இலங்கையில் தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஏ.ஆர்.ரகுமான்
Posted On Saturday, 28 February 2009 at at 02:19 by Mikeஇலங்கையில் உள்ள தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என அண்மையில் ஆங்கில சினிமாவின் அதியுயர் விருதான 'ஓஸ்கார்' விருதினை பெற்றுக்கொண்ட இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
'ஓஸ்கார்' விருது வழங்கும் விழாவோ அல்லது இந்த மேடையோ அரசியல் விடயங்களுக்கான இடமல்ல. இருந்த போதும், எந்த உயிரினத்திற்கும் துன்பம் ஏற்படக்கூடாது என்றே நான் விரும்புவது உண்டு.
இலங்கையில் அமைதியான சூழலில் தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என நான் விரும்புகின்றேன்; நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன் என்றார் அவர்.
நன்றி : புதினம், ஏ.ஆர்.ரகுமான்