இனவெறி சிங்களப் படைகள் முடக்கம்: 3 நாட்களில் 900 படையினர் பலி: 2,000-க்கும் அதிகமானோர் காயம்
Posted On Friday, 27 February 2009 at at 11:14 by Mikeமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்கா படையினர் ஆறாவது நாளாக தொடர்ந்து மேற்கொள்ளும் முன்நகர்வுப் படையெடுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகளால் தடுத்து தேக்கமடைய வைக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 900 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர்-கட்டளை-மைய வட்டாரங்களை தெரிவித்துள்ளதாவது:
புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்கா படையினர் கடந்த ஆறு நாட்களாக தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.
இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
சிறிலங்கா படையினரின் 4 டிவிசன் படையினர் பெருமளவிலான சூட்டு வலுக்களை பாவித்து முன்நகர்வுத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் சிறிலங்கா படையினர் தரப்பில் 900 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
நன்றி http://www.tamilwin.com/view.php?2aIWnTe0dFj0q0ecQG7V3b4P9EC4d2g2h3cc2DpY3d436QV3b02ZLu3e