள் முகமாலை வரை முன்னேறியதிலிருந்து கதை ஆரம்பிக்கின்றது.

    போர்க் களத்தில் விடுதலைப் புலிகளின் கை என்றுமில்லாத அளவிற்கு ஓங்கியிருந்ததும், பொருளாதாரத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் கை என்றுமில்லாத அளவிற்குத் தாழ்ந்திருந்தது மேற்குலகத்திற்கப் பிடிக்கவில்லை.

    புலிகளின் போர் எழுச்சியைக் கட்டுப்படுத்தவும், சிறிலங்காவின் பொருளாதார வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தவும் அப்போது அதற்கு இருந்த ஒரே உடனடி வழி - சண்டையை நிறுத்த வைத்துப் புலிகளைப் பேச்சு மேசைக்கு இழுத்து வருவது தான்.

    2002 இல் - இந்தியாவின் மனம் நிறைந்த ஆசீர்வாதத்துடனும், மேற்குலகத்தின் ஏகோபித்த ஆதரவுடனும் சமரச முயற்சிகள் ஆரம்பமாகின. அனுசரணையாளர் ஆகியது நோர்வே; இணைத் தலைமை நாடுகள் என அதனுடன் கூடிக் கொண்டன அமெரிக்காவும், யூரோப்பின் யூனியனும், ஜப்பானும்.

    சிறிலங்கா அரசாங்கத்திற்கும், புலிகள் இயக்கத்திற்கும் இடையில் எழுதப்பட்ட இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையானது - எல்லைகளை வரையறுத்து, பிரதேசங்களை அங்கீகரித்து - விடுதலைப் புலிகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த பொது முகாமைத்துவக் கட்டமைப்பினை ஒரு நடைமுறை அரசாங்கமாகவே [De-Facto State] அங்கீகரித்தது.

    இந்த வரலாற்றுப் புரிந்துணர்வு உடன்படிக்கையை வரைந்துருவாக்கிய பெருமை பாலா அண்ணையையே சேரும். இருந்தாலும், அவரது எண்ணங்களுக்கு இடமளித்து - கடல் தொடர்பான விவகாரங்கள் தவிர வேறு எதற்கும் முட்டுக்கட்டைகள் போடாமல் - உடன்படிக்கை கையெழுத்தாவதற்கு அனுசரணைகள் செய்தது மேற்குலகம்.

    அதற்கு ஒரு மௌனப் புன்னகையோடு ஒப்புதல் கொடுத்தது இந்தியா.

    போர்ச் செயற்பாடுகள் அனைத்தையும் இடைநிறுத்திவிட்டு தமிழ் தேசியப் போராட்டத்திற்கு சமரச வழியில் அரசியல் தீர்வு காணும் முயற்சிகளில் இறங்கினர் விடுதலைப் புலிகள்.

    மேற்குலகம் நியாயத்துடன் செயற்படும் என்று நம்பினர் தமிழ் மக்கள்.

    நகர்வு - 2:

    ஆனால் - இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை எழுதப்படும் வரை நல்லவர்களாக நடித்து, ஆசீர்வாதங்கள் வழங்கி, அனுசரணைகள் செய்த மேற்குலகம், அது நடைமுறைக்கு வந்த பின்னர் தமது சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தது.

    ஓன்றன் பின் ஒன்றாக - தமிழர்களுக்குப் பாதகமான விடயங்கள் அரங்கேற்றப்பட்டன. சிலவற்றை சிறிலங்கா அரசும், சிலவற்றை மீதி-உலகமும், சிலவற்றை இருதரப்பும் சேர்ந்தும் அரங்கேற்றினர்.

    1) போர் நிறுத்த உடன்படிக்கையில் ஒப்புக்கொண்டபடி, சிறிலங்கா அரசு -

    உயர்-பாதுகாப்பு வலயங்களை நீக்கவில்லை.
    பாடசாலைகளிலும், வீடுகளிலும், கோவில்களிலும் குடியிருந்த தமது படையினரை அகற்றவில்லை.
    போரினால் இடம்பெயர்ந்து அல்லற்பட்ட மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கவில்லை.
    மீள்-கட்டுமான மற்றும் புனர்-வாழ்வுப் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட உப-குழுக்கள் செயற்பட இடமளிக்கவில்லை.
    அந்த உப-குழுக்களால் கண்டறியப்பட்ட 75 வரையான வேலைத் திட்டங்களில் எதனையும் செய்ய உடன்படவில்லை.
    2) விடுதலைப் புலிகளின் கடற்-கலங்கள் பல தடவைகள் தாக்கப்பட்டு போராளிகள் கொல்லப்பட்டனர்.

    3) இவ்வளவும் நடந்துகொண்டிருந்த போது - நோர்வேயோ அல்லது இணைத் தலைமை நாடுகளோ, உடன்பட்ட விடயங்களைச் செய்து முடிக்கும் படி சிறிலங்கா அரசின் மீது அழுத்தங்கள் போடவில்லை.

    எல்லாவற்றிற்கும் ஒரு மௌனப் புன்னகையோடு ஊக்கமளித்தது இந்தியா.

    இந்த நேரத்தில் -

    உடன்படிக்கையிலும், அதுவரை நடந்து முடிந்த பேச்சுக்களிலும் ஒப்புக்கொண்ட விடயங்கள் நடக்காதவரை, மீதிச் சுற்றுப் பேச்சுக்களுக்குப் போவதில் பயனேதும் இல்லை என முடிவுக்கு வந்தனர் புலிகள்.

    இந்த இடத்தில் தான் - மேற்குலகம் அதிர்ச்சியடைந்தது.

    சண்டை நிறுத்தத்தை முறித்துக்கொண்டு, புலிகள் மீண்டும் போருக்குப் போய் விடுவார்களோ என்று அது திகைப்புற்றது. புலிகள் திரும்பவும் போருக்குப் போனால், 2001 ஆம் ஆண்டின் கள நிலவரங்கள் தொடர்ந்தால், போர் வலுச் சமநிலையில் புலிகளின் கை இன்னும் ஓங்கினால், சிறிலங்காவின் 'சீர்நிலை" [Stability] குலைக்கப்பட்டால், அதன் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியுற்றால்... விளைவு என்னவாகிவிடுமோ என்று கவலையுற்றது மேற்குலகம்.

    தமிழ் தேசியம் மீண்டும் பேரெழுச்சி பெற்றுவிடுமோ என்று அச்சமுற்றது இந்தியா.

    ஆனால் - புரிந்துணர்வு உடன்படிக்கையைச் செவ்வனே நடைமுறைப்படுத்தி, சொன்னவற்றைச் செய்யுமாறு சிறிலங்கா அரசின் மேல் அழுத்தங்களைப்; போடுவதற்குப் பதிலாக -

    எது நடந்தாலும் அந்த உடன்படிக்கையில் இருந்து விலகாமல் இருக்கப் புலிகள் மீது மட்டும் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வழிமுறையை இந்த உலகம் கையாண்டது.

    அதை அது படிப்படியாகச் செய்தது.

    நகர்வு - 3:

    முதற் படியாக - அடிப்படையாக - தடைசெய்யப்பட்ட ஒர் அமைப்பாகப் புலிகள் இயக்கத்தின் மீது அனைத்துலக ரீதியாக சட்டங்களைக் கொண்டு வந்தது இந்த உலகம்.

    இந்தப் போர் நிறுத்த உடன்படிக்கை எழுதப்படுவதற்கு முன்னர் இரண்டு நாடுகள் மட்டுமே புலிகள் இயக்கத்தைப் 'பயங்கரவாதிகள்" என்ற வரைமுறைக்குள் அடக்கியிருந்தன.

    ஒன்று - இந்திய;அடுத்தது - அமெரிக்கா.

    இப்போது -

    அரசியல் சமரச முயற்சிகளில் புலிகள் ஈடுபட்டிருந்த வேளையிலேயே, அவர்களை ஒரு 'பயங்கரவாத" இயக்கமாக ஏனைய மேற்கு நாடுகள் சட்டங்களைக் கொண்டு வந்தன.

    பிரிட்டன், யூரோப்பியன் யூனியன், கனடா, ஓஸ்ரேலியா என ஒவ்வொரு நாடுகளாக, மேற்குலகம் புலிகள் இயக்கத்தைப் 'பயங்கரவாதிகள்" ஆக்கியது.

    போரை நிறுத்திவிட்டு, தமிழரது அரசியல் அபிலாசைகளை அடைவதற்கு சமரச முயற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு இயக்கத்தைப் 'பயங்கரவாத" இயக்கமாகப் பட்டியலிடுவதற்கு நியாயமான எந்த ஒரு காரணமும் இந்த நாடுகளுக்கு இருக்கவில்லை. ஆனாலும், அவை அதைச் செய்தன.

    தமக்கு எவ்வகையிலும் பயமுறுத்தலாக அமையாத - தமது நலன்களுக்கு எதிராக என்றும் செயற்படாத - ஒர் அமைப்பைப் 'பயங்கரவாத" இயக்கமாகப் பட்டியலிடுவதற்கு எந்தத் தேவையும் இந்த நாடுகளுக்கு இல்லை. ஆனாலும், அவை அதைச் செய்தன.

    எல்லாவற்றுக்கும் ஒரு மௌனப் புன்னகையோடு ஊக்கமளித்தது இந்தியா.

    புலிகள் இயக்கம் மீதான இந்தத் தடை ஒரு Cluster-குண்டு போன்றது. ஒரே பெரிய குண்டு பலவாகப் பரிந்து பல முனைகளில் தாக்குவதைப் போல, பல்பரிமாண நோக்கம் கொண்டது.

    நகர்வு - 4:

    இந்தத் தொடர் தடைகளின் தொடர்ச்சியாக -

    'புரிந்துணர்வு உடன்படிக்கை"யின் ஒரு தரப்பை 'அரசாங்க"மாகவும், அடுத்த தரப்பைப் 'பயங்கரவாதிக"ளாகவும் தரம் பிரித்து நடாத்த ஆரம்பித்தது உலகு.

    'யுத்த நிறுத்தம்" நடைமுறையில் இருந்த போதே கொண்டுவரப்பட்ட இந்தப் 'பயங்கரவாத"ப் பட்டியலிடுதல்களின் உடனடி நோக்கம் -

    சமரச முயற்சியிலேயே ஈடுபட்டிருங்கள் என புலிகள் இயக்கத்தை அழுத்துவது.
    பேச்சு மேசையில் கிடைப்பதை வாங்குங்கள் எனப் புலிகளை நிர்ப்பந்தம் செய்வது.
    சிறிலங்கா அரசு உடன்பாட்டின்படி செய்யாது விடினும் சமரச முயற்சியிலிருந்து விலகாமலிருக்கப் புலிகளை எச்சரிக்கை செய்வது.
    சமரச முயற்சிகளிலிருந்து விலகினால் எதிர்காலம் எல்லா வகையிலும் கடுமையானதாக அமையும் எனப் புலிகள் இயக்கத்தைப் பயமுறுத்தல் செய்வது.
    அதே நேரத்தில் -

    இந்தப் 'பயங்கரவாத'ப் பெயர் சூட்டல்களின் பின்னாலிருந்த நீண்டகால உள்நோக்கம் -

    மேற்சொல்லப்பட்ட எல்லாவற்றையும் மீறிப் புலிகள் புரிந்துணர்வு உடன்பாட்டிலிருந்து விலகினாலோ, அல்லது சிறிலங்கா அரசாங்கமே போரை ஆரம்பித்தாலோ -

    ஒன்று - உள்நாட்டில் 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" நடாத்தும் சிறிலங்கா அரசுக்கு அனைத்து போர்-தொடர்புபட்ட உதவிகளையும் செய்வது.

    இரண்டு - அனைத்துலக ரீதியாக, தத்;தமது நாடுகளிலிருக்கும் தமிழ் செயற்பாட்டாளர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை எடுப்பதுடன், வெளிநாட்டுத் தமிழர்களிடமிருந்து புலிகளுக்கு எவ்வித உதவிகளும் போகாமல் தடுப்பது.

    மூன்றாவதும், முக்கியமானதும் - வெளிநாட்டுத் தமிழர்கள் மீது அழுத்தங்கள் போட்டும், உள்நாட்டுத் தமிழர்கள் மீது செல்வாக்குச் செலுத்தியும் - அரசியல் ரீதியாகத் தமிழ் மக்களை விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிப்பது.
    நகர்வு - 5:

    விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் செய்யப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையானது, இரண்டு தரப்பையும் சம பங்காளிகளாக்கி, படைவலுச் சமநிலையைப் பேணுவதற்கு இரு தரப்பிற்கும் இடமளித்திருந்தது.

    ஆனால் - புலிகள் இயக்கம் தமது படை பலத்தைப் பேணுவதற்கு எல்லாவகையான முட்டுக்கட்டைகளையும், எல்லா வழிகளிலும் போட்டுக்கொண்டு, மறு புறத்தில் -

    சிறிலங்காவின் பொருளாதாரத்தையும், அதன் இராணுவ இயந்திரத்தையும் முழுமையாகப் பலப்படுத்தும் காரியங்களை இந்தியாவும், மீதி உலகமும் மும்முரமாகச் செய்தன.

    அதாவது - ஒரு பக்கத்தில், சீர்குலைந்து போயிருந்த சிறிலங்காவின் படைத்துறை, சமரச முயற்சிகள் ஆரம்பித்து மூன்று வருடங்களிலேயே முழுமையாகக் கட்டி எழுப்பப்பட்டுவிட, மறு பக்கத்தில், புலிகளின் ஆயுதக் கப்பல்கள் தொடர்ச்சியாகத் தாக்கி மூழ்கடிக்கப்பட்டன.

    போர்க் களம்:

    முன்னரே போரை எதிர்பார்த்து - அதற்கு முன்னேற்பாடாக இவ்வளவு நகர்வுகளும் மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டு, மிகத் துல்லியமாகச் செயலாக்கப்பட்ட பின்பு -

    உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக - இரண்டு போர்க் களங்களைத் தமிழர்களுக்கு எதிராகத் திறந்தன சிறிலங்காவும், மீதி உலகமும்.

    பி.ஜே.பி-யின் ஆட்சி முடிவுக்கு வந்து, சோனியா அம்மையாரின் காங்கிரஸ் ஆட்சியல் ஏறியது. ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்குப் பின்னர் - நல்ல தருணம் பார்த்துக் காத்திருந்த பின்னர் - ஓரளவுக்கு நேரடியான தலையீட்டை ஆரம்பித்தது இந்தியா.

    பாகிஸ்தானின் மிரட்டல்களுக்கும், அதன் அணு குண்டுக்கும் பயந்ததைவிட, பிரபாகரனின் மனவுறுதிக்கும், அவரது தலைமையில் எழுச்சிகொண்ட தமிழ் தேசியத்திற்கும் பயந்தது காங்கிரசின் இந்தியா.

    இதுவரையும் மேற்குலகம் மேற்கொண்ட நகர்வுகளுக்கு - பின்னாலே இருந்து ஆசிகள் தந்த இந்தியா, இப்போது, சோனியா அம்மையரின் தலைமையில் - மெல்ல மெல்ல - தானே தலைமை ஆட்டக்காரன் ஆகியது.

    பூதாகரமாய் உருவெடுத்த சைனாவை எதிர்கொள்ள வழி தேடிக்கொண்டிருந்த மேற்குலகம், இன்னொரு பூதமாய் வளர்ந்த இந்தியாவோடு - வேறு வழியின்றித் தோள் சேர்ந்தது.

    தமிழர்களுக்கு எதிரான போர்க் களங்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் திறக்கப்பட்ட போது - தென்னாசியாவில், இந்தியாவின் விருப்பமே மேற்குலகின் விருப்பம் ஆனது.

    முதலாவது களம்:

    தமிழீழப் போர்க் களம். அதன் அகன்ற பரிமாணங்கள் பற்றி எனது முதற் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

    அது நேரடி யுத்தம். மிக வெளிப்படையானது. முழுமையாக இராணுவ மயப்பட்டது. புலிகளின் மரபுவழிப் போர்வலுவை நிர்மூலம் செய்து, அவர்களது அரசியல் சக்தியையும் அழிக்கும் இலக்கைக் கொண்டது. மறைமுகக் காரணிகள் என பெரிதாக எதுவும் அற்றது.

    புலிகளைப் 'பயங்கரவாதிகள்" ஆக்கிவிட்டு, "பயங்கரவாதத்திற்கு எதிரான" போர் என்ற பெயரில் - உலகமே பின்னாலே திரண்டு சிறிலங்காவின் படைகளை முன்னாலே தள்ளுகின்றது.

    பணத்தை வழங்கி, ஆயுதங்களை வழங்கி, போரியல் ஆலோசனைகளை வழங்கி, போர்க் கருவிகளையும் அவற்றை இயக்குவதற்கு ஆட்களையும் வழங்கி, வானூர்தி ஒட்டிகளை வழங்கி, புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பற்றிய உளவுத் தகவல்களை வழங்கி, வெளிநாட்டுத் தமிழர்கள் மீது சட்ட அழுத்தங்களைப் போட்டு - எல்லோருமாகப் பின்னாலே திரண்டு சிறிலங்காவின் படைகளை முன்னாலே தள்ளுகின்றனர்.

    அந்த நேரடிப் போர்க் களத்தைப் புலிகள் தான் வெல்ல வேண்டும். ஆனால், அந்தக் களத்தில் அவர்கள் வெல்லுவதற்குத் தேவையான எல்லா உதவிகளையும் எம்மாலான எல்லா வழிகளிலும் நாம் தான் செய்ய வேண்டும். அதனைத் தவிர, அதன் ஆழமான போரியல் விபரங்களில் நாம் கவனம் செலுத்துவதற்குப் பெரிதாக எதுவும் இல்லை.

    அடுத்த களம்:

    அனைத்துலகப் போர்க் களம். தமிழீழத்திற்கு வெளியே திறக்கப்பட்டிருக்கும் இந்தக் களத்தைத் தான் நாம் ஆழமாக - அலகு அலகாகப் பிரித்து - உற்று நோக்க வேண்டும்.

    ஏனெனில் - இது தான் நமக்கான களம். நாம் போராட வேண்டிய களம். நாமே வெல்ல வேண்டிய களம். புலிகளை நம்பியிருக்கத் தேவையில்லாத களம்.

    தமிழர்களது தேசிய சுய நிர்ணய உரிமைக்கு [National Self-Determination] ஒரு சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதும், தமிழர்களுக்கு எனத் தமிழீழத் தனியரசை அமைப்பதுமே எமது அரசியல் இலட்சியம்.

    அந்த இலட்சியத்தை அடைவதற்காகவே விடுதலைப் புலிகள் இயக்கமும் - எமது சார்பில் - ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

    தமிழர்கள் தமது தனியரசுக் கோரிக்கையை சர்வதேச அளவில் முன்னெடுப்பதற்கு முட்டுக்கட்டைகள் போடுவதற்கு நேரடியான எந்த வழியும் இல்லாத நிலையில், இந்த உலகு வேறு மார்க்கத்தைத் தேடியது.

    அது கண்டுபிடித்த ஒரு வழி தான் - புலிகள் இயக்கத்தின் மீது உலகெங்கும் கொண்டுவரப்பட்ட அந்த Cluster-குண்டு பாணியிலான தடை. அந்த தடையின் ஒர் இலக்கு - தமிழர்களால் உலகெங்கும் முன்னெடுக்கப்படும் 'தமிழீழம்" என்ற கோட்பாடு.

    அதே தமிழீழக் கோரிக்கையை முன்வைத்துப் போராடும் விடுதலைப் புலிகளைப் 'பயங்கரவாத" இயக்கம் ஆக்கியதன் மூலமாக -

    தனியரசைக் கோருவதும், சுய நிர்ணய உரிமையை வலியுறுத்துவதும் - அவை நியாயபூர்வமான அபிலாசைகளாக [Legitimate Aspirations] இருந்தாலும் - அதே கோட்பாடுகளை ஒரு 'பயங்கரவாத" இயக்கமும் முன்வைப்பதால் -

    அந்தக் கோட்பாடுகளை முன்னெடுப்பதே ஒரு பயங்கரவாத இயக்கத்தின் கருத்தை முன்வைப்பது போன்றதாகும் எனும் விதமான ஒர் அச்சச் சூழலை வெளிநாட்டுத் தமிழர்கள் மத்தியில் இந்த உலகு உருவாக்கியது.

    அந்த வகையில் - தமிழீழத்தைக் கோருவதும், சுய நிர்ணய உரிமையை வலியுறுத்துவதும், இந்த உலகம் ஏற்றுக்கொள்ள மாட்டாத ஒரு கோட்பாடு என்ற ஒரு கருத்தையும் தமிழர்கள் மத்தியில் உருவாக்கி, அதனை நிராகரித்தது.

    இதன் மூலமாக - தமிழீழம் பற்றிப் பேசினாலே 'பயங்கரவாத"ப் பட்டம் சூட்டப்பட்டு விடுவோம் என்ற பயத்தையும், அந்தப் பட்டம் சூட்டப்பட்டுவிட்டால் வேறு கருத்துக்கள் கூட சொல்ல முடியாமல் நாம் நிராகரிக்கப்பட்டுவிடுவோம் என்ற தயக்கத்தையும் தமது நாட்டுப் பிரஜைகளாக உள்ள தமிழர்கள் மத்தியிலேயே உருவாக்கியது.

    இதன் விளைவாக - தமது சொந்த நாட்டுப் பிரசைகளுக்கே, அவர்கள் தமது உணர்வுகளையும், அபிலாசைகளையும் வெளிப்படுத்துவதற்கும், பேசுவதற்கும் உள்ள சுதந்திரத்திற்கு [Freedom of Speech and Freedom of Expression] அந்தந்த நாட்டு அரசுகளே முட்டுக்கட்டைகளைப் போட்டன.

    இவற்றின் முடிவாக - தமிழர்களுக்காக தமிழர்களுக்குள் நடாத்தப்படும் கூட்டங்களில் தமிழீழம் பற்றியும், புலிகள் இயக்கம் பற்றியும் வானுயரப் புகழும் நாங்கள், அதை உண்மையிலேயே சொல்ல வேண்டிய எங்களது நாட்டு அரசியல் தலைவர்களுடனான சந்திப்புக்களில், எதுவும் சொல்ல முடியாதவர்களாய் வாயடைக்கப்பட்டோம்.

    இவ்வாறான சூழலில் தான் - தமிழீழம் பற்றிப் பேசினால் தமது பேச்ச எடுபடாது என்ற முடிவுக்கு வந்த எமது வெளிநாட்டுத் தமிழ் செயற்பாட்டாளர்கள் தத்தமது நாட்டு அரசுகளை அணுகுவதற்குப் புதிய ஒரு தந்திரோபாயத்தைக் கையிலெடுத்தார்கள்.

    அது என்னவெனில் - எமக்குத் தேவையானதாக இருந்தாலும், மேற்குலகத்திற்குப் பிடிக்காத விடயங்களைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, எமக்கு முக்கியமற்றதாக இருந்தாலும் மேற்குலகத்திற்குப் பிடித்த விடயங்களை மட்டுமே மேற்குலகத்துடன் பேசுவது.

    அதாவது - தமிழ் தேசிய இனப் போராட்டத்தின் நிரந்தர முடிவுக்கான எமது அடிப்படை அரசியல் இலட்சியம் பற்றிப் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, அந்தப் போராட்டத்தின் வழியில் நாம் சந்திக்கும் துன்பங்களைப் பற்றிய தற்காலிக மனிதாபிமானப் பிரச்சனைகளை [Humanitarian Crisis] பற்றி மட்டும் பேசுவது.

    இந்த இடத்தில் தான் -

    தனது ஆறு ஆண்டுகாலம் நீண்ட - பொறுமையான - நுட்பம் மிகுந்த - நகர்வுகளினதும், நடவடிக்கைகளினதும் துல்லியமான வெற்றியை மேற்குலகம் பெற்றது.

    மனிதாபிமானப் பிரச்சனைகளுக்கு உதவி வேண்டி நாம் அதன் காலடியில் விழ வேண்டும் என அது காத்திருந்தது. அப்படி விழுந்து - நாங்கள் அவற்றைச் சார்ந்து இருக்க வேண்டும் என எதிர்பார்த்திருந்தது. அப்படிச் சார்ந்திருந்து - அது சொல்வதையே கேட்கும் ஒரு நிர்ப்பந்த சூழலுக்குள் எம்மைச் சிக்க வைக்க அது விரும்பியிருந்தது.

    அப்படியாக - மனிதாபிமானப் பிரச்சனைகளைப் பற்றி மட்டும் பேசும் முடிவை நாம் எடுத்த போது, தனது விருப்பத்தில் வெற்றி கண்ட மேற்குலகு, எம் மீது ஒரு மாய வலையை விரித்தது.

    எமது கஸ்டங்களைச் சொல்லி நாம் அழும் போது அக்கறையோடு கேட்பது போல நாடகமாடியது. தனக்கு ஏற்கெனவே தெரிந்த விடயங்களையே - நாம் சொல்லும் போது - ஏதோ புதிதாகக் கேட்பது போலப் பாசாங்கு செய்தது.

    நாமும் - 'மேற்குலகிற்குப் பிடித்த விடயங்களைப் பேசும் போது அது அக்கறையோடு கேட்கின்றதே" என்று, அதற்குத் தெரிந்த விடயங்களையே பேசிப் பேசி, கடைசியில் தமிழர்களுக்கு என்ன தேவை என்பதைச் சொல்லுவதை விடுத்துவிட்டு, மேற்குலகத்திற்கு என்ன பிடித்ததோ அதை மட்டுமே பேசப் பழகிக்கொண்டோம்.

    இப்பொழுது -

    முப்பது ஆண்டு காலம் போராடியதன் பின்பு, நூறாயிரம் மக்களை உயிர்ப்பலி கொடுத்த பின்பு, இருபத்தி மூவாயிரம் பேராளிகளது கல்லறையின் மேல் நின்று கொண்டு -

    "தமிழீழத் தனியரசு" பற்றிப் பேசுவதை நாங்கள் தவிர்க்கின்றோம். தமிழரின் சுய நிர்ணய உரிமை பற்றிப் பேசுவதற்கு நாங்கள் தயங்குகின்றோம். "தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே எமது ஏக அரசியல் பிரதிநிதிகள்" என்று வெளிப்படையாகச் சொல்லுவதற்குப் பின்னடிக்கின்றோம்.

    சொல்லப்பட வேண்டிய இவற்றைச் சொல்லி, எமக்கான அங்கீகாரத்தைத் தலைநிமிர்ந்து கோருவதைத் தவிர்த்துவிட்டு - உணவும், உடையும், மருந்தும், போர் நிறுத்தமும் வேண்டி - பிச்சைக்காரர்கள் போல - உலகத்தின் முற்றத்தில் கையேந்தி நிற்கின்றோம்.

    வன்னித் தமிழர்கள் அழிகின்றார்கள், கிழக்குத் தமிழர்கள் படுகொலையாகின்றார்கள், வடக்குத் தமிழர்கள் கடத்தப்படுகின்றார்கள், கொழும்புத் தமிழர்கள் காணாமல் போகின்றார்கள், மலையகத் தமிழர்கள் கைதாகின்றார்கள் என்று உலகத் தமிழர்கள் நாம் புலம்பி அழுகின்றோம்.

    இந்த உலகத்திற்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும் எங்கள் துயரங்களைத் திரும்பவும் சொல்லுவதற்காக - ஊர்வலங்கள் வைத்து, மட்டைகள் பிடித்து, கோசங்கள் எழுப்பி, கடிதங்கள் எழுதி, மனுக்கள் அனுப்பி - எம்மையே நாம் ஏமாற்றுகின்றோம்.

    போராட்டத்துக்கு அடிப்படையான 'தமிழீழம்" என்ற தீர்வை வலியுறுத்துவதை விட்டுவிட்டு, போரை நிறுத்தும்படி மன்றாடுகின்றோம்.

    பிரபாகரனும் அவருடைய போர் வீரர்களும் தலை குனியாது நிகழ்த்தும் கம்பீர யுத்தத்தின் தார்ப்பரியங்களை நாம் கேவலப்படுத்துகின்றோம்.

    ஆனால் - இந்த நாளுக்காகத்தான் இந்த உலகமும், காங்கிரசின் இந்தியாவும் காத்திருந்தன, தமது கடைசி நகர்வை மேற்கொள்வதற்காக.

    அந்தக் கடைசி நகர்வு தான் - புலிகள் இயக்கத்தின் மீது கொண்டுவரப்பட்ட அந்த Cluster-குண்டு பாணியிலான உலகத்-தடையின் கடைசி இலக்கு.

    அது - வெளிநாடுகளில் வாழும் தமிழர்களைப் புலிகளிடமிருந்து பிரிப்பது; உள்நாட்டில் வாழும் தமிழர்களின் மீது போலித் தீர்வு ஒன்றைத் திணிப்பது.

    ஒரு புறம் - மனிதாபிமானப் பிரச்சனைகளைச் சொல்லித் தம்மைத் தேடி வந்த வெளிநாட்டுத் தமிழர்களை, மானிட நேய முகத்தைக் காட்டி மயக்கியது இந்த உலகம்.

    மறு புறம் - 'ஈழத்தமிழர்களைக் காப்பாற்று!” என்று பொங்கியெழுந்த தமிழகத் தமிழர்களை, 'இதோ முகர்ஜியை அனுப்புகின்றோம், மேனன் போயிருக்கின்றார்" என்று கூறியே அடக்கியது இந்தியா.

    இப்போது -

    தமிழர்களின் அவலங்களைத் தீர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு மேற்குலகும், அவர்களை அழிவிலிருந்து காப்பதாகக் கூறிக்கொண்டு இந்தியாவும் காலத்தை இழுத்தடிக்கின்றன.

    கிளிநொச்சியின் வீழ்ச்சிக்காய் காத்திருந்து, ஆனையிறவின் வீழ்ச்சிக்காய் காத்திருந்து - இப்போது, முல்லைத்தீவினதும், புதுக்குடியிருப்பினதும் வீழ்ச்சிக்காய் காத்திருக்கின்றன.

    முப்படைகளையும், நெடுந்தூரப் பீரங்கிகளையும் வைத்திருக்கும் புலிகளின் மரபுவழிப் போர்வலுவை உடைத்து, மீண்டும் அவர்களை ஒரு கெரில்லாப் படையாக காட்டிற்குள் பதுங்க வைக்கும் நம்பிக்கையோடு, சிறிலங்காவுக்கு காலத்தை எடுத்துக் கொடுக்கின்றன.

    அதே நேரத்தில் - இன்னொரு பக்கத்தில் - விடுதலைப் புலிகளோடு இருக்கும் வரை தமிழர்களது துன்பங்கள் எதுவும் நீங்கப் போவதில்லை என்ற சமிக்ஞையை கொடுத்து -

    'புலிகள் அழிந்து போவதைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் பிரச்சனைக்கு நாங்கள் நல்ல தீர்வைப் பெற்றுத் தருகின்றோம், நீங்கள் புலிகளை விட்டு விலகுங்கள்" என்று தமிழர்களுக்குச் சொல்லாமல் சொல்லுகின்றன.

    இந்த அணுகுமுறையோடு -

    முதலாவது, அது சரிவராமல் போனால் அடுத்தது என இரண்டு நோக்கங்களோடு இந்தியாவும் இந்த உலகமும் செயற்படுகின்றன:

    புலிகளிடமிருந்து தமிழர்களையும், தமிழர்களிடமிருந்து புலிகளையும் பிரித்து, விடுதலைப் புலிகளுக்கு உதவிகள் செல்வதைத் தடுப்பது. உதவிகள் போகாமல் நிர்க்கதியாகி நிற்கும் புலிகளை இராணுவ ரீதியில் அழிப்பது. புலிகள் அழிந்த பின் - கேட்பதற்கு யாருமற்ற நிலையில் தமிழர்கள் இருக்கும் போது, பிச்சை போல, தீர்வே இல்லாத ஒரு தீர்வை அவர்கள் மீது திணிப்பது.

    வெளிநாட்டுத் தமிழர்களது நிதியுதவியில் தான் புலிகள் இயக்கம் தங்கியிருக்கின்றது என்பதால், வெளிநாட்டுத் தமிழர்களைக் கபடமாய்க் கவர்ந்து, அவர்கள் மூலமாக புலிகள் இயக்கத்தின் மீது அழுத்தங்களைப் போடுவது. அந்த அழுத்தத்தின் மூலமாக – விடுதலைப் புலிகளைத் தமது வழிக்குக் கொண்டு வந்து, பிச்சை போல, தீர்வே இல்லாத ஒரு தீர்வை ஏற்க வைப்பது.
    இந்த இரண்டு நோக்கங்களில், ஏதாவது ஒன்றை அடையும் எண்ணத்தோடு தான் இந்தியாவும், இந்த உலகமும் இப்போது செயற்படுகின்றன.
    இப்போது -

    உடனடியாக நாம் செய்ய வேண்டியது என்ன என்ற அந்த மிக முக்கியமான கேள்வியை எம்மைப் பார்த்தே நாம் கேட்போம்.

    இந்தியாவில் காங்கிறஸ் ஆட்சி இறங்கினால் என்ன நடக்கும் எனக் காத்திருக்கவோ, அமெரிக்காவில் ஒபாமாவின் ஆட்சி ஏறினால் என்ன நடக்கும் எனக் காத்திருக்கவோ எமக்கு இப்போது நேரம் இல்லை.

    விடுதலைப் புலிகளின் இராணுவ வெற்றிக்காகக் காத்திருக்கவும் எமக்கு இனி நேரம் இல்லை.

    போராட்டத்தை உடனடியாக நாமே கையில் எடுப்போம்.

    சரியான நகர்வுகளை நாம் தெளிவாக மேற்கொண்டால், புலிகளின் போர் வெற்றிக்கே நாம் வழியமைக்கலாம்.

    அல்லது - நாம் காத்திருப்பதைப்போல, புலிகள் இயக்கம் ஒரு மாபெரும் இராணுவ வெற்றியைச் சாதித்தால், அதற்கெதிராக இந்த உலகமும், காங்கிரசின் இந்தியாவும் முன்னரைப் போல குறுக்கே வர முடியாத ஒரு சூழலை உருவாக்கலாம்.

    எப்படி?

    எம் முன்னால் இரண்டு பணிகள் உள்ளன. ஒன்று உடனடியாகச் செய்யப்பட வேண்டியது. அடுத்தது, மிக உடனடியாகச் செய்யப்பட வேண்டியது.

    உடனடியாகச் செய்யப்பட வேண்டியவை என்ன என்ன என்பதை நீங்களும் சிந்தித்து எமக்கு எழுதுங்கள், நானும் சிந்திக்கின்றேன்.

    அவற்றைச் சிந்திக்கின்ற அதே வேளையில், பெரிதாகச் சிந்தனை எதுவும் தேவைப்படாத - மிக உடனடியாகச் செய்;யப்பட வேண்டிய பணியை இப்போதே சொல்லிவிடுகின்றேன்.

    சுருக்கமாகச் செல்வதானால் - உலகெங்கும் இருக்கும் இந்தியத் தூதுவரகங்களைத் தமிழர்கள் உடனடியாக 'முற்றுகை" இட வேண்டும்.

    இங்கே நான் 'முற்றுகை" என்று குறிப்பிடுவது மனிதர்கள் கூடி வளைப்பதை மட்டுமல்ல. எம் எண்ணங்களால், கருத்துக்களால், ஆக்கபூர்வமான செயல்களால் முற்றுகை இட வேண்டும்.

    எமது பிரச்சனையில் இந்தியாவே இப்போது முதன்மையானதும் முக்கியமானதுமான ஆட்டக்காரர்: தமிழர் போராட்டத்தை இந்தியா எதிர்த்தால், முழு மேற்குலகமும் எதிர்க்கும்; இந்தியா அங்கீகரித்தால், முழு மேற்குலகமும் ஆதரிக்கும்.

    தென்னாசியாவில் இன்று இந்தியாவே எல்லாம்: இந்தியாவை மீறி இந்து சமுத்திரத்தின் அலை கூட அசையப் போவதில்லை.

    பாகிஸ்தானோடு பரவசப்பட்டு, சைனாவோடு சல்லாபித்துக் கொண்டிருக்கும் சிறிலங்காவுக்கு, தனது நாட்டின் ஏழு கோடி மக்களினது விருப்பமின்மையையும் மீறி இந்தியா உதவி செய்வது இரண்டு காரணங்களுக்காக -

    ஒன்று - 'எங்கள் நாட்டுப் பிரதமரைக் கொன்றவர்களை நாம் சும்மாவிடுவதா?" என்ற காங்கிரஸ் காரர்களின் அர்த்தமற்ற வரட்டுக் கௌரவம்.

    அடுத்தது - தமிழீழத் தனிநாடு தென்னிந்தியாவில் தனியரசுக் கிளர்ச்சிகளை உருவாக்கும் என்ற அடிப்படையற்ற பயம்.

    தனது தென் கோடியில் ஒரு பெரும் காப்பரனாகவும், என்றும் தளம்பல் அற்ற ஒரு வரலாற்று நண்பனாகவும் இருக்கக்கூடிய ஒரு மக்கள் இனத்தை அழிக்க இந்தியா இன்று முன்னின்று முயல்வதற்கு வேறு எந்த உருப்படியான காரணமும் இல்லை.

    செய்தி:

    முக்கியமான மூன்றே மூன்று விடயங்களை இந்தியாவிடம் நாம் - மீண்டும் மீண்டும் - எல்லா வழிகளிலும் வலியுறுத்த வேண்டும்.

    அந்த மூன்று விடயங்களையும் செய்யுமாறு - கடுமையான அழுத்தங்களைத் தொடர்ச்சியாகப் பிரயோகிக்க வேண்டும்.

    தமிழீழப் போராட்டத்தை அங்கீகரித்து, தனியரசு உருவாக உதவுங்கள்:
    அது தான் இந்தியாவின் பாதுகாப்புக்கும் நிபந்தனையற்ற உத்தரவாதம்.

    தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக அரசியல் பிரதிநிதிகள்:
    வேறு எவரையும் எம் பிரதிநிதிகளாக நாம் எற்றுக்கொள்ளப் போவதில்லை.
    இந்தியாவின் நலன்களுக்கு எதிராகப் புலிகள் எப்போதும் செயற்படவில்லை.
    புலிகள் மீதான தடையை நீக்கி இராஜதந்திரத் தொடர்புகளை எற்படுத்துங்கள்.

    சிறிலங்காவுக்கான போர்-சார் உதவிகளை உடனடியாக நிறுத்துங்கள்:
    கருவிகள், உளவுத் தகவல்கள், ஆளணி, ஆலோசனைகள் என எல்லாவற்றையும்.
    சிறிலங்கா உங்களின் நம்பிக்கையான நண்பனாக எப்போதுமே இருந்ததில்லை.

    செயல் - 1:

    உலகிலுள்ள ஒவ்வொரு இந்தியத் தூதுவரகத்தையும் நாம் அணுக வேண்டும். ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தமிழ் செயற்பாட்டாளர்களும், இளையோர் அமைப்புக்களும் தேர்ந்த பிரதிநிதிகள் குழக்களை [Delegations] உருவாக்கி அந்தந்த நாடுகளிலுள்ள இந்தியத் தூதுவர்களைச் சந்தித்து இந்த மூன்று விடயங்களையும் வற்புறுத்த வேண்டும். இன்றே இதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும்.

    ஒரு தடவையோ, இரு தடவையோ, மூன்று தடவையோ போய்விட்டு விட்டுவிடாமல், தொடர்ச்சியாக - மாதத்தில் இரு தடவையாவது - செல்ல வேண்டும். இந்தியத் தூதுவரகங்கள் மீது அழுத்தங்களை இடைவிடாது போட வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாமும் ஓயப் போவதில்லை என்ற தெளிவை அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.

    தற்போதைய போரை நிறுத்துவது பற்றியும், வன்னி மக்கள் எதிர்கொண்டு நிற்கும் மனிதப் பேரவலத்தைப் பற்றியும், அவர்கள் எதிர்நோக்கியிருக்கும் பெரும் இனப் படுகொலை ஆபத்தைப் பற்றியும் சொல்லுகின்ற அதே வேளையில் -

    இந்த ஒவ்வொரு சந்திப்பினதும் கடைசி 40 வீதமான நேரம், மேற்சொல்லப்பட்ட இந்த மூன்று விடயங்களையும் வலியுறுத்துவதற்கு ஒதுக்கப்பட வேண்டும்.

    இந்த மூன்று விடயங்களயும் நாம் முன்வைக்கும் போது - பல மழுப்பல் கதைகளை இந்திய தூதுவர்களும், அங்குள்ள அதிகாரிகளும் எமக்குச் சொல்லுவார்கள்.

    "சோனியா காந்தி இருக்கும் வரை இவை எதையும் செய்ய முடியாது," "அவர் பழைய கோபத்தில் இருக்கின்றார்," "டெல்லியிலுள்ள காங்கிறஸ் தலைவர்கள் இவற்றுக்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள்," "பிரபாகரன் மீது எல்லோரும் கோபத்தில் இருக்கின்றார்கள்," என்ற விதமாக ஆயிரத்தெட்டுக் கதைகளை அடுக்குவார்கள்.

    "பிரபாகரன் இல்லாமல் போனால் அடுத்ததாக யார் வருவினம்?," "அடுத்த இடத்தில யார் இருக்கினம் என்று?" என்று கேள்விகள் கேட்பார்கள். ஏதோ, பிரபாகரன் இல்லாமல் போனால் தமிழருக்கு விடிவு கிடைத்துவிடும் என்ற எண்ணத்தை எமக்கு ஊட்டுவது போல நடிப்பார்கள்.

    ஆனால், நாங்கள் மயக்கமடையாமல், திடமாகவும், ஒரே சீராகவும் இருந்து, தொடர்ச்சியாக எமது அந்த மூன்று கோரிக்கைகளையும் திரும்பத் திரும்ப வலியுறுத்த வேண்டும்.

    செயல் - 2:

    இந்தியத் தூதுவரகங்களின் முன்னால், இந்த மூன்று விடயங்களையும் வலியுறுத்தி பேரணிகளை தொடர்ந்து நிகழ்த்த ஆரம்பிக்க வேண்டும். இந்த முயற்சியை ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தமிழ் செயற்பாட்டாள்களும், இளையோர் அமைப்புக்களும் மிக உடனடியாக ஒழுங்கமைக்க வேண்டும்.

    ஆகக் குறைந்தது ஆயிரம் பேராவது ஒவ்வொரு தடவையும் அங்கு திரள வேண்டும். பேரணிகளின் முடிவில், தூதுவரையும், தூதுவரக அதிகாரிகளையும் வெளியில் அழைத்து எமது கோரிக்கைகளைக் கையளிக்க வேண்டும். எமது கோரிக்கைகள் நிறைவேறாது விட்டால், நாம் அடங்கிப் போக மாட்டோம் என்பதையும் உணர்த்த வேண்டும்.

    ஆனால், இந்தப் பேரணிகளின் முக்கியத்துவம் இவை அல்ல -

    முக்கியமானது என்னவெனில் - பேரணிகள் ஒழுங்கு செய்வதற்கு ஒதுக்கப்படும் சக்தியின் அதே அளவு, அல்லது அதைவிட அதிகமான அளவு சக்தி வெளிநாட்டு ஊடகங்களை [Foriegn Medias] அந்த நிகழ்வுக்கு வரவைப்பதிலும், அந்தப் பேரணிகள் பற்றிய செய்திகளை வெளியிட வைப்பதிலும் செலவிடப்படவேண்டும்.

    பேரணிகளை வைத்துவிட்டு, சும்மா "புதினத்"திலும், "தமிழ்நெற்"றிலும் மட்டும் "சங்கதி"களைப் "பதிவு" செய்து, படங்களைப் போடுவதில் எந்தப் பலனும் இல்லை.

    அந்தந்த நாடுகளிலுள்ள தமிழர்களது-அல்லாத ஊடகங்களை [Non-Tamil Medias] அங்கு வரவழைக்க வேண்டும். எமது இந்த மூன்று கோரிக்கைகளையும் அவர்களுக்கு விளக்கி - வலியுறுத்தி - அந்த ஊடகங்களை நாம் தெளிவுபடுத்த வேண்டும்.

    பன்னாட்டு ஊடகச் செய்திகள் தான் இந்தியாவின் மீதும், இந்தியத் தூதுவர்கள் மீதும் அழுத்தங்களை அதிகரிக்கும். அதே வெளிநாட்டு ஊடகச் செய்திகள் தான் அந்தந்த நாட்டு அரசுகளின் கவனத்தையும் ஈர்க்கும். ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தை இந்தியாவுக்கும், அந்தந்த நாடுகளுக்கும் ஏற்படுத்தும்.

    எந்த ஒரு மாபெரும் பேரணியின் வெற்றியும், பலனும் - அந்தப் பேரணிக்குப் பன்னாட்டு ஊடகங்களில் கிடைக்கும் இடத்தில் தான் தங்கியுள்ளது.

    செயல் - 3:

    கும்பல் கும்பலாக மின்னஞ்சல்களை அனுப்புவது எந்தப் பலனையும் தராது. அவற்றைத் திறந்து பார்க்கவே மாட்டார்கள். திறக்காமலேயே "குப்பைத் தொட்டி"க்கள் போட்டுவிடுவார்கள்.

    தாள்களில் கடிதங்களை எழுதி இந்தியத் தூதுவரகங்களுக்கு இலட்சக் கணக்கில் நாம் அனுப்ப வேண்டும். இந்த முயற்சியை ஒவ்வொரு நாடுகளிலும் தமிழ் செயற்பாட்டாள்கள், இளையோர் அமைப்புகளது துணையுடன் மிக உடனடியாக ஒழுங்கமைக்க வேண்டும்.

    சோனியா காந்தி அம்மையாருக்கும், மன்மோகன் சிங் ஐயாவுக்கும், அந்தந்த நாடுகளிலுள்ள இந்தியத் தூதுவர்களுக்கும் - சுருக்கமான ஒரு பக்கக் கடிதங்களைத் தனித்தனியாக எழுதி, உறைகளில் இட்டு இலட்சக் கணக்கில் அனுப்ப வேண்டும்.

    அவ்வளவு பிரமாண்டமான தொகையில் வந்து குவியும் கடிதங்களை அவர்கள் திறந்து பார்த்தே ஆக வேண்டும். அவை அவர்களை ஏதோ ஒரு வகையிலான நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கும்.

    முக்கியமாக - அந்தக் கடிதங்கள் எமது இந்த மூன்று கோரிக்கைகளையும் உறுதியாக வலியுறுத்த வேண்டும்: தமிழர்கள் தொடர்பாக இந்திய அரசின் வேறு எந்த அணுகு முறையையோ அல்லது நடவடிக்கையையோ நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனத் தெளிவாகச் சொல்ல வேண்டும்.

    தமிழீழத்தின் பிறப்பே இந்தியாவின் நலன்களையும் பாதுகாக்கக்கூடியது என்பதை ஆதாரபூர்வமாக வலியுறுத்த வேண்டும்.

    கருத்துக்களை இந்த முகவரிக்கு அனுப்பலாம்: t.r.vazhuthi@gmail.com

  11. Anonymous Says:

    தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற ஒருவரின் ஆதங்கத்தையும் ,வழுதி எழுதிய கட்டுரையையும் படித்தேன்.
    இரண்டு விடயங்கள் பற்றிச் சொல்லவேண்டும்.

    முதலாவது தமிழரின் உடனடித்தேவை ,
    வன்னியிலும் மறு பகுதிகளிலும் உள்ள தமிழர்களின் உயிர் ,வாழ்வாதாரம் ,மனிதாபிமான ,மனித உரிமை காப்பாற்றப் பட வேண்டியதும் நிரந்தர போர் நிறுத்தமும் முதல் தேவை.

    இரண்டாவது எந்த காரணுத்துக்காக ஈழத்தமிழரின் போராட்டம் தொடங்கியதோ அந்த இலக்கை அடைவதற்காக அதாவது தமிழர்களின் சுய நிர்ணய உரிமையின் நியாயப் பாட்டை வலியுறுத்தி அதனை அடைவதற்கு செய்ய வேண்டிய செயல் திட்டங்கள்.

    உணவுக்கும் மருந்துக்கும் சலுகைகளுக்காகம் நாங்கள் விடுதலை போராட்டத்தைத் தொடங்கவில்லை.நம்மை நாமே ஆண்டு எமது மொழி இன அடையாளங்களையும் எமது மண்ணையும் காப்பாற்றத் தான் ஒரு லட்சம் தமிழ் பொது மக்களும் இருபத்து ஐயாயிரம் போராளிகளும் உயிரைக் கொடுத்தார்கள்.அதற்காகத்தான் நாங்கள் சொத்துக்களை உடமைகளை இழந்தோம்.
    பணமும் பொருளும் உணவும் வேண்டும் என்பதற்காக நாங்கள் போராட்டம் தொடங்கவில்லை.அதற்காக முப்பது ஆண்டுகள் இவ்வளவு தியாகங்கள் செய்து கஷ்டப் பட்டிருக்கத் தேவையில்லை.
    சிங்களவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டு பேசாமல் அவர்களுக்குத் தாளம் போட்டுக்கொண்டு அடிமைகள் மாதிரி இருந்திருந்தால் உணவும் மருந்தும் கிடைத்திருக்கும்.,
    என்ன, சுதந்திரம் இல்லாமல் சிங்களவரின் காலை நக்கிக் கொண்டு இருக்க வேண்டியிருந்திருக்கும்.
    அத்துடன் தமிழும் தமிழரும் தங்கள் அடையாளத்தை இழந்து கொஞ்சம் கொஞ்சமாக சிங்கள மயமாகிக் கொண்டிருக்க வேண்டி வரும்.
    இந்தப் பாதையைத் தான் டக்ளஸ் தேவானந்தா, கருணா ,சித்தார்த்தன் ஆனந்தசங்கரீ ஆகியோர் தெரிவு செய்து சிங்களவனின் காலை நக்கிக்கொண்டு அவர்களுக்குச் சேவை செய்து கொண்டு இருக்கிறார்கள். .

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails