ஈழப்பிரச்சனையில் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகள்: ஸ்டாலின்

உண்மைதான் ஸ்டாலின், எல்லாம் திமுகவின் தலைமையிலே நடக்க வேண்டும் என்று அரசியல் பண்ணுவது என்னதாம், சரி நீங்கள் நடத்துங்கள் இதுவரை நீங்கள் கிழித்தது என்ன, பிரணாப் 150 டாங்கி யோட அனுப்பியது, மேனனை மகிந்தவுக்கு வாழ்த்து சொல்லி விட்டு வந்தது. கட்சி சார்பற்ற உங்கள் தலைமையில் ஒரு அணி அமைவதை விட பழ.நெடுமாறான் ஐயா தலைமையில் அமைவதையே மக்கள் விரும்புகிறார்கள். நீங்கள் முதுகெலும்பு அற்றவர்கள், காங்கிரஸ் என்ற பாம்பாட்டி உங்களை ஆட்டுவிக்கும் வரை உங்களால் எந்த பயனும் தமிழனுக்கு வரப்போவதில்லை.

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி திமுக தலைமையிலான இலங்கை தமிழர் நல உரிமை பேரவை சார்பில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

பேரணியின் முடிவில் பேசிய அமைச்சர் ஸ்டாலின்,

இலங்கை தமிழர்களை காப்பாற்ற வேண்டுமென்பதற்காக இலங்கை தமிழர் நல உரிமை பேரவை அமைக்கப்பட்டது. ஆனால் அரசியல் பிழைப்புக்காக சில கட்சிகளின் தலைவர்கள் தாங்களும் தலைவர்கள் என்று காட்டிக்கொள்வதற்காக சில அநாதை தலைவர்கள், சில அப்பாவி தலைவர்கள் இந்த பிரச்சனையில் அரசியல் நடத்தி கொண்டு இருக்கிறார்கள்.


ஆனால், நம்முடைய தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலும் இலங்கைத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதற்காக நல உரிமை பேரவை சார்பில் பேரணிகள் நடத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.


கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுவதற்காக பாடுபடும் தலைவர்களில் நம் தலைவர் கருணாநிதிதான் முதல் இடத்தில் உள்ளார். சட்டமன்றத்தில் இலங்கை தமிழர்களை காப்பாற்றக்கோரி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம். நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் இலங்கை தமிழர்களை காப்பாற்ற வேண்டுமென்பது பற்றிதான் அதிக நேரம் பேசப்பட்டது. இதில் அனைத்து கட்சிகளுக்கும் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.



1956ம் ஆண்டு அறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் இலங்கை தமிழர்களை காப்பாற்ற வேண்டும்; அவர்களுக்கு தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை முன்மொழிந்தவரே நம் தலைவர் கருணாநிதிதான்.


இலங்கை தமிழர் பிரச்சனை ஏற்பட்ட காலத்திலிருந்து திமுக தான் அதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இந்த கடமையை நாம் இனியும் தொடர்ந்து ஆற்றுவோம். மக்களிடம் இந்த பிரச்சனையை பேரவை மூலமாக எடுத்து செல்வோம். தொடர்ந்து நாம் நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்துவோம் என்றார்.

நன்றி : நக்கீரன்

Posted in |

4 comments:

  1. தமிழ் உதயன் Says: This comment has been removed by the author.
  2. Anonymous Says:

    Hi

    We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

    Please check your blog post link here

    If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

    Sincerely Yours

    Valaipookkal Team

  3. Anonymous Says:

    தயவு செய்து அந்த இளவரசர் இடம் சொல்லுங்கள்...2009 தேர்தலுக்கு பிறகு அவர் பா ஜா க பக்கம் செல்லமால் இருக்க ஈழ விடயத்தை கையில் எடுக்க வேண்டாம் என்று.... இவர் எல்லாம் ஒரு இளவரசர்.... போயா நீயும் உன்னோட அப்பன் சல்ஜாப்பும்... உனக்கு இப்ப ஒன்னும் இல்லை உன்னோட அப்பன் செத்த பிறகு இருக்கு... நீயெல்லாம் ஒரு மனுஷன்???

  4. குப்பன்.யாஹூ Says:

    கலைஞர் இறந்த பிறகு எல்லாரும் அம்மா பின்னால்தான் ஓடி வருவார்கள்.

    குப்பன்_யாஹூ

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails