சிறீலங்கா வான்படையின் யுத்த வானூர்தி சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது
Posted On Friday, 27 February 2009 at at 04:56 by Mikeசிறீலங்கா வான்படைக்கு சொந்தமான மிகையொலி யுத்த வானூர்தி ஒன்று வன்னி வான்பரப்பில் இன்று காலை 11.25 மணியளவில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இவ்வானூர்தி வானில் வெடித்ததை பல பொதுமக்கள் கண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் விடுதலைப்புலிகள் இதுதொடர்பில் உத்தியோகபூர்வமாக எதுவித அறிவித்தலையும் அறிவிக்கவில்லை.
இதேவேளை பாதுகாப்பு ஆய்வாளர்கள் விடுதலைப் புலிகளிடம் விமானத்தை சுட்டுவீழ்த்தக்கூடிய ஆயுதவல்லமை இல்லை எனவும் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
மேலதிக விபரங்கள் விரைவில்....
இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சு விமானம் ஒன்று இன்று முல்லைத்தீவில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக வன்னித்தகவல்கள் தெரிவிக்கின்றன. இற்த விமானம் இலங்கை நேரம் முற்பகல் 11.30 அளவில் இரணைப்பாலைப் பகுதியில் வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே விடுதலைப்புலிகளிடம் விமான எதிர்ப்பு சுடுகலன்கள் இருப்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில்
இன்று இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் மக்கள் மீது இன அழிப்புத் தாக்குதலை மேற்கொண்டு வந்த கிபிர் ரக விமானமே இன்று வெள்ளிக்கிழமை காலை 11.25 மணியளவில் இரணைப்பாலை பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்பு அணியினர் இதனைச் சுட்டு வீழ்த்தியதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.விமானம் வானத்தில் வெடித்துச் சிதறியதை அங்குள்ள மக்கள் நேரில் பார்த்துள்ளனர்.முன்னதாக சிறீலங்கா வான்படையின் விமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் ராடரைவிட்டு மறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
வன்னி வான்பரப்பில் பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடாத்த சென்ற போது காணமல்போயுள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட செய்தி வெளிவந்துள்ளது.
தற்போது சண்டை நடைபெறும் பகுதியிலே இவ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. தற்போது கிடைத்த முக்கிய செய்தி
புதுக்குடியிருப்பை ஆக்கிரமிக்கும் சிறீலங்காவின் நடவடிக்கை பெரும் அழிவுகளைச் சந்தித்துள்ளதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் புதுக்குடியிருப்பை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் சுமார் 1500 வரையான படையினர் கொல்லப்பட்ட நிலையில் நேற்றும் இன்றும் நடைபெற்ற சண்டையில் மேலும் நூற்றுக் கணக்கான படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அத்துடன், சுமார் 15 கிலோ மீற்றர் படையினர் பின் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
எனினும் இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து செய்திகள் எவையும் வெளிவரவில்லை. இதுவேளை, முழுமையான போர் செய்திகள் தணிக்கையில் உள்ள நிலையில் சிறிலங்கா தரப்பில் இருந்தும் இது தொடர்பான தகவல்கள் எவையும் வெளிவரவில்லை.
எனினும் உலங்குவானூர்திகள் களமுனைகளில் அவசரமாக இறங்கி ஏறுவதாகவும், கொழும்பில் அவசர வாகனங்கள் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவருகின்றது.
இதேவேளை, இன்றைய தாக்குதலின் போது சிறிலங்கா வான் படையின் கிபிர் விமானம் ஒன்றும் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பாதுகாப்புத்தரப்பிடம் இருந்து தெளிவான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. மேலதிக தவல்கள் விரைவில்.
உறுதிப்படுத்தப்படவில்லை.
புள்ளிராஜா
புலிகளுக்கு எதிராக விசத்தை கக்கும் தினமலரே புலிகள் விமானத்தை சுட்டு வீழ்தியதாக சிறிதாக செய்தி போட்டுள்ளது. இவனுகள் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே வாழ்கின்ற பரதேசிகள் வேறு எப்படி சொல்வார்கள். இதுக்கு ஒரு குத்தாட்டம் போட்டால் எப்பிடி இருக்கும்
/* உறுதிப்படுத்தப்படவில்லை.
புள்ளிராஜா */
இன்று தமிழர்கள் யாரும் என்றும் போல் நூற்று கணக்கில் கொல்லப்படவில்லையே விமானத்தால் முல்லைதீவு பகுதியில் இதுவெ உறுதி செய்கிறது.
விமானம் வீழ்த்தபட்டதற்காக வரும் சந்தோசத்தை விட தமிழனி சாவு எண்ணிக்கை குறையுமே என்று சிறு ஆறுதலை கொடுக்கிறது.
உலகமே, சிங்கள வெறியர்களிடமிருந்து தமிழ் மக்களை காப்பாற்றுங்கள்.